Thursday, January 19, 2017

உடன் பிறப்பே...



Image may contain: 2 people, people sitting, sunglasses and indoor


அவரால் முடிந்திருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்


"உடன்பிறப்பே


நடந்துகொண்டிருக்கும் காட்சிகளை பார்த்திருப்பாய், புரட்சி என்பதன் அர்த்தம் புரியாமல் பட்டம் சூட்டி புகழபட்ட புருஷோத்தமர்கள், வசந்த சேனைகளின் அடிமை கூட்டம் உண்மையான புரட்சி என்றால் என்ன? என கண்டு கலங்கி நிற்கின்றது


மான தமிழர் கூட்டம், எந்த கடற்கரையில் அண்ணா தலமையில் நாமெல்லாம் இனமானம் காகக் சீறினோமே அங்கே, அண்ணா துயிலொண்டாலும் அவர் சமாதி அருகே சீறி நிற்கின்றாது.


மாநில முதல்வர் மாண்புமிகு பன்னீர்செல்வம் பிரதமரை பார்க்க சென்றிருக்கின்றாராம்


ஒரு கூத்து கண்டாயா?


ஈழப்போராட்டத்திற்கு எத்தனையோ உதவிகளையும், போராட்டங்களையும் நடத்திய நம் கழகத்தை, அவர்களுக்காக ஆட்சி இழந்த நம் கழகத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பு கொலைகாரர்கள், துரோகிகள் என் கூவி மகிழ்ந்தது ஒரு கூட்டம்


பேச தெரியா பேய்கள், கத்த தெரியா காக்கைகள், ஊளையிட தெரியா நரிகள் எல்லாம் நம்மை நோக்கி கத்தின, கரைந்தன.


ஏன்?


நாமெல்லாம் பொங்கி எழுந்து பதவியினை ராஜினாமா செய்ய வேண்டுமாம், பதவி இழக்க வேண்டுமாம், ஈழதமிழரை காக்கும் போர்வையில் பிரபாகரனை காக்க வேண்டுமாம்.


ஈழதமிழரை காக்கும் பொறுப்பு நமக்கு மட்டும் உண்டா? பிரபாகரனுக்கும் உண்டல்லவா?


நாம் காப்பதானால் அவர் எதற்கு? அவர் காப்பதனால் நாம் எதற்கு? எல்லோரும் செல்லுங்கள், நான் கொல்லும் முன் கிளம்புங்கள் என் மக்களை நான் காப்பேன் என நம் உறவினை முறித்தது யார் உடன்பிறப்பே?


ஆயினும் தாய் உள்ளத்தோடு நாம் எடுத்த சமாதான முயற்சிகளை எல்லாம் குழப்பி, ஆயுதத்தை கீழே வைக்கவே மாட்டேன் என போராடி செத்தவர்களை என்ன செய்வாய்?


நாம் யாருக்கு போதிக்கவில்லை??,அன்று நண்பர் எம்ஜிஆருக்கு போதித்தோம், ஒன்றாய் இணைவோம் திராவிடம் காப்போம் என்றோம், கேட்டாரா? கேட்டால் இப்படி ஒரு நிலை தமிழகத்திற்கு வருமா?


மத்திய அரசு வந்து என்ன சிக்கல் என வரவேண்டிய நேரமிது, ஜெயாவினை மருத்துவமனையில் பார்க்க ஓடிவந்த ஆளுநரை, வெங்கய்ய நாயுடுவை இப்பொழுது தமிழகம் போர்க்கோலம் பூண்டபொழுது காணவில்லை


நம்மை தேடி அவர்கள் வரவேண்டிய இடத்தில் அவர்களை தேடி பன்னீர்செலவ்ம் சென்றது யாரை காப்பாற்ற? என்பதை நீயே முடிவு செய்து கோள்வாய், அதாவது அருமை நண்பர் ராமசந்திரன் தவறு இது


அதன் பின் நாம் கோபாலசாமிக்கு போதித்தோம், அவரும் நம்மை மீறி சென்று இன்று முட்டுசந்தில் அழுதுகொண்டிருக்கின்றாராம், கூட்டணி என்றால் முதல் ஆளாக மோடி முன் துண்டுபோட்டு இடம்பிடிக்கும் கோபால்சாமி, இப்பொழுது இமெயில் அனுப்புகின்றானாம், ஏன் டிவிட்டர் கணக்கு இல்லையா?


இந்த விஜயகாந்திற்கு எவ்வளவு சொன்னோம்? கேட்டாரா?, இப்பொழுது அவர் தனிமனிதனாக தலையில் துண்டோடு சாப்பிடுவதை கண்டால் மனம் கனக்கின்றது, இனியாவது அவர் திருந்தட்டும்


அதாவது நம்சொற்டி கேளாமல் அழிந்தவர்கள் ஏராளம் உண்டு, அதில் ஒருவர் பிரபாகரன்


சரி இன்று எல்லோரும் ஏன் தயங்குகின்றார்கள், ஜல்லிகட்டினை நடத்தினால் என்ன?


உச்சநீதிமன்ற தீர்ப்பாம் தயங்குகின்றார்களாம்


இதே உச்சநீதிமன்றம்தான் புலிகள் தடைசெய்யபட்ட இயக்கம், பிரபாகரன் கொலைகுற்றவாளி என தீர்பளித்தது


அதனை நான் மீறி அவர்களை நாம்
ஆதரிக்க வேண்டுமாம்


இவர்கள் மட்டும் உச்சநீதிமன்றத்தை மதிக்கவேண்டுமா, ஆனால் நேருகாலத்திலிருந்தே அரசியல் செய்யும் நான் மீறவேண்டுமாம்


எப்படியெல்லாம் நடிக்கின்றார்கள் பார்த்தாயா? உடன்பிறப்பே


இவர் இன்று அவசரசட்டம் வேண்டும் என ஓடுகின்றார், ஆனால் நான் எங்கு ஓடியிருக்க முடியும் உடன்பிறப்பே


நாடு ஒரு தலைவனை இழந்தது, இந்த ராணுவம் 1500 வீரர்களை இழந்தது, நானோ ரகசிய காப்புசெய்யபட்ட மாநில முதல்வர், நான் யாரிடம் அழமுடியும்?


கணவனையும், தந்தையினையும் இழந்த குடும்பம் ஆட்சியில் இருந்தது, அவர்களுக்கும் கோபம் இருந்தது. அவர்களை சாந்தபடுத்தும்படியோ அல்லது மன்னிப்பு கேட்டோ பிரபாகரன் ஒரு வார்த்தை சொல்லவில்லை


அவன் கேட்காத மன்னிப்பை இந்த கருணாநிதி மட்டும் கேட்க முடியுமா?


ஆனாலும் நம்மால் முடிந்தவரை வலியுறுத்திவிட்டு, ஈழத்து நேரு அன்னல் அமிர்தலிங்கத்துடன் நான் பழகிய காலங்களை நினைத்துவிட்டு, அவரை புலிகள் கொன்ற நிகழ்வினை நினைத்துவிட்டு


அமைதிபடையினை செல்லும்பொழுது நாம் இது ஈழத்தை அழிக்கும் முயற்சி என கண்டித்ததையும், எம்ஜி ராமசந்திரன் ராஜிவோடு சேர்ந்து அதை அனுமதித்ததையும்


விபிசிஙகிற்கு அழுத்தம் கொடுத்து நாம் அதனை திரும்ப பெற்றதையும் பின் அது வந்தபோது வரவேற்க செல்லாதைதையும் நினைத்து கொண்டு


டெசோ என்றொரு இயக்கத்தை வாஜ்பாய், அப்துல்ல்லா என அகில இந்திய தலைவர்களை அழைத்து இனி ஈழதமிழன் மீது கைவைத்தால் இந்தியா எழும்பும் என எச்சரித்ததையும், அதனை மீறி சகோதர தமிழர்களை புலிகள் கொல்ல, என்னை நோக்க்கி இந்திய அளவில் வந்த விமர்சனங்களையும், புலிகள் தொடர்ந்து கொல்ல டெசோ வேதனையுடன் கலைக்கபட்டதையும்..


எப்படியெலலம் இந்த போராட்டத்திற்கு உதவினோ, நம்மை எப்படி எல்ல்லாம் புலிகள் சந்திசிரிக்க வைத்தார்கள், அண்ணாவின் இயக்கமான இதனை எப்படி ராஜிவ் கொலையில் சிக்க வைத்தார்கள்,


இன்னும் கோபால்சாமியினை தூண்டிவிட்டு கழகத்தை எப்படி எல்லாம் வலுவிலக்க வைத்தார்கள் என எண்ணிகொண்டுதான் நம் இதயதெய்வமான அண்ணா சமாதியில் அமர்திருந்தேன்


என் முதிய வயதில் நான் அப்படித்தான் அமரமுடிந்தது, அண்ணா இருந்திருந்தால் எனக்கு இப்படி சிக்கல் வந்திருக்குமா?


நான் என்றும் பதவிக்கும், பகட்டிற்கும் ஆசைபட்டவன் அல்ல, நான் என்ன தனிகட்சி கண்டேனா? அல்லது அண்ணா வீட்டை அபகரித்து கொண்டு, எதிர்த்து யாரும் வராதவாறு வழியினினை அடைத்துகொண்டு பொதுசெயலாளர் ஆனேனா?


அண்ணா மருத்துவமனையில் இருந்தபொழுது யாரும் சந்திக்கமுடியாமல் செய்தேனா? காமராஜர் வரை அண்ணாவினை பார்க்கமுடிந்ததே


அண்ணா விட்டு சென்ற கடமையினை தொடர்ந்தேன், அதனால் அவர் சமாதியில் அழுதேன். நான் என்றும் பதவிக்கும் தலமைக்கும் ஆசைபட்டவன் அல்ல‌


மிசா காலத்தில் காமராஜரிடமே ஆட்சியினை ஒப்படைக்க துணிந்தவன் நான், பதவி என்றுமே என் தலைகீரிடம் அல்ல மாறாக தோள் துண்டு


அப்படி அவர்களும் அவர்களின் அம்மா சமாதியில் வந்து உண்ணாவிரதம் என அமர்ந்தால் என்ன? ஏன் அழுகின்றார்கள்.


ஒன்றிற்கு இரு கல்லறைகள், "இரட்டை" கல்லறைகள் உள்ளதே அவர்களுக்கு? ஏன் மாட்டார்கள்? பதவி ஆசை அப்படி.


நாம் உண்ணாவிரதம் இருந்தபொழுது 8கட்டை 9கட்டை குரலில் விமர்சித்த மரக்கட்டை ஒன்று இப்பொழுது உண்ணாவிரதம் இருக்கின்றதாம்


ஏன் அவர் அண்ணன் காட்டிய வழியில் தற்கொலை அங்கி கட்டி டெல்லியில் பாய்ந்தால் என்ன?


ஆக எனதருமை உடன்பிறப்பே


உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மொத்த தமிழகமே பொங்கி எழும் இந்நேரத்திலும் டெல்லிக்கு போய் மன்றாடுவார்களாம், கெஞ்சுவார்களாம், ஆனால் நாற்காலியினை பிடித்துகொள்வார்களாம்


ஆனால் ஒரு சில காக்கைகள் மட்டும் கத்திகொண்டிருந்த 2009ல் அதே உச்சநீதிமன்றம் குற்றவாளிகள் என சொல்லி தடைசெய்த இயக்கத்தினை ஆதரித்து நாம் மட்டும் ராஜினாமானா செய்யவேண்டுமாம்


நம்மை துரோகிகள், கோழைகள், ஈனர்கள் என்றார்கள், இவர்கள் பெயர் என்ன என்பதை நீனே உணர்த்துகொள்.


இன்று மக்கள் புரட்சி வெடித்திருக்கின்றது, அன்று பெரியாரால் கொளுத்தபட்டு, பின் அண்ணாவல் வளர்க்கபட்ட அந்த பெரும் தீ இன்று அதே மெரினாவில் கொளுந்துவிட்டு எறிகின்றன‌


போராளிகள் மாறி இருக்கலாம், போராடும் மக்கள் மாறியிருக்கலாம்


ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன கண்டாயா?


இதனைத்தான் அண்ணா சொன்னார் "நாங்கள் திராவிட நாட்டு கோரிக்கையினை கைவிடுகின்றோம், ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன"


இதனை நாம் இன்றும் வலியுறுத்துகின்றோம், மாநில சுயாட்சி என்பதில்தான் இத்தேசம் இயங்கிகொண்டிருக்கின்றது


அண்ணா சொன்ன அந்த காரியங்களை முற்றிலுமாக நீக்கி, இம்மாதிரி போராட்டங்கள் இனி வருங்காலத்தில் வரமுடியாதவாறு தடுப்பது மத்திய அரசின் கடமை


டெல்லி வர்க்கம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், அதாவது சீறும் காளையினையே அடக்கும் இனம் இது, இந்தியினை அடக்கியது, மிசாவினை மிரட்டியது என ஏகபட்ட வரலாறு உங்கள் வரலாற்று புத்தகத்தில் உண்டு


அதனை படித்துவிட்டு நல்ல முடிவினை தமிழகத்திற்கு சொல்லுங்கள், இல்லாவிட்டால் நல்ல பாடத்தினை தமிழகம் கற்பிக்கும்


நல்ல மாட்டிற்கு ஒரு சூடு, அடியாத மாடு பணியாது என்பது தமிழக பழமொழி, அது இந்த மாட்டுவிஷயத்தில் மத்திய அரசுக்கும் பொருந்தும்


உடன்பிறப்பே


உச்சநீதிமன்றத்தை மீறமுடியாமல் இவர்கள் படும் பாட்டினை பார்த்தாயா?


ஒரு ஜல்லிகட்டுக்கே மீறமாட்டார்களாம், ஆனால் நாம் உச்சநீதிமன்றம், சர்வதேச தீவிரவாதம் என எல்லாம் கடந்து புலிகளை ஆதரிக்கவேண்டுமாம்?


அப்படிபட்ட இளிச்சவாயனாக நம்மை நினைக்கின்றார்களாம், அவர்களுக்கெல்லாம் விவரம் மிக அதிகமாம்


இதுகாறும் பொறுமை காத்தோம் , கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் தட்டுபாடு இல்லாத இயக்கம் என்பதால் அமைதி காத்தோம்


இனியும் எந்த வீணனாவது நாம் ஈழதுரோகி என சொன்னால் , இந்த நடப்புகளை எல்லாம் சுட்டிகாட்டி அவர்கள் வாயினை அடைக்கும் பணியினை ஏற்பாயாக, இதில் அவர்கள் பேசமுடியுமா?


அக்கடமையினை ஏற்பாய், செயல்படுவாய் உடன்பிறப்பே


வெல்க போராட்டம், எழுக தமிழர், பாய்க காளைகள்


காளைகளை மட்டுமல்ல, தேவைபட்டால் எதனையும் அடக்கி வெல்லும் ஆற்றல் தமிழனுக்கு உண்டு என நீருபிப்போம்....."


இப்பொழுது மட்டும் கலைஞருக்கு முடியுமானால் என்ன செய்வார் தெரியுமா?


அண்ணா சிலைக்கு மாலையிடுகின்றேன் என சொல்லி சென்றுவிட்டு அப்படியே போராட்டகாரர்களை வாழ்த்திவிட்டு வந்திருப்பார், வந்து சொல்லியிருப்பார்


"பன்னீர் என்றாலே வெந்நீராக அந்த கூட்டம் கொதிக்கின்றது என்பதே இந்த ஆட்சியின் தோல்விக்கு எடுத்துகாட்டு


ஒரு கட்சி தன்னில் சிறந்தோரையே முதல்வராக்கும்,


அப்படி அக்கட்சியினரால் ஆக்கபட்ட பன்னீரே இப்படி என்றால், அடுத்தவர் ஆட்சி எப்படியிருக்கும்? எனும் கேள்வியினை உங்களிடமே விட்டுவிடுகின்றேன்"



























No comments:

Post a Comment