Tuesday, January 10, 2017

கச்சகஸ்தான்,வெள்ளை மாளிகை, பைரவா இன்ன பிற...

கச்சகஸ்தானில் வாரக்ணக்காக தூங்கும் கிராம மக்கள் : வினோத செய்தி


இது என்ன வினோதம்? தமிழ்நாடு 60 வருடமாக தூங்குகின்றது. வோட்டுபோட மட்டும் எழும்பும்.


தூக்க கலக்கத்தில் வாக்களித்துவிட்டு மறுபடியும் தூங்கும்





இது அல்லவா பெரும் வினோதம்.





தனது மருமகனை வெள்ளை மாளிகை ஆலோசகராக நியமித்தார் டிரம்ப்


முன்பு கலைஞருக்கு அவரின் மருமகன் முரசொலிமாறன் சகலமுமாக இருந்தார், இன்று ஸ்டாலினுக்கு அவர் மருமகன் பக்கபலம் என்கின்றார்கள்


டிரம்பும் ஒரு திமுக ரசிகர் போலிருக்கின்றது






பொங்கலுக்கு தமிழக திரையரங்குகளுக்கு "கட்டாய விடுமுறை" அளிக்க கூடாதா?


"பைரவா" போன்ற படங்களின் இம்சைகளில் இருந்து பொங்கல் அன்றாவது தமிழகத்தை காப்பாற்ற கூடாதா?


படத்தின் டீசரை பார்த்தாலே தமிழன் பெருமை "பொங்க" தெரிகின்றது






1300 கோடி அளவுக்கு சொத்து குவித்துள்ள மாயாவதியின் சகோதரர்.


அப்படியே மாயாவதி வீட்டு சகோதரி, உடன்பிறவா சகோதரி, வேலைக்காரி என எல்லோர் தகவல்கள், சொத்து தகவல்களை எல்லாம் தெரிந்து வைத்துகொள்வது உபி மக்களுக்கு நல்லது, பின்னாளில் உதவும்


ஒரு தமிழனாக உபி மக்களுக்கு அந்த ஆலோசனையினை மட்டும்தான் அனுபவபூர்வமாக கொடுக்க முடியும்.






சீரமைப்பு நடவடிக்கைகள் தொடரும்: நரேந்திர மோடி


அதாவது வங்கி பக்கம் நிரந்தரமாக குடியேறிவிடுவது பொது மக்களுக்கு நல்லது என மறைமுகமாக சொல்ல வருகின்றார்







தமிழர்களின் கலாசாரத்துக்கு எதிராக மத்திய பா.ஜனதா அரசு செயல்படுகிறது: தா.பாண்டியன்

ஆம் அப்படித்தான் செயல்படுகின்றது

அதிகாரம் இருப்பவள் ராணி, அவளிடம் தோள் துண்டினை கையில் ஏந்தி நிற்பதுதான் தமிழர் பண்பாடு. தா.பாண்டியன் அதனைத்தான் போயஸ் கார்டனில் செய்தார்

இந்த மத்திய அரசு அதனை செய்யாவிட்டால் அது தமிழ்கலாச்சாரத்திற்கு எதிரானது

பின் எப்படி தா.பாண்டியன் பொறுமையாக இருப்பார்?


No comments:

Post a Comment