Monday, January 9, 2017

தத்து எடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகள்

குழந்தைகளை தத்து எடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகள் அமல்..


மண்ணாங்கட்டி, 28 வயதும், 80 கிலோ எடையுள்ள குழந்தையினை தத்தெடுத்து அதற்கு உலக சாதனை திருமணத்தையும் செய்து வைத்த விசித்திரத்தை தமிழகம் எப்பொழுதோ பார்த்துவிட்டது,


28 வயதுள்ள , 80 கிலோ குழந்தையினை எப்படி தத்தெடுக்கலாம்? என மத்திய அரசு கேட்கவே இல்லை.




சேட்டை செய்ததென்று அந்த குழந்தையினை ஓட அடித்தார்கள், அப்பொழுதும் கேட்கவே இல்லை


ஆச்சரியமாக இப்பொழுது அந்த குழந்தையினை காணவே இல்லை, ஒருவேளை அதனை மனதில் கொண்டுதான் மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்குமோ???


இந்த குழந்தைகளை தத்தெடுப்பதை கடுமையாக்குவதை போல் சகோதரிகளை தத்தெடுப்பதினை கடுமையாக்கவும், அந்த சகோதரிகள் தத்தெடுத்தவர் சொத்தினை ஆட்டையினை போடுவதை தடுக்கவும் சட்டம் வேண்டும்.


ஒரு சட்ட விதிமுறையுமின்றி " உடன்பிறவா சகோதரி" என யாரையோ அறிவித்துவிடுகின்றார்கள்.


பின்பு அவர்கள் செய்யும் அட்டகாசம் தாளவில்லை


அப்படி சட்டம் இல்லாததால் ஒரு மாநிலமே நாசமாய் போயிற்று...



No comments:

Post a Comment