Saturday, January 14, 2017

மகளின் தமிழ் திரைப்பட அறிவு

https://youtu.be/IlkvxV1laO8




டிவியில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் ஓடிகொண்டிருந்தன, மகளுக்கு இதெல்லாம் அவ்வளவாக பிடிக்காது, டிஸ்னி டிவி மட்டும்தான் அவளுக்கு பிடித்தது


படம் தொடங்கியதும் விளையாட சென்றாள், அவ்வப்போது வந்து பார்த்து கொண்டாள், மிக அசால்ட்டாக இப்படி கேட்பாள், கேட்டுவிட்டு சென்றுவிடுவாள்


"ஹீரோ வந்தாச்சா?





ஆமாம்மா

ஹீரோயின் வந்துட்டாங்களா?

ஆமாம்மா

லவ் ஆரம்பிச்சிட்டா?

ஆமாம்மா

சரி, சண்டை எல்லாம் முடிஞ்சி கல்யாணம் முடிஞ்ச உடனே என்கிட்ட சொல்லுங்க, ஏன்னா கல்யாணம் முடிஞ்ச உடனே படம் முடிஞ்சிரும், அப்புறமா நான் டிஸ்னி பார்க்கணும் ஓகே யா?

சரிம்மா

சரி, பாருங்க கல்யாணம் முடிஞ்சதும் கூப்பிடுங்கப்பா, நா போறேன்.."

மகளின் தமிழ் திரைப்பட அறிவு இப்படியாக வளர்ந்து கொண்டிருக்கின்றது..








No comments:

Post a Comment