Thursday, January 12, 2017

ஜெயா ஒரு மர்மம், சசிகலா பெரும் மர்மம், இந்த தீபா புது மர்மம்




Image may contain: 1 person, selfie and close-up


வாரிசு இல்லாதவரின் சொத்துக்கள் அவரின் உறவினர்களுக்குத்தான் செல்லும்


உறவினர்கள் வேண்டாம் என்றால் அரசுக்குத்தான் செல்லவேண்டும்


இங்கோ ஜெயா சொத்துக்கள் எல்லாம் சசிகலாவிற்கு செல்கின்றது, இவ்வளவிற்கும் ஜெயா உயில் எழுதவுமில்லை, போயஸ்கார்டன் வீடு கட்சி அலுவலகம் எல்லாம் யாருக்கு? என சொன்னதுமில்லை





பின் எப்படி அது இவர்கள் கைவசம் வந்தது? இது ஒருவகையான ஆக்கிரமிப்பு

தீபா என ஜெயாவின் அண்ணன் மகள் வந்து பரபரப்பு கூட்டுகின்றார், அவரை பலர் வந்து வணங்கி "வழிகாட்ட வா" என கதறுகின்றனர்

சரி இந்த தீபாவாது ஜெயா என் அத்தை, அவருக்கு பின் அத்தையின் வீட்டை சசிகலா என்றொரு தத்தை அபகரித்துகொண்டது என நீதிமன்றம் சென்றால் என்ன?

அப்படி சென்றால் போய்ஸ் வீடு தானாக இவருக்கு வரும், இன்ன பிற சொத்துக்களும் வரும்.

ஆனால் தீபாவிற்கு எல்லா உரிமையும் உண்டு, ஆனால் செய்யவில்லை ஏன்?

அவர் மட்டுமே மிகுந்த உரிமையோடு நீதிமன்ற கதவினை தட்ட முடியும், சட்ட பலம் அவருக்கே உண்டு

நாங்கள் எல்லாம் அம்மா என அழைத்தோம் அதனால் ஆத்தா சொத்து மகனுக்கு என சாதாரண தொண்டன் செல்ல முடியாது.

அவர் தட்டலாம், நீதிமன்ற துணையோடு சசிகலாவினை விரட்டலாம்

அவரோ யாரோ போல ஒதுங்கி நிற்பது மகா மர்மம்.

சரி அத்தை சாவில் மர்மம் உண்டு என்றாவது நீதிமன்ற கதவை தட்டினால் என்ன? செய்யவில்லை

ஜெயா ஒரு மர்மம், சசிகலா பெரும் மர்மம்,

இந்த தீபா புது மர்மம்

ஒருநாளும் அதிமுக மர்மங்கள் தீருவதே இல்லை..





























No comments:

Post a Comment