Wednesday, January 11, 2017

பொங்கல் விடுமுறை சர்ச்சை : அதிமுக 50 எம்பிக்களின் நிலைதான் என்ன?



2


இந்த பொங்கல் விடுமுறை சர்ச்சையில் டெல்லியில் குவிந்திருக்கும் கிட்டதட்ட 50 எம்பிக்களின் நிலை என்ன?


ஏதாவது ஒரு சத்தம் வந்ததா? ஒரு கோரிக்கை?


பொங்கல் என்று அல்ல, மற்ற பிரச்சினைகளில் ஏதாவது உருப்படியாக பேசினார்களா?




பின் எப்படி தமிழகம் உருப்படும்?


இவர்களை டெல்லிக்கு அனுப்பியதற்கு பதிலாக சில .......... அனுப்பியிருக்கலாம்..


அது என்ன கட்சியோ தெரியாது


ஒரு போராட்டம் நடத்தாது, தமிழகத்திற்காக ஒரு துரும்பையும் கிள்ளிபோடாது, அதனால் தமிழகத்திற்கு ஒரு நன்மையும் ஒரு காலமும் கிடைத்ததே இல்லை


வாய் திறந்து யாருமே பேசமாட்டார்கள், ஓங்கி குரல் கூட எழுப்பமாட்டார்கள்


ராமசந்திரன், ஜெயா என முன்னோடிகளும் அப்படித்தான்


சசிகலா, பன்னீர் என இன்றைய ஊமைகளும் அப்படித்தான்


உணர்ச்சியான ஒரு வார்த்தை, உணர்வூட்டும் ஒரு போராட்டம் கூட அது நடத்தாது


அட மக்களை கூட சந்திக்க்காது, பத்திரிகையாளர்களை கூட மதிக்காத கட்சி அது.


கிட்டதட்ட ஜனநாயகத்திற்கும், மக்கள் பணிக்கும் அறவே பொருந்தா கட்சி அது.


கட்சிக்காரர்கள், பொதுமக்கள் என யார் குரலுக்கும் அது செவிமடுக்காது, ஒருவித அரச மனப்பான்மையிலே அதன் மேலிடம் இருக்கும்


கொள்கையோ, கோட்பாடோ , லட்சியமோ அல்லது சிந்தனையோ ஏதுமில்லா கட்சி அது.


கற்றவர்கள் என்றோ, சிந்தனையாளர் என்றோ, நல்லவர் என்றோ குறைந்த பட்சம் மானமுள்ளவர் என்றோ ஒருவர் கூட இல்லாத கட்சி அது


கட்சியில் இருக்கும் ஒருவருக்கும் உருப்படியாக ஒன்றும் பேச கூட தெரியாது.


எதனை பற்றி பேசினாலும் கல்லுளி மங்கன் போல அப்படியே இருப்பார்கள், அல்லது வாழ்க சொல்லிகொண்டே இருப்பார்கள், இந்த ரெக்கார்ட் வாய்ஸினை சொல்ல ஒரு ரெக்கார்டர் போதாதா? இவர்கள் எதற்கு?


மானம் , அறிவு எங்களுக்கு சுத்தமாக இல்லை என்பதை இரு விரலை உயர்த்தி காட்டிகொண்டே இருக்கும் கூட்டமது.


சுருக்கமாக சொன்னால் சுருட்டி , இதெல்லாம் ஒரு கட்சி என மூலையில் வீசவேண்டிய கட்சி அது. அதன் தன்மை அப்படியானது


ஆனால் தேர்தலில் மட்டும் வெற்றி பெறும். அதுவும் பெரும் வெற்றி பெறும்


இந்த மர்மம்தான் இன்றளவும் புரியவில்லை, எப்படி? எதனால்? என ஒரு மண்ணும் புரியாது.


உலக அரங்கில் பாகிஸ்தானும், இந்திய அளவில் அதிமுகவும் இன்றளவும் புரியாத புதிர்கள்...


சத்தியமாக புரியாது.


















தமிழக பா.ஜ.க அழுத்தம் காரணமாகவே பொங்கல் பண்டிகையை விடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது: தமிழிசை


இதற்குமுன் தமிழகத்தில் பொங்கல் விடுமுறையாக கொண்டாடபட்டதே இல்லை என்பதை நினைத்துகொள்ளுங்கள்


சரி அக்கா, அப்படியே இன்னும் அழுத்தி, நன்றாக அழுத்தி காவேரியினையும், இன்னும் மிதித்து அழுத்தி ஜல்லிகட்டையும் கொண்டு வந்துவிடுங்கள் பார்க்கலாம்




உங்களால் முடியவில்லை என்றால் எல்லோரும் சேர்ந்து அழுத்தலாம் சரியா?


ஒரு உப்பு பெறா விஷயத்திற்கு இவ்வளவு விளம்பரமா?













"இனி அதிமுக எனும் கட்சி 2 (நடராஜனுக்கும் எனக்கும்...) பேருக்காக மட்டும் நடத்தபடும்.."






Image may contain: 1 person


































No comments:

Post a Comment