Friday, January 20, 2017

வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்!



No automatic alt text available.


ஜல்லிகட்டிற்காக ஏராளமானோர் கட்சி பாகுபாடின்றி தங்கள் முகநூல்படத்தினை மாற்றி இருக்கின்றார்கள்


அது பாராட்டபட வேண்டிய விஷயம் , ஆனால் ஒரு விஷயம் கவனிக்கதக்கது


கலைஞரை மிக கடுமையாக விமர்சித்தவன் எல்லாம் முரசொலியில் அவர் இலச்சினையாக வைத்திருந்த ஜல்லிகட்டு படத்தினை, அதாவது "வீழ்வது நாமானாலும் வாழ்வது தமிழாகட்டும்" என்ற வசனத்துடன் கூடிய ஜல்லிகட்டு படத்தினை வைத்திருக்கின்றார்கள்


பெரும் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஏன் கொலைவெறி தாக்குதலுக்கும் இடையில் முரொசொலி பத்திரிகையினை கலைஞர் கிட்டதட்ட 74 வருடங்களுக்கு முன்பு தொடங்கி நடத்தினார்


அதனால் அவர் பட்ட அடிகள் கூட உண்டு, மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் உண்டு.


வாழ்வா? சாவா? எனும் மரண போராட்டத்தில்தான் மிக துணிச்சலாக அவர் எழுதினார்.


அந்த நேரத்தில்தான் அந்த இலச்சினை சூட்டபட்டது, அதாவது ஜல்லிகட்டில் காளையினை அடக்கும் வீரமுள்ளவன் தமிழன் என அர்த்தமாக வைக்கபட்டது


அதாவது தமிழகம் என்றுமே ஒரு போராட்ட களமாகவே இருக்கும், போராடாமல் எந்த உரிமையும் இங்கு கிடைக்காது என்பதை உணர்ந்து அர்த்தமாக செய்திருக்கின்றார்


இன்று தமிழர் எல்லாம் அதனை உயர்த்தி பிடிக்கின்றனர்


அவர் பேசமுடியா நிலைக்கு சென்றாலும் கிட்டதட்ட 73 ஆண்டுகளுக்கு முன்பே அவர் உருவாக்கிய படம் நமக்கெல்லாம் இன்று தேவைபடுகின்றது


ஆக கலைஞரும் அவரின் உழைப்பும் என்றைக்கும் தமிழகத்திற்கு தேவை என்பது எவ்வளவு அழகாக தெரிகின்றது


கவனியுங்கள், அந்த கலைஞர் கொடுத்த அடையாளம் இன்று தேவைபடுகின்றதே ஒழிய, எம்ஜிஆர் உயர்த்திய டாய்டெல் சிம்பல் யாருக்கு தேவை?


ஜெயா காட்டிய ஒற்றை விரல் அடையாளம் யாருக்கு தேவை?


கலைஞர் நமக்கு ஜல்லிகட்டு இலச்சினையினை உருவாக்கினார், வைத்து போராடுகின்றோம்.


எம்ஜிஆர் காஷ்மீர் தொப்பி தந்தார், ஜெயா கோர்ட் தந்தார், சசிகலா ஒரு வித கொண்டை அடையாளம் தமிழகத்திற்கு தந்திருக்கின்றார், அதனை வைத்து என்ன செய்ய?


இன்று ஆச்சரியமாக அதிமுகவினரும் கலைஞரின் முரசொலி இலச்சினையினை தயக்கமே இன்றி பிடித்துகொண்டிருக்கின்றனர் , அப்படியாவது மானம் பெறட்டும் அடிமை வம்சம்


போராடாமல் இந்தியாவில் வாழமுடியாது என்பதை கணித்து ஜல்லிகட்டு அடையாளத்தை வசனத்தோடு கொடுத்த கலைஞரின் உழைப்பு, தமிழரின் அடிமடியிலே கைவைக்கும்பொழுது தேவைபடுகின்றது


இதனால்தான் சொல்வது நாம் திமுக அல்ல, ஆனால் இந்தநாட்டின் சில அணுகுமுறைக்கு அவர் கட்டாயம் தேவை, அவரை விட்டுவிட முடியாது.


ஜல்லிகட்டு தடையில் அது அவ்வளவு உறுதியாக தெரிகின்றது.


அம்மனிதனை பார்க்கவேண்டும் போலிருக்கின்றது. எங்கே அய்யா இருக்கின்றீர் நீர்?,


கை கொடுக்கவேண்டும் போலிருக்கின்றது



























No comments:

Post a Comment