Sunday, January 22, 2017

அலங்காநல்லூரில் முதல்வரை விரட்டிவிட்டு விட்டார்களாம்!!!

அலங்காநல்லூரில் முதல்வரை விரட்டிவிட்டு விட்டார்களாம்.


ஆக ஜல்லிகட்டு அரசியல் விளையாட்டாக திசை திருப்பிவிடபட்ட மர்மம் புரிகின்றது


நிரந்தர தடை நீக்கம் வேண்டும் என்பவர்கள், உச்ச நீதிமன்றம் நிரத்தர தடை என சொன்னபின்பு அல்லவா போராட வந்திருக்கவேண்டும்


என்ன சொன்னார்கள்? அரசு ஏதேனும் செய்து விளையாட விடவேண்டும் என போர்கொடி தூக்கபட்டது, அதன்படி அரசுகள் இறங்கி வந்தன‌


இப்பொழுது நிரந்தர தடை நீக்கம் என திசை மாற்றுகின்றார்கள், இது இவ்வளவு பெரும் எழுச்சிக்கு பின் நிரந்தர தடை நீக்கமாகவே மாறும் என்ற அடிப்படை சட்ட சிந்தனை கூட இல்லை


ஆக நடக்கும் காட்சிகள் பலவற்றை சிந்திக்க வைக்கின்றன, கதை வேறு எங்கோ சுற்றுகின்றது


பன்னீர் அரசு ஜல்லிகட்டு விஷயத்தில் மக்களிடம் நல்ல பெயர் பெற்றுவிட கூடாது எனும் அம்புகள் ஏவபடுகின்றன, அவர் சிக்கிகொண்டிருக்கின்றார்.


அலங்காநல்லுர் மக்கள் மிக பெரும் தவறான முன்னுதாரத்தினை தொடங்கிவிட்டார்கள், தமிழகம் முழுக்க அவர்களுக்கு ஆதரவாக கிளம்பிய குரல்களை அசட்டை செய்து, அவர்களின் ஆதரவாளர்கள் முகத்தில் கரி பூசுகின்றார்கள்


ஆக இதில் யாருக்கு மகிழ்ச்சி என்றால்


தீபா பெயர் அடங்கி போனதில் சசிகலாவிற்கு மகிழ்ச்சி, ஓரளவு வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இருந்த பன்னிர் செல்வம் இப்பொழுது சிக்கிகொண்டிருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி


பைரவா படம் தோல்வி மறைந்ததை கூட்டத்தில் கலந்து மறைத்த விஜய்க்கு மகிழ்ச்சி


அவசர சட்டமாவாது கிடைத்ததே என்பதில் சில இடங்களில் விளையாடும் ஜல்லிகட்டுமக்களுக்கு மகிழ்ச்சி


ஆக சசிகலா, விஜய், அவசர சட்ட ஆதரவாளர்ளுக்கு மகிழ்ச்சி


தீபா கோஷ்டிக்கு பெரும் ஏமாற்றம்.


பிளீஸ் ஒரு ஓரமாக எங்களையும் கத்த விடுங்கள் என நின்ற ஸ்டாலின், சீமான் போன்ற கோஷ்டிகளுக்கு மிகுந்த ஏமாற்றம், ஆனால் இப்பொழுது நிரந்தர நீக்கம் என திசைதிருப்பமுடியாதா? என ஒரு ஏக்கம்


அலங்காநல்லூர் மக்கள் செய்திருப்பது எப்படிபட்ட தவறு என பின்னாளில் அவர்கள் உணர்வார்கள், இது ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌


கிடைத்த ஆதரவினையும், கிடைத்த நம்பிக்கையினையும், இறங்கி வந்த அரசினையும் வைத்து காரியம் சாதிப்பதே நல்லதே அன்றி, வீண் பிடிவாதமும் வறட்டு சித்தாந்தமும் ஏதும் நன்மை பயக்காது


கூர்ந்து கவனித்தால் மக்கள் எழுச்சி பெறவேண்டும் என்று அரசு அமைதி காத்திருப்பது தெரிகின்றது, ஆனால் எழுச்சி எதிர்பாரா பேரெழுச்சி என்பதில் அது திகைக்கின்றது, நிலமை கை மீறி சென்றுவிட்டது


ஒரு படியினை அசால்ட்டாக தாண்டிய பன்னீர் அடுத்த வகையில் சிக்குகின்றார்,ஏதும் தவறான முன்னுதாரணமாகிவிட கூடாது, அது பல இனம் வாழும் நாட்டில் சரிவராது என இனி மத்திய அரசும் யோசிக்கும்


வேறு வகையான சிக்கலுக்கு இழுத்து செல்கின்றார்கள்


இதுவரை நடந்தது நன்றாக நடந்தது, இனி நடக்கபொவது ஏதும் நன்றாக இருப்பதாக தெரியவில்லை


ஆக ஜல்லிகட்டு எனும் விளையாட்டினை வைத்து ஆளாளுக்கு பெரும் அரசியல் சதுரங்கம் ஆடிகொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது


இனி நிலமை இப்படி மாறலாம்


பன்னீர் சரியில்லை அவர் பதவி விலகட்டும் இன்னொருவர் வரட்டும் என எங்காவது குரல் எழும்பினால் அதன் பின் சசிகலா கும்பல் சிரிக்கின்றது என பொருள்


பன்னீர் வென்றெடுப்பார் நாங்கள் துணை நிற்கின்றோம் என மத்திய அரசு களமிறங்கினால் அங்கு பிஜேபி கும்பல் சிரிக்கின்றது என பொருள்


ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் மறு தேர்தல் நடக்கட்டும், முடிந்தால் அவர்கள் திரும்ப வரட்டும் பார்க்கலாம், பீட்டாவினை தமிழகத்தை விட்டே விரட்டுவோம், என தமிழகம் கிளம்பினால் மட்டுமே தமிழகத்தில் உண்மை புரட்சி ஏற்பட்டிருக்கின்றது என பொருள்


நிரந்தர நீக்கம் கொடுக்கமுடியாத அரசு நிரந்தரமாக நீங்கட்டும் என் கோஷங்கள் எழும்பினால்தான் இது உண்மையான புரட்சி


ஆக குறுகிய காலம் விளையாடவேண்டிய ஜல்லிகட்டு பெரும் சகுனி மூளையுடன் ஆடவேண்டிய சதுரங்கமாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை


ஒன்றின் தொடக்கம் அல்ல, அதன் முடிவே கவனிக்கதக்கது என்பது புகழ்பெற்ற யூதமொழி


அப்படி நன்றாக தொடங்கிவிட்டதை எப்படி முடிக்கபோகின்றோம் என்பதைத்தான் தமிழகம் பார்க்க போகின்றது.


பன்னீரை ஓட விரட்ட முயற்சிக்கின்றார்களே ஒழிய, இந்த அரசே வேண்டாம் என்ற குரல் எங்காவது கேட்கின்றதா? நியாயபடி அதுதான் கேட்க வேண்டும், ஆனால் கேட்கவில்லை


எப்படி? அதுதான் மகா மர்மம்.


நிரந்த தர தடை விலக்கா தமிழக‌ அரசு நிரந்தரமாக நீங்கட்டும் என்றுதானே சொல்லவேண்டும்? ஒரு பயலும் சொல்லமாட்டேன் என்கின்றான் ஏன்?


இதில் வைகோ விமான நிலையத்தில் பேட்டி கொடுக்கபோவதாக அண்மை செய்தி சொல்கின்றது


இடிந்துவிழும் கூரைக்கு அடியில் நின்று அவர் பேட்டி கொடுக்கட்டும், எத்தனையோ முறை இடியும் கூரை அப்பொழுதும் இடிந்து விழாதா?, நிச்சயம் இடிந்து விழும் என நம்புகின்றோம்..


நம்பிக்கைதானே வாழ்க்கை.

No comments:

Post a Comment