Tuesday, January 17, 2017

பச்சை தமிழனின் ஆட்சியிலுமா தமிழன் கலை பறிபோவது?




Image may contain: sky, ocean, cloud, outdoor, water and nature


11 வகையான கடற்கலன்களை கொண்டிருந்தான் தமிழன்.


மிதவை, தெப்பம், புனை, கட்டுமரம், ஓடம், வங்கம் என அது 11 வகையாக இருந்திருக்கின்றது என்கிறது சங்க இலங்கியங்கள்


தமிழனின் வங்கம் எனும் கலன் ஓடியதாலே அது வங்ககடல் என பெயரே பெற்றது. அப்படி ஒரு வரலாறு தமிழனுக்கு இருந்தது.





சுமார் 2500 டன் வரை அசால்டாக சுமந்து செல்லும் பாய்மர கப்பல்கள் அவனுக்கு இருந்தன, பருத்தி துணியினை புளியங்கொட்டை மாவில் ஊறவைத்து மிக கடினமான துணியாக்கி அதனை பாய்மரகப்பலின் பாயாக்கி அசத்தினான் தமிழன்

கடல் நீரோட்டமும், கடல் காற்று திசையினையும் அவன் விரல்நுனியில் வைத்து கீழகடல் மட்டுமல்ல, அரபிகடலையும் ஆண்டுகொண்டிருந்தான்.

எதிர்காற்றிலும் பயணிக்கும் நுட்பம் அவனிடம் இருந்திருக்கின்றது, கடல் நீரோட்டத்தில் கலனை செலுத்தி மிக விரைவாக கரைகடக்கும் உத்தி அவனுக்கு தெரிந்திருக்கின்றது.

தமிழரின் கடற்பயண நுட்பத்தை உள்வாங்கியே கிரேக்கர், ரோமர் எல்லாம் கப்பல் கட்ட ஆரம்பித்து வெற்றி ரோமானியருக்கே கிடைத்தது, பின் அது ஐரோப்பா எங்கும் பரவியது

அப்படி பெற்று இந்தியா வந்தவன் வாஸ்கோடகாமா, பின் வெள்ளையர்கள்

இந்த கடற்கலன் கட்டும் நுட்பம் தமிழரிடம் கிபி 1600 வரை இருந்திருக்கின்றது, அப்பொழுதும் தமிழனின் வங்ககடல் பயணமும் வியாபாரமும் செழிப்பாகத்தான் இருந்திருகின்றன‌.

நாயக்க மன்னர்களின் ஆட்சியில் கூட தமிழன் ஓடம் ஓடிகொண்டுதான் இருந்திருக்கின்றது, செட்டியார்கள் கடல்வாணிகம் செய்துகொண்டுதான் இருந்திருக்கின்றார்கள்.

வெள்ளையன் வந்தபின் சிக்கல் ஆரம்பித்தது, அவன் போட்ட முதல் சட்டமே "மாலுமிகள் தடை சட்டம்"

வெள்ளையன் கப்பலை திரும்பியே பார்க்காமல், தமிழரே கப்பல் செய்து தன் போக்கில் வியாபாரம் செய்துகொண்டே இருந்திருக்கின்றார்கள்..

அதாவது தமிழக கப்பல்கள் ஓடும் கடலில் வெள்ளையன் கப்பலுக்கு எல்ல லாபம் இருக்கும்? எனும் கணக்கு.

தமிழன் கப்பல் ஓட்டிய கடலில் இனி வெள்ளையன் மட்டுமே கப்பல் விடுவான் எனும் சட்டம், தமிழன் கப்பல் செய்ய கூடாது எனும் சட்டம்.

அச்சட்டத்தினை அன்றைய தமிழகம் எதிர்க்கவில்லை, விளைவு என்னாயிற்று?

கப்பல் கட்டும் தொழில்நுட்பம் தமிழகத்தில் மறைந்தே விட்டது, அதாவது ஒரு குறிப்பிட்ட சாதியின் தொழிலாக அது இருந்திருகின்றது, இன்று அந்த அடையாளமே இல்லை

இன்றுள்ள தமிழன் எவனுக்காவது அந்த கலை தெரியுமா? சுத்தமாக அழிந்தே விட்டது..

அதாவது அன்று நாம் அடிமைகள், வெள்ளையனின் சர்வாதிகார ஆட்சியில் நமக்கு உரிமை இல்லை

இன்றோ ஜனநாயக நாடு, நம்மால் தேர்ந்தெடுக்கபட்ட முதல்வரும் பிரதமருமே உள்ளார்கள், நமக்கு உரிமைகளே பெறவே நீதிமன்றங்கள்

ஆனால் கப்பல் கலையினை தமிழன் மறந்தது போலவே காளை வளர்ப்பு கலையினையும் கைவிட அழுத்தம் கொடுக்கும் காலமிது

மாநில அரசே இதற்கு பொறுப்பு, கவனியுங்கள்

ஜிஎஸ்டி எனும் வரியினை கூட மாநில அரசுகளை மீறி மத்திய அரசால் செயல்படுத்தமுடியவில்லை, அது தடுமாறுகின்றது. காரணம் மாநில சுயாட்சி எனும் பாதுகாப்பு அப்படி இருக்கின்றது

மத்திய அரசின் வரி வருவாயினையே கட்டுபடுத்தும்ம் மாநிலம் ஜல்லிகட்டினை நடத்த முடியாதா?

நிச்சயம் செய்யலாம்

ஆனால் ஏதோ அரசியல் சதி நடக்கின்றது, சர்வ நிச்சயமாக அரசியல் சதி

அச்சதியில் தமிழனின் கப்பல் கலை காணாமல் போனது போல தமிழனின் காளை கலையும் போகாமல் இருக்கட்டும்

அன்றாவது அன்னியன் ஆட்சி எல்லாம் நாசமானது, இன்று பச்சை தமிழனின் ஆட்சியிலுமா தமிழன் கலை பறிபோவது?







No comments:

Post a Comment