Wednesday, January 18, 2017

பல புகழ்பெற்ற கூட்டங்களை கண்ட சென்னை மெரீனா கடற்கரை ...




Image may contain: 6 people, crowd and outdoor


சென்னை மெரீனா கடற்கரை பல புகழ்பெற்ற கூட்டங்களை கண்டது.


காந்திமுதல் பாரதியார் வரை எத்தனையோ பெரும் தலைவர்கள் முழக்கமிட்ட இடம் அது.


சீரணி அரங்கத்திலிருந்து கிளம்பிய அண்ணாவின் எழுச்சி உரையும், பல முழங்கங்களும் தமிழக வரலாற்றை மாற்றின‌





அந்த சீரணி அரங்கம் தற்போது இல்லை,

எந்த கடற்கரையில் நியாயம் கேட்டபடி இருந்த கண்ணகி சிலை இடிக்கபட்டதோ அங்கே இருந்துதான் தமிழகத்தின் உரிமைகுரல் எழுப்பபடுகின்றது

ஆனால் இந்த சின்னங்களை ஆணவத்தோடு இடித்து தள்ளிய ஜெயாவின் சமாதி அங்கேதான் இருக்கின்றது.

எத்தனையோ பேர் மன்றாடியும் அந்த சின்னங்களை உடைத்த ஜெயலலிதா அந்த சின்னங்கள் அருகே புதைந்து போனார்.

அது வெறும் சமாதி அல்ல, பெரும் ஆணவம் அடங்கிய இடம்.

வரலாறுகள் மாறாது, மறுபடி திரும்புகின்றது

அதே சென்னை மெரீனாவின் கூட்டத்தில் ஆட்சிபீடம் அஞ்சுகின்றது

தன் கட்சி தமிழரின் உரிமையினை காக்க தவறவிட்டதை பார்த்து, அக்கூட்டம் தெரிவிக்கும் கண்டனத்தில் எப்படித்தான் எம்ஜிஆரும், ஜெயாவும் அங்கே உறங்குகின்றார்களோ தெரியவில்லை.

அவ்வளவு விமர்சனங்கள் வீசபடுகின்றன..

இந்நேரம் எழுந்து கடலுக்கு சென்றிருப்பார்கள்..

அந்த கூட்டத்தின் அப்பக்கம் விவேகானந்தர் இல்லம்

முன்பு ஒருமுறை சொன்னார் விவேகானந்தர், இந்தியாவினை உயர்த்தும் ஒளி தமிழகத்தில்தான் உருவாகும்.

இதோ அவர் இல்லத்தின் முன்பாகவே அந்த வெளிச்சம் தெரிகின்றது.

அது பரவட்டும்

எப்படியோ தமிழனுக்கு யாராலும் கொடுக்கமுடியாத‌ மான உணர்ச்சியினை மாடு கொடுத்திருக்கின்றது.

மாடு மூலமாக தென்னாடு உடைய சிவன் கொடுத்திருக்கின்றான் என எண்ணிகொள்வோம்.

சினிமாவால் சீரழிந்த தமிழன், மாடால் மானம் அடைந்தான் தமிழன் என்பதை வரலாறு எழுதட்டும், போராட்டம் வெல்லட்டும்







No comments:

Post a Comment