Thursday, January 12, 2017

பொங்கும் தலைவர்கள் ..








ஏப்ரலில் சரக்கு - சேவை வரி மசோதா அமல்படுத்தப்படும் - ஜேட்லி


அதேதான், மூன்றுமாதத்திற்கு ஒருமுறை மக்கள் முதுகில் அடித்துகொண்டே இருக்கவேண்டும் என்பது ஆட்சி கொள்கை


அதுவும் மக்கள் சுதாரிக்கும் முன்பு அடிக்க வேண்டும், கொஞ்சம் பணம் மக்கள் கையில் புழங்க ஆரம்பித்தால், வரி என சொல்லி பிடிக்க வேண்டும்.





ஒரு பைசா மக்கள் கையில் இருந்துவிட கூடாது..

இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ..





என்னை முகநூலில் விமர்சிப்பது வ‌ருத்தமாக உள்ளது : வளர்மதி


ஆனானபட்ட மோடி முதல் டிரம்ப் வரை இங்கே கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது இந்த குட்டியம்மாவிற்கு எவ்வளவு மன உளைச்சல்.


இவர் பாடநூல் கழக தலைவராக நியமிக்கபட்டதை ஏதோ முகநூல் தலைவராக நியக்கபட்டது போல நினைத்துகொண்டு தவறாக முகநூல் பக்கம் வந்திருப்பார் போல...





புதிதாக வந்தால் அப்படித்தான்.





என்ன இருந்தாலும், எப்படி எல்லாம் உளறி கொட்டினாலும் தமிழ்நாட்டின் தமிழ் தலைவர்கள் விழிப்பே விழிப்பு


பொங்கலுக்கு சிங்கப்பூரில் விடுமுறை, சீனாவில் விடுமுறை, அண்டார்ட்டிக்காவில் விடுமுறை , இந்தியாவில் இல்லையா என குதித்தார்கள் சீமான் உட்பட‌


ஆனால் மிக அழகாக இலங்கையில் பொங்கலுக்கு தேசிய விடுமுறை என்பதை மறைக்கின்றார்கள்





ஏன்?

அப்படி சொன்னால் இலங்கை அங்கு பொங்கலுக்கு தமிழர்களுக்கு விடுமுறை எல்லாம் அளித்து அங்கீகரித்திருக்கின்றது,, அது போக தமிழ் வருடபிறப்பு. தீபாவளி என பல விடுமுறைகள் உண்டு என்பது தமிழர்களுக்கு தெரிந்துவிடும்

ஓஹோ சிங்களன் பரவாயில்லையோ என தமிழர்கள் யோசிக்க கூடாது அல்லவா? அதற்காக‌

அவர்கள்தான் அப்படி என்றால் இந்த தமிழிசை போன்றவர்கள் ஏன் சும்ம்மா இருக்க வேண்டும்?

இலங்கை அரசை மிரட்டி மோடிதான் ஈழதமிழருக்கு பொங்கல், தீபாவளி, தமிழ் வருடபிறப்பு விடுமுறைகளை எல்லாம் பெற்றுதந்தார் என போட்டு முழக்கவேண்டியதுதானே

தமிழகத்தில் யார் சிந்தித்து மறு கேள்வி கேட்க போகின்றார்கள்?













 பொங்கல் பண்டிகையன்று தமிழர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற வேண்டும்: தங்கர்பச்சன்

கருப்புகொடி எப்பொழுது ஏற்றுவார்கள்? எதிர்ப்பு தெரிவிக்க ஏற்றுவார்கள்,அப்படி எதிப்பு தெரிவிக்க தேர்தல் உண்டு, பிரதமரின் எத்தனையோ வருகை உண்டு அப்பொழுதெல்லாம் ஏற்றலாம் அல்லவா?


விவசாயம் அழிவதற்கு எதிர்ப்பாம்..





ஏதோ புதிதாக விவசாயம் அழிய தொடங்கியிருப்பது போலவும், இவ்வருடம்தான் விவசாயம் பொய்த்துபோனது போலவும் அன்னார் தொடங்கியிருக்கின்றார், விவசாயம் பாழாய்போய் எவ்வளவு நாள் ஆனது?

சரி எதற்கு கருப்புகொடி?

விவசாயி மனம் ஒடிந்துவிட்டானாம் அதனால் துக்கமாக கருப்புகொடியாம்

ஏன் சார், இந்த திரையரங்குகளில் எல்லாம் கருப்புகொடி ஏற்றகூடாதா?

திரையரங்குகளில் பொங்கல் கொண்டாடலாமாம், ஆனால் வீடுகளில் கருப்பு கொடியாம்.

அவ்வளவு பெரும் சிந்தனையாளர் என்றால், எங்கே? விவசாயி சாகும் காலங்களில் திரையரங்குகளில் "பைரவா" கொண்டாட்டம் ஏன்? என ஒருவார்த்தை சொல்லுங்கள் பார்க்கலாம்?

மனிதர் ஒருமாதிரியானவர் ஆனால் இவ்வளவு இவ்வளவிற்கு தமிழர்கள் அறிவே இல்லாதவர்கள் என சிந்திப்பாரென்று தெரியாது









ஆளாளுக்கு ஜல்லிகட்டிற்கு பொங்குகின்றார்கள், நிறைய வகையில் எதிர்ப்பு தெரிவித்து போராட்ட‌மாம்

எங்கே? ஜல்லிகட்டு நடத்த அனுமதிக்கும் வரை தமிழகத்தில் கிரிக்கெட் நுழைய விடமாட்டோம், ஜல்லிகட்டிற்கு ஆதரவளிக்காத தமிழக கிரிக்கெட் வீர்கள் வீட்டை முற்றுகை இடுவோம்

சென்னையி ஐபிஎல் மேட்ச் நடத்த விடமாட்டோம், புறக்கணிப்போம் என எவனாவது சொன்னானா?


ஜல்லிகட்டு எனும் விளையாட்டு நடக்காத தமிழகத்தில் கிரிக்கெட் எதற்கு என எவனாது சொல்வானா?

எந்த தலைவனாவது இவ்வழியில் செல்வோம், அந்நிய கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என கிளம்புகின்றானா?

அது பற்றி எல்லாம் யாரும் பேசமாட்டார்கள்

எதனை குறிவைக்க வேண்டுமோ அதனை செய்யமாட்டார்கள், சும்மா கத்திகொண்டே இருப்பார்கள்

எந்த நாட்டுக்காரன் எல்லாமோ ஐபில் என வந்து தமிழகத்தில் ஆடுவானாம்,

ஆனால் தமிழன் தன் காளைகளோடு விளையாட கூடாதாம் என சொல்ல ஒருவனுமா இல்லை..








 இழந்துவிட்ட உரிமையை பிச்சைக்கேட்டு பெற முடியாது: சீமான்




 

ஆமாம், இவரை போல மொத்த இந்தியாவினையும் நொறுக்கி பெறவேண்டும், முன்பு அப்படித்தான் அன்னார் இலங்கையினை அடித்து பிளந்து ஈழம் அமைத்தார்.







ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி சிம்பு மவுன போராட்டம்


அப்படியே கொஞ்சகாலம் மவுனமாகவே இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?


சும்மா இருக்கும்பொழுது நிறைய பேசுவார், ஆனால் போராட்ட களம் என்றால் மவுன போராடமாம்






மோடியின் செல்வாக்கு உயர்வால் விரக்தியில் காங்., : வெங்கையா நாயுடு


மோடியின் செல்வாக்கா?


கிழியுது கிழியுது, குஜராத் உள்ளாட்சி தேர்தல் வரை கிழியுது..







 

No comments:

Post a Comment