Saturday, January 21, 2017

வாடிவாசலை பன்னீர் செல்வம் திறப்பார், காளைகள் துள்ளி குதிக்கும் ....

https://youtu.be/KGW4ALzCLyc

வெற்றியினை பெற்றுவிட்ட போராட்டத்தை திசைதிருப்பும் செயல்கள் நடைபெற தொடங்கியிருப்பது போல தெரிகின்றது


உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பு சொல்லவில்லை, தமிழர்களின் எழுச்சியினை கண்டு திகைக்கும் அரசுகள் அவசரசட்டத்தினை கொண்டுவந்து ஜல்லிகட்டினை நடத்துகின்றன‌


இது தற்காலிக நடவடிக்கை என்பது யாருக்கு தெரியாது? நடத்த கூடாது என்ற நிலையிலிருந்து நடத்தி தீரவேண்டும் எனும் நிலைக்கு இழுத்து வந்திருக்கின்றோம்


இதோ இப்பொழுது போட்டி நடத்த தடை இல்லை, இந்த வருடத்திற்கான போட்டி இனி நடத்தலாம்


முன்பும் வருடத்திற்கு ஒருமுறைதான் நடத்திகொண்டிருந்தோம்.


உச்சநீதிமன்றம் இனி என்ன தீர்ப்பினை வழங்கினாலும் சிக்கல் இல்லை, காரணம் மாநிலத்தின் பெரும் எழுச்சி எனும் இன்னொரு தரப்பினை இதுவரை நீதிமன்றம் பார்க்கவில்லை.


இதோ உலகமே பார்த்து மிரண்டு நிற்கும் இந்த ஒரு பாயிண்ட் போதும், உச்சநீதிமன்றம் தானாக தலையாட்டும் இல்லாவிட்டால் அதன் நீதி பெரும் கேலிகூத்தாகும், அதற்கு அது இடம்கொடுக்காது


ஆக இனி உச்சநீதிமன்றம் வழிக்கு வந்தே தீரவேண்டும், இல்லை என்றால் நீதி இல்லை அது பீட்டாவின் கைக்குள் இருக்கின்றது என சந்தி சிரித்துவிடும்


ஆக வெற்றி என்பதை பெற்றாகிவிட்டது


இப்பொழுது சீமான் போன்ற அரைவேக்காடுகள் நிரந்தரமாக தடையினை நீக்கவேண்டும், இது ஏமாற்றுவேலை என கத்த தொடங்கியிருக்கின்றன‌


அவர்களுக்கு என்றுமே அமைதியான முடிவுகள் விருப்பமில்லாதது, பலபேரை கொல்லாமல் அவர்களுக்கு தூக்கம் வராது. பலர் செத்தால்தான் அவர்கள் அரசியல் பயணம் செய்யமுடியும்


திகைத்து நிற்கும் அரசாங்கங்கள் இனியும் மக்களை ஏமாற்றமுடியாது என்ற நிலைக்கு வந்தாயிற்று


ஆக இப்பொழுது ஜல்லிகட்டினை நடத்திவிட்டு உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்ப்பதே அறிவுடடமை. அதனை விட்டுவிட்டு நிரந்தர தடை நீக்கினால்தான் விளையாட விடுவோம் என்பது அறிவுடமை அல்ல‌


அது மாநில அமைதியினை குலைக்கும் உள்நோக்கம் மட்டுமன்றி, இது எல்லை மீறி செல்கின்றது என இதுவரை நம்மை ஆதரிப்பவர்களை எல்லாம் முகம் சுழிக்க வைக்கும்


வெண்ணெய் திரளும்பொழுது தாளி உடையவிட கூடாது


நெடுங்கால போராட்டம் என்பது மொத்தத்தையும் சீரழித்துவிடும் அபாயம் உண்டு


பிடிவாதங்களுக்கும் போராட்டங்களுக்கும் ஒரு எல்லை உண்டு, இதோ இந்தியாவினை அலறவைத்து ஜல்லிகட்டினை மீட்டாகிவிட்டது, அவசர சட்டம் இயற்றும் அளவு நிலமை சீரியஸ் என சொல்லும்பொழுது உச்சநீதிமன்றம் இனி தடுக்க முடியாது


காட்சிகள் மாறிவிட்டன, ஆக விளையாடுவதுதான் சரி. அதற்காக போராட்டத்தை கைவிட அவசியமில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பினை பார்த்துவிட்டு முடிவு செய்யலாம்


முதலில் காளையொடு விளையாடுவோம், இனி யாரும் தடுக்கமுடியாது. வெற்றியினை பெற்றாகிவிட்டது. இதனை இப்படியே விடமுடியாத கும்பல் தவறான வதந்திகளை பரப்பிவருகின்றது


இந்த சீமான் போன்ற நரிகள் தங்கள் நோக்கம் நிறைவேறவிலையே, தங்களுக்கு இதில் பங்கு வராதே, 4 பேர் சாகட்டும் ரத்த ஆறு ஓடட்டும் என ஏதாவது சொல்லும்


அவனை போன்றவர்களை பிடித்து வெளியே தள்ளுவதே போராட்டத்திற்கு நல்லது.


வெற்றிபெற்ற மகிழ்ச்சியோடு ஜல்லிகட்டிற்கு கைதட்டலாம், போட்டி நடக்கட்டும்


இன்னொரு முறை விபரீத முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் பலமுறை யோசிக்கும், எடுக்கவும் எடுக்காது. மத்திய அரசின் ஒத்துழைப்பும் சில தீர்ப்புகளை மாற்றும்


ஆக நமது உரிமையினை மீட்டுவிட்டோம், அதை கொண்டாடலாம்


இன்னும் போரட காரணங்கள் இல்லை, அப்படி இனி காரணம் உருவானால் அதனை எப்படி தூக்கி எறியவேண்டும் என இப்பொழுதுதான் படித்திருக்கின்றோம்


இனியும் அஞ்சவோ, சந்தேகபடவோ என்ன இருக்கின்றது? வரலாற்று சிறப்புமிக்க வெற்றியினை பெற்றாகிவிட்டது


ஆனால் ஒரு ஆச்சரியம்


இந்த தமிழகம்தான் அதிமுக அரசு வேண்டும் என தேர்தலில் தேர்ந்தெடுத்தது, ஜெயா மறையும் பொழுதும் அது மறு தேர்தல் கேட்கவிலை, ஆட்சி பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கபொழுதும் அது அமைதிகாத்தது


இப்பொழுது அதே பன்னீர்செல்வம்தான் இவ்வளவு தூரம் செயல்பட்டு ஜல்லிகட்டை நீக்க போராடி வெற்றி கொடுத்தும் இருக்கின்றார்


ஆனால் அவர் இப்போது விளையாடுங்கள், அடுத்துள்ள காரியத்தை பின்னால் பார்க்கலாம் எனும்பொழுது யோசிக்கின்றது


நம்பமுடியாமல் யோசிக்கின்றதாம்


அட இந்த யோசனை தேர்தலுக்கு முன்பாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்


போகட்டும்


தமிழகம் யோசித்து போரட கிளம்பியாயிற்று, இனி எல்லாம் நலம், யாவரும் நலம்.


சரி முதல்வர் மாநில பொறுப்பனவர் மக்களுக்கு சில அறிவுரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கின்றார். பொறுப்பு அவருக்கு இருக்கின்றது, அவர் பேசலாம்


இந்த போராட்டகாரர்களை கலைந்து செல்ல சொல்ல சசிகலா யார்?, மாணவர்களே கலைந்து செல்லுங்கள் என உத்தரவிட அவர் யார்?


இவ்வளவிற்கும் தேர்தல் பிரச்சாரம் கூட செய்தவரில்லை, இந்த எழுச்சி தமிழகத்தை கண்ட பின்னும் அவருக்கு ஞானம் பிறக்கவில்லை போலும்.


சிலர் பட்டுத்தான் திருந்துவார்கள்..


அவருக்கு தமிழர்கள் மீது என்ன அதிகாரம்? என்ன உரிமையில் அவர் பேசிகொண்டிருக்கின்றார்? யார் அதிகாரம் கொடுத்தது?


ஜெயாவிற்கு ஏதோ நல்ல நேரம் சென்றுவிட்டார், இப்பொழுது இருந்தால் இந்நேரம் இருக்கும் எழுச்சிக்கு அழ அழ விரட்டியிருப்பார்கள், அவர் இமேஜ் மண்ணாங்கட்டி எல்லாம் நொறுக்கபட்டிருக்கும்


ஜெயாடிவி மட்டும் பார்த்துகொண்டிருந்தால் இப்படித்தான் புத்தி போகும்,


சூழ்நிலையோ வெளிஉலகமோ, பக்கத்து தெருவோ தெரியாது


தமிழர்கள் மீது சசிகலா எனும் பொறுப்பில் இல்லாத நபர் வைக்கும் சில கோரிக்கைகள் கண்டிக்கபடவேண்டும்.


பிரதமரும், ஜனாதிபதியும், ஆளுநரும், முதல்வரும் பேசவேண்டிய இடத்தில் சசிகலா என்ன பேசுவது?


அவர்களே திகைத்து நிற்கும் நேரத்தில் இவருக்கு என்ன அவசரம்?


இதனை முதலில் கண்டித்துவிட்டு வாடிவாசலை திறக்கலாம்..

No comments:

Post a Comment