Monday, January 16, 2017

சசிகலாவிற்கு ஆதரவாக எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா...



எம்ஜிஆர் கட்சி உடைந்துபோக கூடாது, சசிகலாவிற்கு ஆதரவாக எம்ஜிஆரின் வளர்ப்புமகள் சுதா பேட்டி


இப்படி ஒரு வளர்ப்பு மகள் எம்ஜிஆருக்கு உண்டு என்பதே சசிகலா தயவில்தான் உலகிற்கு தெரிகின்றது


சுதா என்பவர் எம்ஜிஆர் ஆசையினை வெளிபடுத்தினாரா? இல்லை சசிகலா ஆசையினை வெளிபடுத்தினாரா என சொல்ல தேவையில்லை


எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் வாய்திறந்துவிட்டார், ஜெயாவின் வளர்ப்பு மகனை காணவில்லை


இந்த வளர்ப்புக்கள் இரண்டும் இணைந்து எம்ஜிஆர் மற்றும் ஜெயா கனவினை ஆளுக்கொரு பக்கம் இருந்து வளர்த்தால்தான் என்ன? என்பது பற்றி எல்லாம் நாம் பேசகூடாது


ஆனாலும் ஜெயா இருக்கும்வரை எம்ஜிஆரின் வளர்ப்புமகள் எங்கிருந்தார், எம்ஜிஆரின் கனவினை எப்படி நிறைவேற்றினார் என்ற ரகசியம் எல்லாம் நாமகத்தான் விளங்கிகொள்ள வேண்டும்









கொசுறு 


"அதிமுக-வை யாராலும் வீழ்த்த முடியாது" : சசிகலா சூளுரை


ஆம் ...இவரை தவிர..






 அதிமுகவை உடைத்து ஆட்சியை கலைக்க நினைக்கிறார் : மோடி மீது நடராஜன் குற்றச்சாட்டு


இவரும் இவர் குடும்பமும் வெளிவந்துவிட்டால் ஏன் கட்சி உடைகின்றது?


இதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்?


ஒருவேளை மோடி சசிகலா பொதுசெயலாராகவே நீடிக்க வேண்டும் என அடம்பிடிக்கின்றாரோ?






No comments:

Post a Comment