Sunday, January 15, 2017

ஜல்லிக்கட்டு அரசியல்... பிதற்றல்கள் ...

ஐடி, சிபிஐ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஜல்லிக்கட்டு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது: ஸ்டாலின்


அரசியல் என்றால் அப்படித்தான், சிலவற்றை தாரைவார்த்தே தீரவேண்டும்.


முன்பு சர்காரியா கமிஷன், இன்னும் பல கமிஷன் சிக்கலால் காவேரி முதல் கச்சதீவு வரை பறிபோகவில்லையா?





அரசியல் செய்ய பெரும் வாய்ப்பு கிடைத்தபோதும் ராமர்பாலம், ஈழவிவகாரம் முதல் பெரும் விஷயங்களில் எல்லாம் திமுகவின் கைகளை ஸ்பெக்ட்ரம் கட்டிபோடவில்லையா?

வழிகாட்டி விட்டது யார்?

இப்படி எல்லாம் அறிக்கை வாசித்து அரசியல் செய்யமுடியும் என இன்னும் நம்புகின்றாரா?

கலைஞரின் போராட்ட குணத்தில் கொஞ்சம் கூட இல்லை, இது அக்கட்சிக்கு நல்லதே அல்ல.





ஜல்லிகட்டிற்காக போராட தயார் : எச்.ராசா. ஜெயா மரணம் ஒரு கொலை : கராத்தே உசைனி


எப்பொழுதும் பைத்தியம் போலவே பேசிகொண்டிருக்கும் இருவரும், திடீரென நல்ல விஷயங்களை பேசவந்தால், அவர்கள் பைத்தியங்கள் அப்படித்தான் உளறுவார்கள் என ஒதுக்கி தள்ளுகின்றது தமிழகம்


சீரியசான விஷயங்களில் இருவரும் உருப்படியான கருத்துக்களை தெரிவித்தால் கண்டுகொள்ள ஆளில்லை




இதற்குத்தான் எப்பொழுதும் உருப்படியாக பேசி தொலைக்க வேண்டும் என்பது.


இதோ உண்மையினை பேசுகின்றார்கள் கண்டுகொள்ள யாருமில்லை, இனி என்ன செய்வார்கள்?


மறுபடி விரைவில் பிதற்ற ஆரம்பிப்பார்கள்..










Image may contain: 1 person, suit


தமிழகம் ஜல்லிகட்டினை நடத்த படாதபாடு படுகின்றது


ஆனால் உலகமோ இன்னொரு ஜல்லிகட்டிற்கு தயாராகின்றது, இந்த காளையினை எப்படி என ஆளாளுக்கு பெரும் அச்சம். எதிர்பார்ப்பு


வட கொரியா ஒரு பக்கம், ரஷ்யாவும் ஈரானும் ஒரு பக்கம், சீனா இன்னொரு பக்கம் என காளையின் திமிலில் பாய தயாராகின்றன‌




இஸ்ரேலோ காளையின் கொம்பினை சீவி, வாலினை திருக்குகின்றது


அக்காளையின் பெயர் டொனால்டு டிரம்ப், சர்வதேச வாடிவாசல் திறக்கும் தேதி ஜனவரி 20


இப்பொழுதே பெரும் சலசலப்புகள் கேட்க தொடங்கிவிட்டன‌


அந்த ஜல்லிகட்டு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் போல தெரிகின்றது..




































No comments:

Post a Comment