Wednesday, January 18, 2017

தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?





Image may contain: one or more people and crowd

உண்மையில் நல்ல தமிழக அரசாங்கம் என்ன செய்யும் தெரியுமா?


"உலகிலே காளை விளையாட்டு நடக்கும் வெகுசில இடங்களில் தமிழகமும் ஒன்று. அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல் போன்ற பகுதிகளில் அது விமரிசையாக விளையாடப்படும்.


அதனை கண்டு களிக்கவே ஓசையின்றி பல ஆயிரம் வெளிநாட்டவர்கள் வந்துகொண்டிருக்கின்றார்கள்





தகுந்த பாதுகாப்போடு அதனை நடத்தினால் பெரும் அந்நிய செலாவணி மிஞ்சும், அரசுக்கு வருமானம் கிடைக்கும், சுற்றுலா தொழிலினை அது ஊக்குவிக்கும்

எங்கிருந்தோ வந்தவன் எல்லாம் ஐபில் ஷோ காட்டி சம்பாதிக்கும் நாட்டில், காளை விளையாட்டை பெரும் போட்டியாக்கினால் என்ன?

ஸ்பெயினில் இல்லையா, இந்தோனேஷியாவின் சில பகுதிகளில் இல்லையா?

அவர்கள் செய்யும்பொழுது நாம் செய்ய கூடாதா?

பெரும் விளம்பரத்தோடு முறைபடி செய்தால் அரசுக்கு வருமானம், கூடவே தமிழக பாரம்பரியமும் காப்பாற்றலாம்"

இப்படியாக சிந்தித்து, மிக அபூர்வமாக உலகில் நடக்கும் அந்த விளையாட்டினை பிரபலபடுத்துவார்கள்.

அரபு ஒட்டக போட்டி, தாய்லாந்து யானை போட்டிகள், இன்னும் பல நாடுகளில் எல்லாம் இப்படியாக தங்கள் கலாச்சாரங்களை சுற்றுலா தொழிலின் ஒரு அங்கமாக மாற்றிகொண்டார்கள்

அப்படி சுற்றுலா துறை செய்யவேண்டிய வேலையில் சம்பந்தமே இல்லாமல் இன்னொரு துறை தலையிட்டு அழிச்சாட்டியம் செய்கின்றது

இந்த பெரும் கொடுமை இந்தியாவில் மட்டுமே சாத்தியம்

உலகளாவிய பெருமை பெரும் விளையாட்டினை இப்படி சர்ச்சைகுரிய விஷயமாக மாற்றிவைத்திருக்கும் மடத்தனம் கண்டிக்கதக்கது.

விலை உயர்ந்த கனிம மண்ணையும், கிரானைட்டையும் தனியார் விற்கலாம், ஆனால் ஆற்றுமண்ணை அரசே விற்கும் என்றளவு அறிவார்ந்த நிர்வாகம் கொண்ட நாடு அல்லவா?

அப்படித்தான் இருக்க்கும்





























No comments:

Post a Comment