Thursday, January 19, 2017

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவுகள்...

கலைஞர் அரசில் மந்திரி பதவி கேட்டார் ராமசந்திரன், நடிப்பதை நிறுத்தினால் பதவி என கட்டளையிட வெகுண்டெழுந்த ராமசந்திரன் நடிப்பே முக்கியம் என சொல்லி என்ன செய்தார் தெரியுமா?


புதுகட்சி தொடங்கினார்.


அதன்பின் முதல்வரானாலும் நடிக்கும் ஆசை இருந்தது, முதல்வராக இருந்தும் நடிக்க கிளம்பினார், அதாவது சினிமாவினை விடமாட்டாராம்.




அந்நாளைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஒன்று நடியுங்கள் அல்லது முதல்வராக இருங்கள், நடித்துகொண்டே முதல்வராக இருப்பதை மத்திய அரசு அனுமதிக்காது என்றார்


அவ்வளவுதான், சினிமா நடிப்பு அத்தோடு முடிந்தது முதல்வராக சீரியசாக நடிக்க தொடங்கினார் ராமசந்திரன்.


இதனைத்தானே நானும் சொன்னேன், நடிப்பதை நிறுத்த சொன்னேன்,


அன்று கேட்காத ராமசந்திரன் பிரதமர் சொல்லி கேட்டிருக்கின்றான் என மவுன சிரிப்பு சிரித்தார் கலைஞர்


 நூற்றாண்டு நினைவுகள்



No comments:

Post a Comment