Wednesday, January 18, 2017

சேவல் சண்டை....









Image may contain: bird and outdoor

Image may contain: sky and outdoor

Image may contain: 1 person, close-up







முன்பு தமிழகத்தில் நிறைய சேவல் சண்டை நடக்கும், அதுவும் பந்தய சேவல் சண்டை கொலைகளில் கூட முடிந்த சம்பங்கள் உண்டு


பின்பு அது பெரும் சிக்கலாகி தடை செய்யபட்டு பின் நிபந்தனைகள் தளர்த்தபட்டு இன்று அது அவ்வளவு பெரும் வரவேற்பான போட்டி என சொல்லமுடியாது


ஆனால் முன்பொரு காலத்தில் அது பெரும் கொண்டாட்டமான போட்டியாக, கிட்டதட்ட உலககோப்பை கிரிக்கெட் போல தமிழகத்தில் நடத்தபட்டிருக்கின்றது


இப்பொழுதல்லா புரிகின்றது


நாட்டு கோழி இனம் சுருங்கி எப்படி பிராய்லர் கோழி பெருகியதென்றும், லெக்கான் முட்டைகள் பெருகி நாட்டுகோழி முட்டைகள் அருகியதென்றும்..


சேவல் சண்டைகள் குறைய குறைய நாட்டு கோழிகள் குறைந்திருக்கின்றன‌


ஆக பீட்டா அன்றே திட்டமிட்டு களமிறங்கி சேவல் சண்டையினை ஒழித்து கோழி தட்டுபாட்டை உருவாக்கி பிராய்லர் கோழியினை தமிழகம் முழுக்க நிரப்பியிருக்கின்றது


சத்தில்லா லெக்கான் கோழி முட்டைகளை உண்ட தமிழன் சுகர், ரத்த அழுத்ததில் சிக்கி இருக்கின்றான்.


சீனி விளையும் கரும்பு இங்கு விளைகின்றது, கரும்பு ஆலையும் உண்டு, ஆனால் அவை எல்லாம் தமிழனின் சுகருக்கு காரணம் அல்ல, நாட்டு மாட்டு பால் இல்லாததே காரணம்.


அப்படி மீதி இருக்கும் தமிழனை அழிக்க , சுத்தமான நாட்டு பாலினை கெடுக்க ஜல்லிகட்டு காளைகளை ஒழிக்க பீட்டா கிளம்பியிருக்கின்றது.


ஜெர்சி பாலுக்காக இப்படி கிளம்பியிருக்கின்றார்கள் பீட்டா மூலமாக‌


ஏற்கனவே ஆட்டு சண்டையினை நிறுத்தி அந்நிய நாட்டின் ஆட்டு இறைச்சி இறக்குமதிக்கு பச்சை கொடி காட்டியாயிற்று


ஆட்டு சண்டை தொடர்ந்து நடந்திருதால் நாட்டில் ஆட்டுகறி விலை எப்படி ரூ.600ஐ தொடும்?


கோழி, ஆடு எல்லாம் இப்படித்தான் அழித்திருக்கின்றன, நாட்டு பாலினையும் விட முடியுமா?


ஆக இனி ஜல்லிகட்டை நடத்தவேண்டும், நாட்டு மாட்டினை பெருக்க வேண்டும்


அப்படியே சேவல் சண்டைகளை நடத்தவேண்டும், நாட்டுகோழிகளை பெருக்க வேண்டும், பிராய்லர் கோழிகளை, லெக்கான் முட்டைகளை விரட்டவேண்டும்


ஆனால் இதனை பற்றி எல்லாம் யாரும் பேசவில்லை. அதனால் என்ன நாம் பேசுவோம்


அப்படியே பனங்கள்ளையும் , கசிப்பு காய்ச்சுதலையும் நடத்தி டாஸ்மாக்கினை மூட வேண்டுமல்லவா? அதனையும் செய்வோம்


நாட்டு பாலுக்கு ஒரு நியாயம், நாட்டு கோழிக்கும், நாட்டு சரக்கிற்கும் ஒரு நியாயமா?


எல்லா வெளிநாட்டு டிராக்டர், அறுவடை மிஷின்,மோட்டார் செட் என எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறவேண்டும்.


இப்படி எல்லா இறக்குமதிகளையும் விரட்டிவிட்டு உள்நாட்டு தயாரிப்பினை கொண்டு நிரப்ப வேண்டும்.


அதற்காக சன்னிலியோனை விரட்டிவிட்டுவிட்டு அவருக்கு பதிலாக என்ன செய்யபோகின்றாய் என பீட்டா என்னை பார்த்து கேட்டால் என்னிடம் பதில் இல்லை என்பதை கண்ணீருடன் தெரிவித்துகொள்கின்றேன்...


 




















No comments:

Post a Comment