Wednesday, January 18, 2017

மாட்டினை மதித்த அளவு கூட தமிழக தமிழன் புலிகளை மதிக்கவில்லை




Image may contain: one or more people, crowd and outdoor



ஜல்லிகட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுக்க ஆர்ப்பாட்டம் பெருகிற்று, சமாளிக்க முடியாமல் அரசு திணறல், வெளி நாடுகளிலும் கடும் போராட்டம்,


டேய் அங்கிள் பாய்ஸ்


நன்றாக கண்ணை விரித்து பாருங்கள்





இப்படி தன் உரிமையில் கைவைத்ததும் பொங்கும் தமிழகம்தான், 1983ல் ஈழ தமிழனுக்கும் இப்படி பொங்கியது

பெரும் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்துதான் இந்தியா அப்பிரச்சினையில் தலையிட்டு புலிகளின் குழப்படியால் எல்லாம் நாசமானது

அந்த வலியான அனுபவத்தில்தான் 2009ல் புலிகள் ஒழிக்கபடும்பொழுது தமிழகம் மகா அமைதியாக இருந்தது

இது என்றுமே இந்தியாவினை நேசிக்கும் மாநிலம், போராடும், சண்டையிடும் எதிர்த்து நிற்கும், உரிமை மீட்கும்

ஆனால் பிரிந்து செல்வதோ, அந்நிய சக்திகளுக்கு துணைபோவதோ அறவே நடக்காத காரியம்

இன்றைய எழுச்சியும், 2009 அமைதியும் எண்ணி பாருங்கள்

கலைஞர் ஏன் அமைதியாக இருந்தார் என்றால் இப்படி மக்கள் நாடிதுடிப்பு தெரிந்ததால்தான்

வைகோவும் சீமானும் டெப்பாசிட் காலி என்றால் சும்மா மக்களை புரியாமல் கத்தியதால்தான்

இனியாவது திருந்தி அந்த பிரபாகரன் படத்தினை தூர எறிந்துவிட்டு இந்தியாவோடு இணைந்த தமிழர் நலம் என பேசுங்கள், கொஞ்சமாவது தேறும்

அவ்வளவு சிந்தனை உங்களுக்கு கிடையாது,

ஆனால் ஜல்லிகட்டுக்கு கூடும் கூட்டமும், வெளிநாடுகளில் கூட பெருகும் ஆதரவும் 2009 முள்ளிவாய்க்காலுக்கு கொஞ்சமும் இல்லையே என்ற எண்ணம் உங்கள் மனதில் இல்லாமல் இருக்காது

அந்த கண்ணீரை துடைத்துகொண்டே ஜல்லிகட்டு என சொல்லிகொண்டிருப்பது எல்லோருக்கும் புரிகின்றது

இனியாவது தமிழக யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள்,

இல்லை என்றால் இப்போது காணாமல் போன வைகோ நிலைதான் உங்களுக்கும்.

ஆனாலும் உங்கள் மேல் நிரம்ப நம்பிக்கை உண்டு , ஒரு காலமும் திருந்த மாட்டீர்கள், திருந்துவதற்கு சிந்திக்க வெண்டும்

சிந்திக்க மூளை வேண்டும், அது உங்களிடம் என்று இருந்தது?

மாட்டினை மதித்த அளவு கூட தமிழக தமிழன் புலிகளை மதிக்கவில்லை என்பது இப்பொழுதாவது புரிகின்றதா?





























No comments:

Post a Comment