Tuesday, January 17, 2017

இதுதாண்டா தமிழ் நாடு....

ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்வால் பயனில்லை - ஏமாற்று வேலை! ராமதாசு


ஆம் பயனே இல்லை, இவர் மகன் பதவிக்கு வராத வரை எதுவுமே இவருக்கு பயன் இல்லை


இவர் மகனுக்கு மட்டும் ஒரு பதவி கொடுத்துவிட்டால் அதன் பின் இவர் பார்வையில் எல்லாமே பயனுள்ள வேலை...






ஜெயாவின் வளர்ப்புமகன் பெரும் கோடிகளோடு சுற்றுகின்றார்,


அவரின் வேலைக்காரி கட்சியினையே எடுத்துகொண்டார்


எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சசிகலா வாழ்க என கிளம்புகின்றார்


கலைஞரின் மகன் இன்று கட்சி தலைவர்


ஆனால் அண்ணாவின் வளர்ப்பு மகன் வறுமையில் தற்கொலை செய்ததாக முன்பு செய்திகள் வந்தன‌


எப்படியோ அண்ணாவிற்கு கல்லறை மட்டுமாவது மிஞ்சியிருக்கின்றது, அதை மட்டுமாவது உருப்படியாக கட்டி வைத்தார்கள்.


பெரியார் திருமணம் செய்கின்றார், வாரிசுக்கும் வாரிசு அரசியலுக்கும் ஆசைபடுகின்றார் அது தவறு என தனி கட்சி கண்டது திமுக என்பது குறிப்பிடதக்கது






நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் : நடராஜன்


என்னடா இது? அந்த பக்கம் தீபா எங்க அத்தை கட்சி எனக்குத்தான் என கிளம்புகின்றார்,


இவரோ இனி அதிமுக என் குடும்ப கட்சி என்கின்றார்.


எவனாவது இனி அங்கிருந்து கொண்டு திமுகவில் வாரிசு அரசியல் , குடும்ப அரசியல் என சவுண்டு விடுவீர்கள்????






No comments:

Post a Comment