Sunday, January 15, 2017

தமிழக அரசின் சின்னமாக போகும் எருமைக்கு வாழ்த்துக்கள்..




Image may contain: outdoor and nature

மாடு அறுப்பு கடைக்கு தமிழகத்தில் தடையில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்


மாட்டிற்கு லாடம் அடிக்கவும், மூக்கணாங்கயிறு போடவுமாவது தமிழனுக்கு உரிமை உண்டா? என்பதுதான் தெரியவில்லை


ஆக கிராமத்து தமிழர்களே உச்சநீதிமன்ற அனுமதி பெற்றபின் மூக்கணாங்கயிறை இடுங்கள், கழுத்தில் கயிறு கட்டுங்கள், மாடு மேய்க்கும்பொழுது கம்பால் அடியுங்கள்


இல்லை என்றால் நீங்கள் லாடம் அடிக்கும்பொழுது கூட கைதுசெய்யபடலாம், மாடு மேய்க்க‌ கயிறு கட்டி இழுத்து சென்றாலும் போலிஸ் இழுத்து சென்றுவிடும் ஜாக்கிரதை


மாடு அறுப்பு நிலையம் வைத்திருப்பவர்களுக்கு சிக்கலே இல்லை, தடுக்கமாட்டார்கள்


ஆனால் மாடுகளை வைத்து பராமரிப்போரும், வளர்ப்போரும் உச்சநீதிமன்றத்திலும், தமிழக அரசிடமும் உரிய உரிமைகளை வாங்கி வைத்திருப்பது நல்லது.


இல்லை என்றால் மாட்டினை அனாதையாக‌ விட்டு விட்டு உங்களை கைது செய்வார்கள், அந்த மாட்டினை எவனாவது கொல்வான், அது பற்றி எல்லாம் கவலை அரசுக்கு இல்லை.


நீங்கள் மாட்டினை தொட கூடாது அவ்வளவுதான்


முன்பெல்லாம் எருமை மாடுகளுக்கு சொரணை இல்லை என்பார்கள், இனி எருமையினை எப்படி திட்டலாம்?


"ஏய் எருமையே ஏன் தமிழக அரசினைபோல இப்படி இருக்கின்றாய்.."


விரைவில் தமிழக அரசின் சின்னமாக போகும் எருமைக்கு வாழ்த்துக்கள்..





























No comments:

Post a Comment