Wednesday, January 18, 2017

முதல்வர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கின்றார்

https://youtu.be/j7OzzJqBkJI

 



ஜல்லிகட்டு தொடர்பாக அவசரமாக, முதல்வர்  நாளை பிரதமர் மோடியை சந்திக்கின்றார், போராட்டத்தை கைவிடுங்கள் என்ற முதல்வரின் கோரிக்கையினை மறுத்தனர் போராளிகள்


இப்பொழுது ஏன் "புரட்சி தலைவி, இதய தெய்வம், போயஸ் போராளி, மெரீனா மேனகை அம்மா அவர்களின் ஆசியுடன் ஆளும் .... என கடிதம் எழுதவில்லை


புறா காலில் கட்டி ஏன் அனுப்பவில்லை?




அலறி அடித்து டெல்லிக்கு செல்ல என்ன அப்படி அவசரம்?


காவேரி முதல் விவசாயி தற்கொலை, ஜெயா மர்மம் என எதற்கும் அசைந்துகொடுக்கா தலமை இந்த ஜல்லிகட்டுக்கு முடிவெடுக்க ஓடும் மர்மம் என்ன?


அதாவது எந்த பிரச்சினையும் இவர்கள் ஆட்சிக்கு சிக்கலாக உருவெடுக்கவில்லை அதனால் அம்மா படத்தினை வணங்கி உருகி வசனம் பேசிகொண்டிருந்தார்கள்


ஜல்லிகட்டு விஸ்வரூபம் எடுக்கும் நிலையில் இனி இவர்கள் ஆட்சிக்கு ஆபத்து என்றவுடன் அம்மா, சின்னம்மா என எல்லோரையும் மறந்துவிட்டு அம்மம்மமம்மா என டெல்லிக்கு ஓடுகின்றார்கள்


ஓடுங்கள்


இதோ மக்கள் புரட்சிக்கு முன்னால் தலமை அஞ்சி டெல்லிக்கு அடைக்கலம் கேட்க போகும் காட்சியினை பார்க்கின்றோம்


புரட்சி தலைவன், புரட்சி தலைவி என்றெல்லாம் பேனர் வைத்து வணங்கிகொண்டிருந்தார்கள் அல்லவா?


நிஜமான புரட்சி எது? என அவர்களுக்கு முகத்தில் அறைந்து சொல்ல காலம் நெருங்கிகொண்டிருக்கின்றது


உலக மீடியாக்கள் எல்லாம் தமிழக போராட்டத்தினை பெரிதாக காட்ட ஆரம்பித்தாயிற்று, மோடி அரசுக்கு சர்வதேச கேள்விகள், முகம் சுழிப்புகள் தொடங்கும் நேரம்.


தமிழகம் பொங்கி எழ, எந்த அரசியல்வாதி முகத்திலும் ஈயாடியதாக தெரியவில்லை, எல்லோரும் பேய் அறைந்தது போலவே காணபடுகின்றார்கள்


மிகபெரும் திருப்பத்தை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கின்றது


நம் தமிழகம் நம் உரிமை..


மெல்ல தமிழன் இனி வாழ்வான்.










நமது காளைகளை புறக்கணிக்க சொல்லும் பீட்டா அமைப்பினை திருப்பி அடிக்க, தமிழகத்தில் புழங்கும் அமெரிக்க பொருட்களை புறக்கணிப்போம்



பெப்சி முதல் கேஎப்சி வரை எல்லா அமெரிக்க பொருட்களையும் புறக்கணிப்போம்


எங்கள் காளை எங்களுக்கு, உங்கள் கோக் உங்களுக்கு









No comments:

Post a Comment