Friday, January 20, 2017

ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன

https://youtu.be/5RJxGUT7yE4


ஜல்லிகட்டு நடப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன, மத்திய அரசு இதில் தமிழக மக்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றது


தகுந்த நம்பிக்கையான முடிவுகள் இன்றி முதல்வர் பன்னீர்செல்வம் அவசரசட்டம் பற்றி அறிவிக்க முடியாது, ஆக ஏதோ விரைவாக நடக்க இருக்கின்றது.


இந்த‌ அரசும் இரும்பு கரம், அலுமினிய கரம் என இறங்காமல் மக்களை பற்றி சிந்தித்திருப்பது நீண்ட நாளைக்கு பின் மக்கள் சொல்வதை கேட்கும் அரசு அமைந்திருக்கின்றது என எண்ண வைத்திருக்கின்றது


நிச்சயம் ஜெயா இருந்தால், எப்படி சிந்திப்பார் என்றால், அது என்ன தமிழகம் சொல்லி நான் கேட்பது?. நான் என்று சொல்கிறனோ அன்று ஜல்லிகட்டு நடந்தால் போதும். அந்த அளவில்தான் சிந்தனை இருக்கும்.


நானே தீர்ப்பு கவலையில் இருக்கும்பொழுது இந்த பொங்கலே எதற்கு? இதில் ஜல்லிகட்டு வேறா? ம்ம்ம் போய் ஆலயங்களில் எனக்காக மொட்டை போடுங்கள் என்ற அளவில்தான் அவர் அணுகுமுறை இருக்கும்


அவர் ஆண்ட காலங்கள் அப்படித்தான் இருந்தன‌


பொதுவாக அதிமுக அரசு ஆளும் காலங்களில் எல்லாம் துப்பாக்கி ஓசையும், லத்தி சத்தமும் அடிக்கடி கேட்கும். ஒரு அடிமைதனத்தில் ஆட்சி நடக்கும், கட்சி போலவே


எம்ஜிஆர் அப்படித்தான் ஆண்டார், அடிதடி படங்களின் ஹீரோ அல்லவா? அதனால் அடித்துவிரட்டுவதில் அவருக்கொரு சந்தோஷம்


தமிழக போராட்டங்களையும் , அதில் நடந்த துப்பாக்கி சூடு போலிஸ் அராஜகம் எல்லாம் அதிமுக காலங்களில் அதிகமாகவே தமிழக பக்கங்களில் காணபடும்


அந்த காட்சிகள் நினைவுக்கு வந்துதான் அச்சமாக இருந்தது, ஆனால் தமிழன் பன்னீர்செல்வம் அதனை மாற்றி பிரச்சினையினை முடிவுக்கு கொண்டுவர அமைதியாக முயற்சிக்கின்றார்


தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கபட்டிருக்கின்றது, அந்த அரசுக்கு மனமார்ந்த நன்றிகள்


இதில் தமிழக பத்திரிகைகள் பங்கு பாராட்டதக்கது, அரசியல் தலையீடு இன்றி பத்திரிகைகளை சுயமாக விட்டால் அவை எப்படிபட்ட சமூக பணியினை ஆற்றமுடியும் என அவை காட்டின‌


டிவிக்களில் நியூஸ் 7 அப்படி முழுநேரமாக செய்தது, நல்ல டிவி அது, சினிமா குப்பைகள் இல்லாததால் தமிழகத்து சிஎன்என் அல்லது அல்ஜசீரா என பெயரெடுக்கும் காலம் வந்துவிட்டது.


வாழ்த்துக்கள்


பொதுவாக நல்ல அரசுகளும், விழிப்பான மக்களும் இருக்கும் இடத்தில் பன்னாட்டு நிறுவணங்கள் வாலை சுருட்டி அமைதியாக இருக்கும்


காஸ்ட்ரோ அப்படி கியூபாவினை வைத்திருந்தார், சீனா , சிங்கப்பூர் என முன்னேறும் நாடுகள் நிலை அப்படி


பொலிவியா மக்கள் அப்படி தண்ணீரை சுரண்டவந்த அமெரிக்க கம்பெனியினை விரட்டினார்கள்


நமது அண்டை மாநிலம் கேரளத்தில் ஏதும் பன்னாட்டு கம்பெனி தலையிட முடியும்?


தமிழகம் சும்மாவே இருந்ததால் பீட்டா எல்லாம் ஆடி பார்த்தது, ஓங்கி அடித்துவிட்டால் அப்படியே அமைதியாகிவிடுவார்கள், ஆனால் வேறுவழியில் நுழைய பார்ப்பார்கள். விழித்திருந்து அடித்துகொண்டே இருந்தோமானால் அதன் பின் வேறுபக்கம் ஓடிவிடுவார்கள்


இந்த பீட்டாவின் இந்திய உறுப்பினர்கள் எல்லாம் இனி தமிழின துரோகிகள், எங்காவது தமிழகத்தில் தென்பட்டால் பிடித்து நல்ல திமிலங்காளை முன்னால் கட்டி வைக்க வேண்டும்


இந்த ஜல்லிகட்டு சர்ச்சையில் தேசியகொடி வேண்டாம், ஜன 26 கருப்புகொடி, அது இது என என்னவெல்லாமோ பேசினானே அவனை எல்லாம் அலங்காநல்லூரில் காளை காலுக்கடியில் இடவேண்டும்


நாம் நமது நாட்டில் மோதுவோம், கத்துவோம் நமக்குள் சண்டையிடுவோம். ஒரு இந்தியன் தன் சொந்த அரசுடன் மல்லுகட்டாமல் தான்சானியா அரசிடமா சண்டையிடமுடியும்?


அப்படி நம் அரசுடன் ஜல்லிகட்டிற்கு மல்லுகட்டினோம்


இது சொந்த உள்நாட்டு விஷயம், அண்ணன் தம்பி சர்ச்சை அவ்வளவுதான், ஜல்லிகட்டு விளையாட எல்லாம் தனிநாடு கேட்கமுடியாது, விளையாடுவதற்கு ஒரு நாடா?


இந்த நூற்றாண்டில் உலகில் பெரும் எழுச்சி எழுந்தது, ஆனால் தமிழ்நாட்டில் தமிழருக்காக எழும்பிய எழுச்சியில் இந்தி எதிர்ப்பிற்கு பின் நம் தலைமுறையில் நாம் பார்த்த எழுச்சி இது


ஒரு தலைமுறை எப்படி போராடவேண்டும்? எப்படி அரசினை பணிய வைக்கமுடியும் என காட்டிவிட்டது. இளம் தலைமுறை அதனை கவனிக்கின்றது


இனி பெரும் குழப்படிகளும் உரிமை மீறல்களும் வரும்பொழுது தன்னை காக்கும் முறையினை தமிழகம் தன் கண்முன் கண்டுவிட்டது


குழந்தைகளை அழைத்து சென்று போராட்டம் என்றால் என்ன என்பதை கண்ணார காட்டியாயிற்று, இனி அவை மறக்காது. தேவைபட்டால் கையில் எடுக்கும்


"ஜல்லிகட்டு நம் உரிமை, எங்கள் உரிமை எங்களுக்கு" என அந்த பிஞ்சுகளும் களத்திற்கு வந்திருப்பதை எண்ணி ஆனந்தம் பொங்குகின்றது, நல்ல வழிகளை போதிக்கின்றோம்


இத்தனை ஆயிரம் கல்லூரிகள் தமிழகத்தில் உண்டே, என்னதான் சமூகபொறுப்பு படிக்கின்றார்களோ என எண்ணியதுண்டு, காட்டிவிட்டார்கள்


கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்திற்கு விடிகின்றது, விடிவெள்ளி தெரிகின்றது


ஆனால் பன்னாட்டு கம்பெனிகள் எளிதில் ஓயாது, பல வழிகளில் அது வரும்


ஜாதி,மதம், இனம், அண்டைநாடு, கட்சி,சினிமா, வர்க்கபேதம் என பலவழிகளில் நம்மை பிரித்து மோதவிட்டு பார்க்கும்


மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலங்கள் இனிதான் இருக்கின்றன, அதற்கென்ன எதனையும் காதில் வாங்காவிட்டால் முடிந்தது விஷயம்


நம்மாலும் உலகம் கவனிக்கும் பெரும் போராட்டத்தை நடத்த முடிந்த்திருக்கின்றது


கூடங்குள போராட்டத்திற்கும் மொத்த தமிழகமும் இப்படி பொங்கியிருந்தால் அதுவும் வென்றிருக்கும், ஆனால் மதசாயம் பூச அது முடக்கபட்டது


எப்படியாயினும் இனி தமிழக எதிர்ப்புகள் மிக ஒற்றுமையாக வலுவாக கிளம்ப தொடங்கிவிட்டது, ஆற்றல்மிக்க இளம் தலைமுறை வந்துவிட்டது என்ற பயத்தை காட்டிவிட்டோமல்லவா?


அந்த பயம் ஆட்சியாளர்களுக்கு சாதாரணமானது அல்ல‌


அதில் இனி பலமுறை யோசித்தே தமிழக விஷயங்களில் முடிவெடுப்பார்கள், அதனை காலம் இனி உணர்த்தும்


களத்தில் வந்த எல்லோருக்கும் குறிப்பாக குழந்தை முதல் எங்கோ அமெரிக்க மூலையில் கொடிபிடித்த நண்பர்கள் வரை எல்லோருக்கும் வாழ்த்துக்கள்


ஒவ்வொரு தமிழனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கெடுத்த போராட்டம் இது என்பதை மிக உறுதியாக சொல்லமுடியும், அனைவருக்கும் வாழ்த்துக்கள்


குறிப்பாக அந்த பதிவு போட்டவரை தேடிகொண்டிருக்கின்றேன், அது இப்படி இருந்தது


"ஜல்லிகட்டு விளையாட தெரியாதவன் எல்லாம் எதுக்கு போராட்டம் பன்றான் என்ற கேள்விக்கு


ம்ம் நீ மட்டும் தாலிகட்டிற கல்யாணத்துக்கு ஏன் எல்லோரும் வாராங்க, எல்லோரும் உன் பொண்டாட்டி கழுத்துல‌ தாலி கட்டட்டுமா.."

No comments:

Post a Comment