Thursday, January 19, 2017

சந்தித்தார் மோடியை... முதல்வர் பன்னீர்




Image may contain: 3 people, people sitting



டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

மனதிற்குள் இப்படி அழுதிருக்கலாம்

"முடியல சார், எங்காவது ஓடிரலாம் போல இருக்கு, சொல்லாம ஓடினா நாட்டுக்கு அவமானமுன்னு இங்க வந்தேன்


ஒரு டீ மாஸ்டரோட‌ கஷ்டம் இன்னொரு டீ மாஸ்டருக்குத்தான் புரியும்ணு வந்திருக்கேன்..

ஒரு கப்பையும் எடுத்து ஆத்த முடியல்ல, ஜல்லிகட்டுல என் மூஞ்சிமேலேய வெந்நீர் ஊத்துறாங்க...

எல்லாத்துக்கும் என்னையே போட்டு அடிக்கிறாங்க, அம்மா இருக்கும்போது ஒரு பய ஏதும் கேட்டனா?

ரொம்ப வலிக்குது சார்...

அப்பக்கம் சசிகலா இந்த பக்கம் காளை மாடு நான் என்னதான் செய்ய?

எனக்கே ஏக பிரச்சினை, ஆறுதலா அம்மா சமாதில போய் அழுதுட்டு வருவேன், இப்போ அங்கதான் கூட்டமே கூடியிருக்கு, அம்மா செத்தப்போ கூட இவ்வளவு கூட்டம் இல்ல சார்

ஜல்லிகட்டு அனுமதி இல்லாம போனஎனக்கு கட்டுபோட்டுருவாங்க‌

என்னாலயே அங்க இருக்கமுடியலண்ணா நிலமைய புரிஞ்சிக்கோங்க சார்....

இன்னைக்கு ராத்திரி 12 மணிக்கு அதிரடியா அறிவிச்சிருங்க, சட்டம் போட முடியலண்ணா காளை மாடு இல்லாத ஒரு நாட்டிற்கு என்ன அனுப்பிருங்க...

உங்களுக்கு தெரியாத நாடா உலகத்துல இருக்கு ...... ஹூஊஊஊஊஊஊ"

















வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இப்போது உதவி செய்ய இயலாது, ஆனால் ஜல்லிகட்டிற்காக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உதவும் : மோடி


இந்த 4 வார்த்தையினை டிவிட்டரில் சொல்லமுடியாதா? ஒரு மனிதனை வரவைத்து சொல்லவேண்டுமா?


என்ன பதில் இது?


ஒரு அதிமுக அடிமைக்கு, ஒரு ஆர்.எஸ்.எஸ் அடிமை எப்படி உதவ முடியும்? என்றாவது சொல்லி தொலைத்திருக்கலாம்..


அவரே ஒரு நடவடிக்கையும் எடுக்கமுடியாமல்தானே அங்கே ஓடிவந்தார், அவரிடம் உன் நடவடிக்கைக்கு நான் துணை என்றால் அவர் என்ன செய்வார்?


எப்படியோ பன்னீருக்கு 12 கட்டங்களிலும் சனிபகவான் புன்னகைக்கும் நேரம் இது


இது பன்னீர் உண்மையாக அழப்போகும் தருணம்


இனி பொறுக்காது தமிழகம்...


இரண்டு மாபெரும் அறிவாளிகளை ஆளவைத்தால் காட்சிகளும், சந்திப்புகளும் இப்படித்தான் முடிவுறும்..


ஒரு டீ கலக்கும் நேரத்திற்குள் முடிவினை சொல்லிவிட்டார் அல்லவா? இதுதான் மோடி


என்னது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது உதவ முடியாதா?


வழக்கு நடக்கும்பொழுதே பாபர் மசூதியினினை இடித்து தள்ளவில்ல்லையா? தீர்ப்புக்காக காத்தா இருந்தார்கள்?


கன்னடம் காவேரி தீர்ப்பினை கடைபிடிக்க மறுத்தபொழுது நீதிபதிகள் கண்டனம் மட்டுமே தெரிவித்தனர்


அப்படியானால் நாம் என்ன செய்யலாம்?


தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு துணைநிற்கும் என சொல்லிவிட்டதால் வாடி வாசலை திறக்கலாமா?


மோடி முதல்வர் பக்கம், முதல்வர் நமது பக்கமென்றால் அதனைத்தான் செய்ய வேண்டும்


நாளை சுப்ரீம்கோர்ட் கேட்டால் மோடி பக்கம் கையினை காட்டிவிடலாம்


































No comments:

Post a Comment