Friday, January 13, 2017

முதல்வர் பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து இன்னும் பிற ...

முதல்வர் பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து அறிக்கை

வாழ்த்து வந்துவிட்டதா? இன்னும் சற்றுநேரத்தில் சசிகலாவிடமிருந்து இதே டைப் வாழ்த்து கூடுதலாக 4 லைன் சேர்த்து வரும்பாருங்கள்

இந்த விளையாட்டு இப்பொழுது கொஞ்சநாளாக நடந்து வருகின்றது


பன்னீர் ஒரு பட்ஜெட் தாக்கல்செய்யும்பொழுது, சசிகலா இன்னொரு பட்ஜெட் தாக்கல் செய்தால் எப்படி இருக்கும்?





கல்வித்தகுதி இல்லாமல் ஸ்கேன் மையம் நடத்தியர் கைது


இந்நாட்டில் இப்படி கல்வி தகுதியின்றி அதற்கு தகுந்த தொழில் நடத்த முடியாது, அதிலெல்லாம் மிக சரியாக இருக்கும் எம் தேசம்


ஆனால் கட்சி யாரும் நடத்தலாம், எந்த தகுதி கட்டுப்பாடும் இல்லை, ஆளும் கட்சியின் பொதுசெயலாளராக கூட ஆகலாம்




அடி முட்டாள்கள் எல்லாம் நாடாளும், மாநிலம் ஆளும் பெரும் பதவிக்கு வரலாம், அதற்கு எந்த தகுதியும் தேவையில்லை


பள்ளிபக்கம் சென்றிருக்கும் அவசியம் கூட இல்லை,


இந்த மகா விசித்திரம் இந்தியாவில் சாத்தியம்..






பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது: தமிழக அரசு அறிவிப்பு


திமுக, அதிமுக, தேமுதிக மறுபடி அதிமுக என திராவிட கழகங்களுக்கு இடையில் மட்டும் அடிக்கடி மாறிகொண்டதாலும்


பாமக போன்ற சாதிகட்சிகளில் இவர் இருந்தபொழுது அது போராளி கட்சியாக இருந்ததாலும்,




தேசிய கட்சிகள் பக்கம் செல்லாததாலும் அவர் இந்த பெரியார் விருது பெற தகுதியுடைவர்.







 


No comments:

Post a Comment