Wednesday, January 11, 2017

ஜல்லிகட்டு இருக்குல்ல ஜல்லிகட்டு, விடுவோமா?




என்ன அறிவித்தோம்? என்ன நடந்தது? "என்னாச்சி" என திருதிருவென விழித்தபடியே பொங்கல் கட்டய விடுமுறை என மத்திய அரசு சொல்லிவிட்டது


அவ்வளவுதான், சச்சின் விக்கெட்டை வீழ்த்திய பவுலரை போல ஆளாளுக்கு குதித்துகொண்டிருக்கின்றார்கள்.


தமிழகத்தில் ஆளாளுக்கு என்னால்தான் என கொடிபிடிக்கின்றார்கள், தாங்களே சொல்லமுடியாதல்லவா அதனால் அடிபொடிகளிடம் சிக்னல் காட்டிவிட்டார்கள்


அவைகள் "வெற்றி, வெற்றி மாபெரும் வெற்றி" என ஆர்ப்பரிக்கின்றன.


முக ஸ்டாலினின் முதல்வெற்றி என்கின்றது ஒரு குழு


சின்னமாவின் சரித்திர சாதனை என்கிறது இன்னொரு குழு


சீமானின் சீற்றத்தில் மத்திய அரசு பணிந்தது என சிரிக்காமல் சொல்கிறது அந்த கோஷ்டி


கட்டாய விடுமுறை வேண்டும் என வரலாற்றில் முதலில் சொன்னது நாங்கள் என்கிறது அன்புமணி கோஷ்டி


வீரமணி முறைப்பிலே பார்பண கோஷ்டி ஓடிவிட்டது என்கிறது கழகம்


ஆளாளுக்கு அழிச்சாட்டியம் தாளவில்லை


ஏதோ அந்நிய நாட்டு மன்னன் படையெடுத்து வந்தது போலவும், அதனை இவர்கள் இயமமலை வரை விரட்டி சென்றது போலவும்,


அங்கிருந்து மோடி தலையில் கல் சுமந்துவர செய்து அதில் இவர்கள் சாகசத்தை
கல்வெட்டு வடிப்பது போலவும் பெரும் இம்சைகள்


தொண்டன் இப்படி ஆர்பரிக்க‌ தலைவர்கள் எப்படி இருப்பார்கள்?


பெரும் கவலையில் இருப்பார்கள்.


ச்சே.. இப்படி பொசுக்குண்ணு முடிஞ்சா எப்படி? ஒரு 3 வருஷமா இழுத்தால்தான அடிக்கடி நாம வாய் திறக்கமுடியும்


இப்படி நம்ம வாயினை அடைத்துவிட்ட மோடி ஒழிக‌


ஒரு பிரச்சினை சிக்க எவ்வளவு கஷ்டம் தெரியுமா?


ம்ம்., ஆனா என்ன , ஜல்லிகட்டு இருக்குல்ல ஜல்லிகட்டு, விடுவோமா?


ஒரு கன்றுகுட்டியினை பிடித்தாவது தடையினை மீறி போட்டியினை நடத்தி பரபரப்பினை கிளப்பமாட்டோமா?








No comments:

Post a Comment