Thursday, January 19, 2017

குஷ்பூ வாய்திறந்து ஜல்லிகட்டினை ஆதரித்து பேசவேண்டும்






Image may contain: 1 person

ஜல்லிகட்டு பற்றி காங்கிரஸ் பெரிதாக வாய்திறக்கவில்லை, காரணம் ஜெய்ராம் ரமேஷ் செய்திருக்கும் தேசசேவை அப்படி


வாய்திறந்தால் வாயிலே குத்துவிழும் என்பது தெரிந்து எல்லா கோஷ்டியும் கப்சிப்


எப்படிபட்ட கட்சி அது?




அரசியல் ஜல்லிகட்டுக்கே பெயர்பெற்றது சத்தியமூர்த்தி பவன். எப்பொழுது எந்த காளை சீறும், எப்படி அடக்குவார்கள் என்பதெல்லாம் சுவாரஸ்யமான காட்சிகள்


நிலமை எல்லைமீறி செல்லும்பொழுது டெல்லியிலிருந்து வந்து மூக்கணாங்கயிறு போடுவார்கள்


இப்படி அவர்களுக்குள்ளே அடிக்கடி ஜல்லிகட்டு நடப்பதாலும், சில மைனஸ் பாயிண்டுகள் இருப்பதாலும் திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் அது மகா அமைதி


இதில் ஒரு வருத்த்தம் என்னவென்றால், இந்தோனேஷியா முதல் மடகாஸ்கர் வரை உள்ள ஜல்லிகட்டு விஷயங்களை விரல் நுனியில் வைத்து பட்டையினை கிளப்ப தயாரக இருந்த தலைவி குஷ்பூ இந்த கட்சி சிக்கலினால் அமைதியாகிவிட்டார்


அவர் அமைதியாகிவிட்டதால் எங்களை போன்ற ரசிக கண்மணிகளுக்கு மகாசோகம்


என்ன இருந்தாலும் தன் சொந்த கருத்தினை வெளியிடலாம் அல்லவா? யாரும் கட்சி பற்றி கேட்டால் ..."


காங்கிரஸ் அப்படி முடிவெடுக்கும்பொழுது நான் கட்சியில் இல்லை


நான் இருந்திருந்தால் அப்படி முடிவெடுக்கவிட்டிருப்பேனா? , அப்பொழுதிருந்த தமிழக‌ காங்கிரஸ் தலைவர்கள் விவரம் அவ்வளவுதான்.." என சொன்னால் முடிந்தது விஷயம்


உடனே வாடிவாசல் சத்தியமூர்த்தி பவனில் திறக்கபடும் என்பது இன்னொரு விஷயம்


குஷ்பூ வாய்திறந்து ஜல்லிகட்டினை ஆதரித்து பேசவேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்


இதனை கூட பேசாவிட்டால் அவர் எப்படி அரசியல் செய்யமுடியும்? எங்கள் நம்பிக்கை என்னாகும்?


விரைவில் பேசுவார் என எதிர்பார்ப்போம்


நயந்தாரா எல்லாம் பேசும்பொழுது குஷ்பூ பேசாவிட்டால் எப்படி?


அம்மாதிரி போட்டி நற்பணி மன்றங்களிடம் மிக சீனியர் மன்றமான எங்களால் பேசகூட முடியவில்லை


மிகுந்த வேதனையான விஷயம் இது :)
























No comments:

Post a Comment