Sunday, January 15, 2017

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்பேன்: சரத்குமார்

ரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்பேன்: சரத்குமார்


ஏற்கனவே இவர் எதிர்த்த எதிர்ப்புகள் எல்லாம் என்ன ஆயின? எதிர்த்து என்ன கிழித்தார்?


கலைஞரை விமர்சித்துவிட்டு அங்கு தெண்டனிட்ட வரலாறும் உண்டு




வெங்கடேச பண்ணையார் என்கவுண்டரின் போது, ஜெயா அரசு விமர்சிக்கபட்டபொழுது, நான் தூங்குறங்களை சுட்டுகொல்லும் போலீஸ் இல்ல என ஒரு படத்தில் வசனம் எல்லாம் பேசினார்


ஜெயாவினை மிக கடுமையாக எதிர்த்த‌ இவர்தான் பின் அவர் காலிலே விழுந்து கிடந்தார், ரகசிய போலீஸ் போன்ற படங்களில் சுசீ என்றொரு பாத்திரமே வைத்து அவர் சசிகலாவினை கலாய்த்தது கொஞ்சமல்ல‌


இப்பொழுது அங்கே சாஷ்டங்கமாக விழுந்து கிடக்கின்றார்


அதாகபட்டது முன்பு சரத்குமார் என்றொரு மானஸ்தன் இருந்தான், பின்பு அவன் மானம் எல்லாம் பறந்துவிட்டது. யாரையாவது அவர் எதிர்க்கின்றார் என்றால் அதன் அர்த்தம் என்ன தெரியுமா?


"விரைவில் உங்கள் காலில் விழுவேன், தயாராக இருங்கள்"


ஜெயா, கலைஞர் என இருவரிடமும் அப்படி எச்சரிக்கை விட்டு காலில் விழுந்த சரத்குமார் இப்பொழுது ரஜினிக்கும் அதே எச்சரிக்கையினை விடுகின்றார். அவர் மறைமுகமாக சொல்ல வருவது அதுதான்


"அரசியலுக்கு வாருங்கள் ரஜினி, எதிர்த்துவிட்டு உங்கள் காலிலே விழுந்து கிடக்கின்றேன்"


இது புரியாமல் ரஜினி ரசிகர்கள் சரத்குமாரை கண்டித்து கொண்டிருக்கின்றார்களாம்..











ரஜினி - சரத்குமார் ரசிகர்கள் கொந்தளிப்பு


சும்மா இருங்கடா டேய்..


அவர்கள் 2 பேருமே காமெடி பீசு.






'தமிழக அரசியலில், அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது' என, நடிகர் ரஜினிகாந்தின் பரபரப்பான பேச்சு


ஓஓஓ.... எந்திரன் 2.0 விரைவில் வர இருக்கின்றதா?, விளம்பரம் வேண்டுமா?


இனி விளம்பரம் கிடைத்துவிடும்




தமிழக பெருமக்கள் இன்றே நன்றாக இவர் அரசியல் பேச்சினையும், அவர் நடத்தும் நாடகத்தினையும், அதனை பத்திரிகைகள் பெரிதாக்கும் விஷயத்த்தையும் ரசிக்கும்படி கேட்டுகொள்கின்றோம்


எல்லாம் எந்திரன் 2.0 படம் வரும்வரை மட்டுமே,,,


அதன் பின் இருவருடம் கழித்து அடுத்தபடத்தின் வெளியீடு அன்றுதான் அரசியல் பேசவருவார் சூப்பர் ஸ்டார்.


இவரின் புதுபடத்தை விட அதற்குமுன் அவர் நடத்தும் இம்மாதிரி காமெடிகள்தான் ரசிக்கதக்கவை


இன்று கட்சி தொடங்குவார், நாளை ஆட்சி பிடிப்பார். படம் ரிலிசானவுடன் கட்சியினையும் ஆட்சியினையும் கலைத்துவிட்டு இமயமலை செல்வார்


இந்த விளையாட்டு சுமார் 20 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்றது








No comments:

Post a Comment