Friday, January 13, 2017

வரவேற்போம் பொங்கலை....

திராவிட இயக்கங்களை போகியில் கொளுத்திவிட்டு பொங்கலை வரவேற்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்


ஒஹோ..இப்படி கொளுத்துங்கள் என சொல்லுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா?


பொங்கலே திராவிட பண்டிகை, பின் எப்படி அதனை பொங்கலில் கொளுத்தமுடியும்?




வேண்டுமென்றால் நராகசுரனுக்கு பதிலாக பிஜேபியினை கொளுத்திவிட்டு தீபாவளியினையும்,


சூரபத்மனுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸை கொளுத்திவிட்டு சூரசம்ஹாரத்தையும் பின்னர் கொண்டாடுகின்றோம்,


வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி


ஒரு தொகுதி தமிழகத்தில் வெற்றிபெறமுடியாத கட்சியில் இருந்துகொண்டு, தனியே நின்றால் பாராளுமன்றதேர்தலிலே தமிழகத்தில் 0 வாங்க கூடிய கட்சியில் இருந்துகொண்டு எப்படி இப்படி பேசமுடிகின்றது?


கலைஞர் ஓய்ந்துவிட்டார், அரசோ ஒரு மங்குனி பாண்டியனிடம் சிக்கி இருக்கின்றது என்ற தைரியத்தில் பேசமுடிகின்றது


ஒரு கலைஞர் ஆயிரம் கலைஞராக , ஒரு பெரியார் பத்தாயிரம் பெரியாராக இங்கு உருவாகிகொண்டே இருப்பார்கள்.


திராவிட இயக்கத்தை விடுங்கள்


ஜல்லிகட்டிற்கு இன்னும் அவசரசட்டம் பிறப்பிக்காமல் இருக்கும் இந்த மத்திய அரசினை என்ன செய்யலாம் மிஸ்டர் ராதாகிருஷ்ணன்?


எனக்கென்னவோ இந்த ராதாகிருஷ்ணன், தமிழிசை, ராசா , சு.சாமி போன்றவர்கள் எல்லாம் பெரியார் ரசிகர்கள், திராவிட ரசிகர்கள் போல தோன்றுகின்றது


உளவாளிகளாக பாஜகட்சிக்குள் புகுந்து அது தமிழகத்தில் வளரவே கூடாது என்பதில் மிக கருத்தாக இருக்கின்றார்கள்


என்ன இருந்தாலும் டெல்லி பிஜேபி ஒரு யோசனை இல்லா கட்சி


இந்த தமிழிசை, ராதாகிருஷ்ணன் போன்ற சூத்திரர்களை எல்லாம் தலைவராக்குகின்றோமே, கொஞ்சமாவது சூத்திரர்களுக்கு குரலெழுப்பிய திராவிட இயக்க பாசம் இருக்குமே என யோசித்தார்களா? இல்லை


ராதாகிருஷ்ணன், தமிழிசைக்கு அந்த பெரியார் பாசம், திராவிட பாசம் உள்ளூர இருந்திருக்கின்றது


தான் ஆடாவிட்டாலும் சதை ஆடுமல்லவா?


உண்மையான திராவிட போராளிகள் இவர்கள்தான், இவர்கள் இருக்கும்வரை பாஜக தமிழகத்தில் வளரபோவதே இல்லை..






பொங்கல் பண்டிகைக்கு 5 காட்சிகள் நடத்திக்கொள்ள திரையரங்குகளுக்கு தமிழக அரசு அனுமதி


பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக் இலக்கு குறிப்பு


இந்த "கட்டாய விடுமுறை" கேட்டு அழிச்சாட்டியம் செய்தவன் எல்லாம் இப்பொழுது வாயே திறக்கமாட்டான்




மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறையா? இந்த தியேட்டர் ஊழியர், டாஸ்மாக் ஊழியருக்கு எல்லாம் விடுமுறை வேண்டாமா?


இவர்கள் தமிழர்கள் இல்லையா?. இவர்களுக்கு கட்டாய விடுமுறை கேட்பவன் அல்லவா தமிழன்


நாங்கள் கேட்கின்றோம், "ஏய் தமிழக அரசே இந்த தியேட்டர்களுக்கும், மதுகடைகளுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கும்படி எச்சரிக்கை விடுக்க்கின்றோம்


அப்படி கட்டாய விடுமுறை விடாவிட்டால் இலவச காட்சிகளாகவும், இலவச டாஸ்மாக் பானங்களாகவும் கிடைக்க "கட்டாய" சட்டம் இடுங்கள்


தமிழன் மகிழ்ச்சியாக கொண்டாடட்டும்..


இல்லாவிட்டால் விரைவில் டிரம்ப் தலைமையில் ஆர்பாட்டம் நடக்கும்"







 


No comments:

Post a Comment