Thursday, January 12, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்??




Image may contain: one or more people and outdoor


எத்தனை நூறு விளையாட்டுக்கள் தமிழகத்தில் இருந்தன, எம்மாதிர்யான கலாச்சாரம் பழக்கவழக்கம் எல்லாம் இருந்தன, எத்தனை கலைகள் இருந்தன‌


இயற்கைசார் தொழிலும், விளையாட்டும் எவ்வளவு இருந்தது?


அவை எல்லாம் ஒவ்வொன்றாக மறைந்துதான் வந்தது.





யானையினை பழக்குதல் என்றொரு பெரும் தொழில் அன்று இருந்திருக்கின்றது இன்று உண்டா?

குதிரையினை அவிழ்த்துவிட்டு அதனை அடக்கி அதன்மேல் ஏறுவது யார் எனும் விளையாட்டு அலெக்ஸாண்டர் காலதிலிருந்து சோழன் காலம் வரை இருந்திருக்கின்றது இன்று உண்டா?

இந்த ஜல்லிகட்டு இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் மறைந்துதான் தீரும்

காலம் அவ்வளவு வேகமாக மாறிகொண்டிருக்கின்றது, ஒரு வேளை ஆலயங்களின் பாரம்பரியத்தில் ஒன்றாக இருந்திருந்தால் அது கொஞ்சகாலம் தொடர்ந்து வரலாம், திருவிழா காலங்களில் அது நடக்கலாம்.

கேரள ஓண யானைகள் அணிவகுப்பு அப்படித்தான் ஆலயங்கள் முன் நடக்கின்றது

பண்டைய கலைளான சிற்பம்,மேளம், கரகம் இன்னபிற தமிழக அடையாளங்களை காத்து நிற்பதே இந்த தமிழக ஆலயங்கள்தான்

அந்த ஆலயங்களும் திருவிழாக்களும் இல்லை என்றால் இவை எல்லாம் எப்பொழுதோ விடைபெற்றிருக்கும்

தமிழக கலாச்சாரங்கள் இன்று ஆலயங்களினால்தான் காக்கபடுகின்றன. ஜல்லிகட்டு ஆலயம் சார்ந்ததாக இருந்திருந்தால் இன்று அசைத்திருக்க முடியாது

பின்னாளில் பல அடையாளங்கள் அழிந்துபோகலாம் என்று அந்த கலைகளை ஆலயத்தோடு முடிச்சுபோட்டுவிட்டு சென்ற தமிழக முன்னோர்களை ஆச்சரியமாக நினைக்க வேண்டி இருக்கின்றது

என்ன காரணத்தினாலோ ஜல்லிகட்டை ஆலயங்களோடு முடிச்சு போட முந்தைய சமூகம் தயங்கியிருக்கின்றது, ஏன் என தெரியவில்லை

ஆலயங்களோடு தொடர்புடைய கலைகளும், விளையாட்டும் இன்றளவும் அழகாக தொடர்ந்து வருகின்றன,

ஆலயம் தொடர்பில்லா கலைகளும், விளையாட்டும் தமிழ் மண்ணிலிருந்து விடைபெற்றுவிட்டன‌

கவனித்துபார்த்தால் உங்களுக்கே புரியும்

தமிழக ஆலயங்கள் வெறும் ஆலயங்கள் அல்ல, தெய்வங்களை தவிரவும் அவை காத்து நிற்பது ஏராளம் உண்டு.

தீப விளக்குகள் மணிகள் போன்ற அடையாளத்தையும், சந்தணம், பன்னீர், குடம் இன்னும் பல பண்டைய தொடர்புகளையும் ஆலயம் தவிர எங்கு காணமுடியும்?

வெண்கலம், வெள்ளி இன்னபிற உலோக பயன்பாடுகளை ஆலயங்களிலன்றி எங்கு காண்பீர்கள்? மாலை தொடுத்தல் , பூ அலங்காரம், கற்பூரம் என ஏகபட்ட கலாச்சார தொடர்ச்சிகளை ஆலயத்தில்தான் காணமுடியும்

ஆலயங்களும், இந்துமதமும் இல்லை என்றால் இவை எல்லாம் என்றோ அழிந்திருக்கும்.

நாதஸ்வரமும், தவிலும் இன்னபிற தமிழன் இசைகருவிகளும் ஆலயங்களும் மதமும் இல்லை என்றால் என்றோ வங்ககடலில் வீசபட்டிருக்கும்...

தமிழக கலாச்சாரம் சர்வ நிச்சயமாக ஆலயங்களில் வாழ்கின்றது, அவை இருக்கும்வரை தமிழன் கலாச்சாரம் அழியாது.

இன்னொரு கோணத்தில் விவசாயம் கால்நடைகள நம்பி மாட்டுவண்டி, உழவு என சகலத்திற்கும் காளைகளை நம்பி இருந்தால் கூட ஜல்லிகட்டு தொடர ஓரளவு சாத்தியம்

ஆனால் அப்படி அல்ல எல்லாம் மிஷினாகிவிட்டது

ஆக தனி விளையாட்டான ஜல்லிகட்டு காலவோட்டத்தில் மறைந்தே போகும். நிச்சயம் நடக்கும்

4 தலைமுறைகளுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக அது கைவிடபடும், அடுத்த 30 ஆண்டுகளில் அது நின்றுபோகும்.

ஒரு காலத்தில் தமிழகமெங்கும் நடந்த விளையாட்டு பின் மதுரை வட்டாரத்தில் குறுகிபோயிற்று, இந்த தடை இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அது அழிந்துதான் போகும்

உலகம் அவ்வளவு அவசரகோலமாக மாறிகொண்டிருக்கின்றது, மக்களின் வாழ்வியல் முறையே மாறிகொண்டிருக்கின்றது, மிக வேகமாக மாறிகொண்டிருக்கின்றது

தானாக வருங்காலத்தில் நின்றுபோகும் விளையாட்டிற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்..















No comments:

Post a Comment