Tuesday, January 24, 2017

உடன்பிறப்பே...



Image may contain: 1 person, sitting



உடன்பிறப்பே


நடந்து முடிந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியான தொடக்கமாகவும் , நோக்கம் நிறைவேறினாலும் விரும்பதகாத முடிவாகவும் நான் கண்டதை போலவே நீயும் கண்டிருப்பாய்


அன்று இந்திக்கு எதிராக நம் பகுத்தறிவு ஆசான் பெரியார் காட்டிய வழியில் தமிழகம் பூண்ட போர்கோலத்திற்கு கொஞ்சமும் குறையாத எழுச்சி அது.


என் இளமை காலத்தில் போராடிய அந்த ஊக்கமான போராட்டத்தை ஒவ்வொரு மாணவ கண்மணியிடமும், இன்று சக்கர நாற்காலியில் இருந்து என்னையே கண்ட வீரவரலாறு இது.


இதனை எண்ணி எண்ணி பேருவ‌கை கொள்கின்றேன், ஆனந்த கண்ணீர் சிந்துகின்றேன்


உரிமையினை மீட்ட இந்த நேரத்தில், வெற்றி முரசு கொட்டும் இந்த நேரத்திலும் சில உறுத்தல் கண்டாயா?, வெற்றி மாலையினை கரங்களில் எடுக்கும் பொழுது நம் கண்களில் விழுந்த சில மணலை பார்த்திருப்பாய்


அண்ணா இறந்தபொழுது, அருமை நண்பர் ராமசந்திரன் இறந்தபொழுது, சீரணி அரங்கம் இடிக்கபட்டபொழுது, தமிழ்மான கண்ணகி சிலை இடிக்கபட்டபொழுது எப்படி மெரினாவினை நினைத்து அழுதேனோ அப்படியே நேற்றும் அந்த மெரினாவினை கண்டு அழுதேன்


மாணவர் குழாம், படையாக மாறி. கடல் மணலா இல்லை கண்மணிகள் தலையா என ஒரு வார காலம் மிக அமைதியாக நடந்து, வெற்றி கனியினை ஈட்டிய போராட்டம் இறுதி நாளில் கசந்தது ஏன்?


வெற்றி மாலையில் இடம்பெற்ற அந்த மலர்கள், கசக்கி எறியபட்டது ஏன்?


அங்குதான் புல்லுறுவிகளின் அக்கிரமும், மான் கூட்டத்தில் புகுந்த நரிகளின் தந்திரமும், களிறுகள் மத்தியில் புகுந்த மலைபாம்பு கூட்டத்தின் வலைபின்னலும் தெரிகின்றது


வட்டமிட்ட கழுகுகள் தரையிரங்கிய நேரமது, வாய்பிளந்து நின்ற ஓயாய்கள் பாய்ந்த தருணமது.


உனக்கு நினைவிருக்கின்றதா?, யாரும் மறக்கமுடியாதது அது


இதே வங்க கடலுக்கு அப்பால், ஒரு தலைக்கணம் பிடித்த சிறுக்கன், கோடரிகாம்பு ஒருவனால் தமிழினம் சிக்குண்டிருந்தபொழுது நம்மை எப்படி எல்லாம் தூற்றினார்கள், இந்த கழக அரசு ஓயவேண்டும், கருணாநிதி சாகவேண்டும் என்றெல்லாம் நம்மேல் புழுதி வீசினார்கள்


யார் வீசினார்கள்?


கொடுமதியாளர்கள், குரங்கு மதியாளர்கள் இன்னபிற புல்லுருவிகள் எல்லாம், அதாவது தமிழனுக்காக் புல் கூட பிடுங்காதவன் எல்லாம் வாய்க்கும் ஆசனவாய்க்கும் வந்ததெல்லாம் பேசிய காலம் அது.


அவர்கள்தான் இன்றைய நிழல்முதல்வர் என பத்திரிகைகளில் சொல்லபடும் நண்பர் நடராசனுக்கு தளகர்த்தர்கள். முள்ளிவாய்க்கால் நினைவு மண்டபம் என ஒன்றை கருணாநிதி என்பவனை திட்டிகொண்டே தஞ்சையில் திறந்தவர்கள்,


அதன் பின் மறைந்த ஜெயலலிதா அம்மையார் அதனை இடித்தபொழுதும் கருணாநிதி ஒழிக என சொல்லிகொண்டே அழுதவர்கள்


அப்படிபட்ட அந்த குரங்கு கும்பலை, வானர சேனையினை இன்னும் பலரை அக்கரை தமிழன் தாக்கபட்டபோது அக்கறையாக பொங்கியவர்களை இக்கரை தமிழன் தாக்கபடும்பொழுது கண்டாயா?


இன்று அவர்கள் ஆட்சி, அன்றே மொழிப்போரில் பங்குபெற்று என் சீடனாகி என் கையால் தாலிகொடுத்து திருமணம் செய்துவித்த தில்லையாரின் ஆட்சி


மறைமுகமாக அது ஒருஆண்டாள் ஆட்சி, இன்னும் மறைமுகமாக அது தில்லையம்பல ஆட்சி. அபிஷேக "பன்னீர்" என்பது என்றுமே மூல தெய்வம் ஆகாது


அந்த "பன்னீர்" சிலையின் தலைவழியே ஊற்றபட்டு சிலையில் காலருகே வழிந்தோடும் அபிஷேக "பன்னீரே" அன்றி அது தெய்வம் ஆகாது.


அங்கு இப்பொழுது அம்மையார் இல்லை எனினும் ஆண்டாள் ஆட்சியே


நாம் என்ன கேட்கின்றோம்?


நேற்று மாணவர்கள் தாக்கபட்டபொழுது இதே வானரங்கள் இன்னபிற ஈழஆந்தைகள் எல்லாம் அந்த நடராசனை சூழ்ந்து அய்யா நம் மாணவ செல்வங்களை காப்பாற்றுங்கள் என சொன்னால் என்ன?


அந்த பன்னீரை சந்தித்தோ முடியாவிட்டால் கண்டித்தோ முழங்கினால் என்ன?


செய்ய மாட்டார்கள் உடன்பிறப்பே


அரசு தோல்வி, ராஜினாமா போன்ற வார்த்தைகளை காதினை தீட்டிவைத்தும் கேட்டாயா? எந்த காதுகளுக்கும் அப்படி ஒரு வார்த்தை வரவில்லையாம்


ஆனால் நமது அரசென்றால் காற்றேல்லாம் இதே வார்த்தைகள் அல்லவா வரும்?


இதே நம் அரசு என்றால், ஏய் கருணாநிதி உனக்கெதெற்கு டெல்லியில் எம்பிக்கள், உனக்கு எதற்கு அரசு, உனக்கெதற்கு கண்ணாடி, பதவி விலகினாலும் உன் பாவம் போகாது, நீ செத்தே தீரவேண்டும் என கொதிப்பார்கள்


இந்த திண்ணை வீரர்களின் சாகசத்தை, இப்படியும் இவர்கள் காட்டும் தந்திரத்தை, இந்த செந்ந்நாய் கூட்டத்தை, சிறுநரி மூளையினை நீ என்னைபோலவே புரிந்து கொள்வாய் என நம்புகின்றேன்


என் இன்மான தமிழினமே


பெரியாரும் அண்ணாவும் கற்பித்த எழுச்சியினை உங்களில் கண்டேன், நீங்கள் உரிமை மீட்டதையும் கண்டேன். இனி எம்மை போன்றவர்கள் இல்லை எனினும் இந்த தமிழகம் தன் உரிமையினை காக்கும் என்ற மகிழ்ச்சியில் என் காலம் கழிந்தாலும் நிம்மதியாக ஏற்றுகொள்வேன்


நாங்கள் பட்டபாடு வீண்போகவில்லை, நாங்கள் ஊட்டிய மான உணர்ச்சி பட்டுபோகவில்லை என்பதை உச்சம் தொட்டு காட்டிய உங்களை ஆரதழுவி நன்றி தெரிவிக்கின்றேன்


இனி நீங்கள் படியுங்கள், கூடவே திராவிட கொள்கைகளையும் படியுங்கள். கல்வி உங்கள் அறிவை கூர்மையாக்கும் ஆயுதம், திராவிட கொள்கைகள் இந்நாட்டில் அவ்வப்போது எழும் சில அடக்குமுறைகளை அடித்து நொறுக்கும் சம்மட்டி.


என் அருமை உடன்பிறப்பே


தமிழர் அமைப்புகள் என சொல்லிகொண்டு இன்று நடராஜனின் கூட்டாளியாக இருந்துகொண்டும் ஒன்றும் செய்யாமல் நீலிகண்ணீர் வடிக்கும் இந்த கோட்டான்கள்தான் நம்மை நோக்கி ஒரு காலத்தில் கத்திகொண்டிருந்தன‌


இன்று மெரினாவில் அவர்கள் வேடம் கலைந்ததில் அவர்கள் நாறி கொண்டிருக்கின்றார்கள்


சத்தியம் சாகாது, திராவிடம் தோற்காது என்பது உண்மையாகவிட்டது


வாழ்க திராவிடம், மீள்க அதன் உரிமைகள்


தொலையட்டும் புல்லுருவி, மெரினாஉருவி கூட்டம்..





























No comments:

Post a Comment