Saturday, January 21, 2017

ஜெயா டிவியும் சின்னம்மாவும் ....




இந்தியாவும் உலகமும் தமிழக ஜல்லிகட்டு போட்டியினை வியப்பாகவும், பெருமையாகவும் பார்த்துகொண்டிருக்கும் பொழுது ஜெயா டிவி மட்டும் சசிகலாவினை பெருமையாக பார்த்துகொண்டே இருக்கின்றது


அதாவது ஜல்லிகட்டு நடத்த சின்னம்மா பெரும் பாடு படுகின்றார், மக்களை சந்திக்கின்றார், மத்திய அரசின் முதுகில் சாத்துகின்றார் என ஏக இம்சைகள்


ஆனால் சந்திக்கும் மக்கள் எல்லாம், சின்னம்மா ஜல்லிகட்டை நடத்த நீங்கள் பாடுபடுங்கள், நன்றிகடனாக நீங்கள் முதல்வாராக நாங்கள் பாடுபடுகின்றோம் என கண்ணீரை துடைகின்றார்களாம்





இனி ஜல்லிகட்டு நடந்தால் அந்த டிவி என்ன சொல்லும்?

சின்னம்மாவின் சினம்கொண சீற்றத்தால் பணிந்த மத்திய அரசு வாடிவாசலை திறந்தது என சொல்லும் அதனையாவது சிரித்து கடந்துவிடலாம்

ஆனால் அவர்கள் அப்படி விட்டுவிடுபவர்களா அவர்கள்? அதற்கு மேலும் சொல்வார்கள்

"50 எம்பிக்கள், 130 எம்எல்ஏக்கள் வாழ்த்தியதில் ஜல்லிகட்டில் கலந்து காளையினை அடக்கினார் சின்ன அம்மா, அடங்கிய காளை மாலையினை சின்னம்மா கழுத்தில் மாலையாக போட்டது

உடனே கூடியிருந்த வெளிநாட்டுக்காரர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் கண்காணிப்பாளர்கள், விலங்கியல் ஆர்வலர்கள் , பொதுமக்கள் எல்லோரும் சின்னம்மா முதல்வராக வற்புறுத்தினார்கள்" என சொல்லும்

அவர்கள் நிச்சயம் சொல்வார்கள், அவர்கள் இருக்கும் கனவு உலகம் அப்படியானது. அவ்வுலகத்தில் சசிகலா, ஜெயாடிவி என இருவர் மட்டுமே இருக்கின்றார்கள்

அதுவும் மகா இயல்பாக, சீரியசாக சொல்வார்கள் பார்த்தீர்களா? அதனை எப்படி தலையில் அடித்து கடந்து செல்ல முடியும் என்றுதான் தமிழகம் யோசித்து கொண்டிருக்கின்றது.

அந்த ஜெயா டிவி செய்தி தயாரிக்கும் குழுவினை ஒருமுறை பார்த்து வாயில் கைவைத்து சிரிக்கவேண்டும்,

அதற்குள் அவர்களே அழுதுவிடுவார்கள், அவர்கள் நிலை அப்படி. அந்தோ பரிதாபம்.








போயஸ் கார்டனில் சசிகலாவும் பன்னீர்செல்வமும் சந்தித்து ஆலோசனை



இருபெரும் அறிவாளிகள் எப்பொழுதுமே அடிக்கடி சந்தித்து ஆலோசனைகளை பரிமாறிகொள்வார்கள் என அன்றே சொன்னான் சாணக்கியன்.






ஜெயா முதல்வராக இருந்தால் புரட்சி தலைவியின் அரசின் நடவடிக்கை.


பன்னீர் முதல்வராக இருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை


ஆக அது தமிழக அரசு என்பதை அவர்கள் ஒப்புகொள்ளவே இல்லை

ஜெயா டிவி இம்சைகள்




 


No comments:

Post a Comment