Saturday, January 21, 2017

தேசிய கொடி புனிதமானது...





Image may contain: sky and outdoor


ஜல்லிகட்டு தடைக்கு தமிழகம் போராடிகொண்டிருக்க , பல வழிகளில் எல்லோரும் எதிர்ப்பினை தெரிவித்துகொண்டிருக்க சிலருக்கு தேசியகொடியினை வைத்து எப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என சிந்தனை ஓடிகொண்டிருக்கின்றது


அதாவது அதனை தலைகீழாக ஏற்றலாமா? அதில் எதிர்ப்பு கோஷம் எழுப்பலாமா? அசோக சக்கரத்திற்கு பதில் காளையினை வைப்போமா? என ஏக அழிச்சாட்டிய சிந்தனைகள்.


சிலருக்கு தேசியகொடியினை ஏற்றவே கூடாது எனும் முடிவு.





ஜனவரி 26 நாம் குடியரசான நாள், அதாவது ஒவ்வொரு இந்தியனை காக்கவும், நாட்டை காக்கவும், கலாச்சாரங்களை காக்கவும் சட்டங்கள் உண்டு என அறிவிக்கபட்ட நாள். இந்த சட்டங்களில்தான் இந்நாடு இயங்கிகொண்டிருக்கின்றது.

அன்று பீட்டா எல்லாம் இல்லை, அதனால் அம்பேத்கர் சட்டங்களை சுதந்திரமாக இயற்றமுடிந்தது, இன்று அப்படி அல்ல அடிக்கடி அதற்கு வெள்ளை அடிக்கின்றார்கள், சில நேரம் அவசரமாக அதனை சுரண்ட வேண்டி இருக்கின்றது

நிச்சயமாக ஜனவரி 26ம் தேதி இந்திய சட்டத்தின் நாள். அந்த சட்டத்தின் சில பிரிவுகள் நமக்கு எதிராக இருப்பதை எதிர்க்க வேண்டும், மொத்த சட்டங்களையும் அல்ல.

காரணம் நமக்கு பாதுகாப்பினையும் பல உரிமைகளையும் அச்சட்டமே கொடுத்திருக்கின்றது

அந்த பாதுகாப்பில்தான் நாமெல்லாம் குரல் எழுப்ப முடிகின்றது

ஆக அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் அடிக்கடி அந்த சட்டத்திற்கு சில ஜோடிப்புகளை செய்கின்றார்கள் அல்லவா? அதாவது இவர்கள் செய்யும் சில காரியங்கள்தான் இம்மாதிரியான சட்ட சேர்ப்புகளுக்கும், சில சிக்கல்களுக்கும் காரணம்

அதனால் நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது அந்த மாதிரி ஆட்சியாளர்களுக்கு? சில உரிமைகளை சட்டத்தின் மூலம் விளையாடும், அந்நிய சக்திகளுக்காக விளையாடும் ஆட்சியாளர்களுக்கு

தேசிய கொடி புனிதமானது, அதனை தொட முடியாது. அது நம்மை நாமே அவமானபடுத்துவது பொன்றது

ஜனவரி 26ல் தேசியகொடியினை ஏற்றத்தான் வேண்டும்

முழு உரிமை இருக்கும்பொழுது கம்பத்தின் உச்சம் வரை ஏற்றுவோம், இப்பொழுது நமக்கு சில உரிமைகள் இல்லை

அதனால் அரைகம்பத்தில் பறக்க வைக்கவும் முடியாது, யார் மண்டையினை போட்டார்கள் என பெரும் சர்ச்சை வரும்

அதனால் முக்கால் கம்பத்தில் பறக்க விடலாம்

யாரும் கேட்டால் சொல்லலாம், முழு உரிமை கிடைத்தால் முழுவதுமாக ஏற்றலாம், உரிமை குறைவு என்பதால் உயரம் குறைந்து பறக்கின்றது போதுமா?

அப்படி இல்லை என்றால் கால்கம்பத்தில் பறக்கவிடலாம், கேள்விகள் வரும்,

ஏன் இப்படி பறக்கவிட்டீர்கள்?

ஆளுபவர்கள் உண்மையாக செத்துவிட்டால் அரைக்கம்பம், எங்களை பொறுத்தவரை உயிரோடு செத்துவிட்டார்கள் அதனால் கால்கம்பம்





























No comments:

Post a Comment