Thursday, January 19, 2017

ஜல்லிகட்டுக்கு வாதாடி என்ன கிடைக்கும்?





முதல்வர் பன்னீர் செல்வம் மோடியிடம் முறையிட்டாராம், மோடி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றது, என்னால் உதவ முடியாது ஆனால் வேறு எல்லா உதவியும் (டீ போட்டு கொடுத்து விமானம் ஏற்றி விட்டிருப்பாரோ) செய்ய தயார் என சொன்னாராம்


உடனே பன்னீரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றதா? அப்படியா என சொல்லிவிட்டு வந்துவிட்டாராம்


இதே உச்சநீதிமன்றத்தில் ஜெயாவிற்காக நொடிபொழுதில் வாதாட ராம்ஜெத்மலானி வருவார், பால் நரிமன் வருவார் இன்னும் பல பிரசித்திபெற்ற வக்கீல்கள் வருவார்கள்





ஆனால் ஜல்லிகட்டிற்கு நியமிக்கபட்டிருக்கும் வக்கீல் யாரென தெரியுமா? தெரியாது. சு.சாமி மட்டும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக வாதாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன‌

ஆக ஜெயாவிற்கும் சசிகலாவிற்கும் கோடிகணக்கில் நீதிமன்றத்தில் செலவழிக்கும் அதிமுகவும் அதன் அரசும் ஜல்லிகட்டிற்கு ஒரு பைசாவும் நீதிமன்றத்தில் செலவழிக்கவில்லை என்பது நன்றாக தெரிகின்றது

பின் எப்படி தீர்ப்பு கிடைக்கும்?

ஜெயா வழக்கில் காட்டிய வேகத்தை பிரபல வழக்கறிஞர்களை நியமித்து ஜல்லிகட்டிலும் காட்டினால் என்ன?

கனிமொழி திகாரில் இருந்தபொழுது கோடி கொட்டி மீட்ட திமுக ஜல்லிகட்டு வழக்கில் செய்தது என்ன? மேக்ஸிஸ் வழக்கில் தயாநிதி மாறனின் வழகறிஞர் சம்பளம் என்ன?

அன்புமணி மீதும் வழக்கு உண்டு, அவரும் பல லட்சங்கள் செலவழித்து வழக்கு நடத்தினார்.

ஆனால் ஜல்லிகட்டிற்கு வழக்கு நடத்த ஓரு கட்சியும் முன்வரவிலை, இதே அவர்கள் கட்சி தலமை என்றால் செலவழிக்க பணம் கொட்டும்

எவ்வளவு பெரிய நாடகம் நடந்துகொண்டிருக்கின்றது என மக்கள் சிந்தித்தால் நல்லது.

வழக்குக்கு செலவழிக்காத தமிழக அரசுதான் கோடி கணக்கில் ஜெயா சமாதி கட்ட போகின்றதாம், கோடி கணக்கில் செலவழித்து சசிகலாவிற்கு பாதுகாப்பு வழங்குமாம்.

தமிழகம் முழுக்க ஜெயா சிலை வைக்க கட்சிக்கு பணம் உண்டாம்

ரெய்டில் அள்ள அள்ள வருமாம்

ஆனால் தமிழர்களின் மிக முக்கிய பிரச்சினைக்கு 5 பைசா செலவழிக்கமாட்டார்களாம், பொதுமக்கள் சொந்த செலவில் போராட வேண்டுமாம், மாணவர்கள் கத்தி கத்தி தெருவோடு அலையவேண்டுமாம்.

ஸ்டெர்லைட், புலிகளுக்காக வாதாடிய வைகோவினையும் இப்பொழுது காணவில்லை, வாதாடினால் என்ன? எப்படி வாதாடுவார்? அங்கு பெட்டி கிடைக்கும்

ஜல்லிகட்டுக்கு வாதாடி என்ன கிடைக்கும்?

என்னா நடிப்புடா சாமி....

எங்கப்பா ஆஸ்கர் கமிட்டி, இந்த பன்னீர் கும்பலுக்கு 10 குடுங்கப்பா, அப்படியே ஸ்டாலின் கோஷ்டிக்கும் அன்புமணிக்கும் 2

புலிகளுக்கு தடை விலக்க தானே வாதாடி பின் ராம்ஜெத்மலானி வைத்து வாதாடிய இன உணர்வாளர்களுக்கு 1

என மொத்தம் 15 ஆஸ்கர் அவார்டுகள் அவசியம் தேவை, அப்படி ஒரு பிரமாண்ட நடிப்பு இங்கு அரங்கேறி கொண்டிருக்கின்றது







No comments:

Post a Comment