Thursday, January 12, 2017

இந்தி எதிர்ப்பு போராட்டமும், இன்றைய ஜல்லிக்கட்டு போராட்டமும் ...


Image may contain: one or more people, crowd and outdoorImage may contain: one or more people, crowd, meme and text







ஜல்லிகட்டினை காக்க தமிழகம் முழுக்க இளைஞர்கள் எழுகின்றார்கள், போராட்டம் நடத்துகின்றார்கள்


முன்பு இப்படி இந்தியினை விரட்டி தமிழைகாக்க கிளம்பினார்கள், இதனைவிட மிக வீரியமான போராட்டம் அது, தற்கொலைகள், ஏராள பலிகள், 65 பேர் துப்பாக்கி சாவோடு அது முடிந்தது.


அப்படி ஒரு எழுச்சி இனி தமிழகத்தில் நடக்காது, அப்படி ஒரு போராட்டம் இனி தமிழகம் காணாது.




சரி அப்படிஎல்லாம் போராடி இந்தியினை விரட்டி, தமிழை எப்படி காத்துவிட்டோம்


இந்தி இன்று மெதுவாக வந்துவிட்டது, பகிரங்கமாகவே தமிழகத்தில் பாடம் நடத்துகின்றார்கள்


தமிழை எப்படி காத்துவிட்டார்கள்? தொலைகாட்சி தமிழே போதும்


அதாவது உணர்ச்சி வேகத்தில் போராட்டங்கள் நடத்துவதோடு சரி, அதன்பின் எதற்காக போராடினோம்,அதன் விளைவு எப்படி இருக்கின்றது என சிந்திப்பவன் அல்ல தமிழன்


அப்படி தமிழை காப்பாற்றிவிட்டவன் போல இப்பொழுது தமிழ்காளைகளை காக்க கிளம்பிவிட்டான்


தடை நீங்கினால் கொஞ்ச காலத்தில் தானாகவே ஜல்லிகட்டு நின்று போனாலும் அவன் கவலைபடமாட்டான்,


அன்று மொழிப்போர் என எத்தனை உயிர்களை தமிழுக்காக கொடுத்துவிட்டு, இன்று தமிழகம் ஆங்கில பள்ளிகளால் நிறைந்து, தமிழ் சுத்தமாக கெட்டு மறைந்துகொண்டிருப்பதை பற்றி எப்படி அவன் கவலை படவே இல்லையோ


அப்படி போராடி பெற்ற ஜல்லிகட்டு தானாக நின்றாலும் அவன் கவலைபடமாட்டான்


அவன் சுபாவம் அப்படி..


















ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது : சுப்ரீம் கோர்ட்

உடனடியாக தீர்ப்பு சொல்லி யார் கேட்டார்கள்?

குற்றவாளிக்கு கூட பெயில் வசதி சட்டத்தில் உண்டு,


அப்படி பெயில் முறையில் ஜல்லிகட்டு நடத்திவிட்டு வருகின்றோம், தீர்ப்பினை 6 மாதம் கழித்து சொல்லுங்கள் ஒன்றும் பிரச்சினை அல்ல.

நடத்தலாமா? வேண்டாமா? என தீர்ப்பில்தானே சொல்வீர்கள், அதற்கு முன் நாங்கள் விளையாடிவிட்டு வந்துவிடுகின்றோம்..

வழக்கு முடியும் வரை குற்றவாளியினை உள்ளேயா வைத்தீர்கள்?

அப்படியானால் சசிகலா முதல் கனிமொழி, தயாநிதி மாறன் வரை வெளியே சுற்றமுடியுமா?

அப்படி வழக்கு முடியும் வரை ஜல்லிகட்டு விளையாட எங்களையும் அனுமதியுங்கள்..

சரி கன்னடன் உங்கள் உத்தரவினை அணையில் வீசினானே என்ன செய்தீர்கள் என்றா கேட்டுவிட்டோம்?

அப்படி எல்லாம் கேட்க மாட்டோம்












No comments:

Post a Comment