Friday, January 20, 2017

உச்சநீதிமன்றத்தில் தமிழகம் என்ன சொல்லவேண்டும்?




உச்சநீதிமன்றத்தில் தமிழகம் என்ன சொல்லவேண்டும்?


நீதிமன்றங்களில் உண்மையினை சொல்லி என்ன செய்யமுடியும்? வழக்கறிஞர்களே பொய்யில் வாதாடுவார்கள் என்பது உலகறிந்தது.


எல்லா நீதிமன்றங்களிலும் பொய்யான வாதமே வெல்லும் முன்பு ஜெயாவிற்கு ஜாமீன் கிடைத்தது போல‌





அதனை வள்ளுவன் பொய்மையும் வாய்மையிடத்து என எப்பொழுதோ எழுதிவைத்தும் விட்டான்

வள்ளுவன் வழியிலே தமிழகமும் சொல்லலாம்

"ஜல்லிகட்டு கலாச்சார பண்டிகை என்றால் வீட்டிற்கு வீடு பொங்கல் பானை வைப்பது போல காளை அடக்குவார்கள் அப்படி அல்ல‌

அது தமிழகம் முழுக்க அல்லாமல் மிக சில இடங்களில் ஆலயம் சம்பந்தபட்ட விளையாட்டு.

அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல் எல்லாம் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட காளைகளை மட்டும்தான் தொட்டு விளையாடுகின்றார்கள்

அவை எல்லாம் கோவில் காளைகள், கோவில் யானை இருக்கின்றதல்லவா? அப்படி கோவில் காளைகள்

அவற்றை தொட்டு ஆசிபெறுவது பக்தர்கள் நம்பிக்கை, அது அழிக்கும் சிவனின் வாகனம் என்பதால் மிக துணிந்தவர்கள் மட்டும் தொட்டு ஆசி வாங்குவார்கள்

அஞ்சியவர்கள் தள்ளிநின்று வணங்குவார்கள்

இது முழுக்க முழுக்க மத வழிபாட்டு கொண்டாட்டம்

இந்த மத நம்பிக்கையில் தலையிட சுப்ரீம் கோர்ட், ஐ.நா, பீட்டா, டிரம்ப் என யாருக்கும் உரிமை கிடையாது,

அப்படி உரிமை உண்டென சொல்வீர்கள் என்றால் ரம்ஜானுக்கும் பக்ரீத்திற்கும் அறுக்கபடும் ஆடு மாடுகளை தடுத்துவிட்டு அலங்காநல்லூர் கோவில் காளைகள் பக்கம் வாருங்கள்.."

என ஒரு வழக்கறிஞர் முழங்கினால் உச்ச நீதிமன்றம் என்ன கிழித்துவிடும்

ராஜாஜி, எத்திராஜ் போன்ற வக்கீல் சிங்கங்கள் இருந்த தமிழகத்தில் நல்ல வழக்கறிஞருக்கு பஞ்சமாகிவிட்டது

அதாவது அவர்களை போல‌ குதர்க்கமாக சிந்திப்பவர்களே நல்ல வழக்கறிஞர்களாக முடியும், இப்போதுள்ள தமிழக வழக்கறிஞர்கள் எல்லாம் மகா அப்பாவிகள் போல..





No comments:

Post a Comment