Tuesday, January 17, 2017

ஜல்லிக்கட்டை முன் வைத்து விபரீத கோரிக்கைகள் , நிகழ்வுகள் ....



பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிகட்டுக்கு ஆதரவாக போராட்டம் : செய்தி


எந்த மாணவன் ஒழுங்காக வகுப்பில் இருக்க ஆசைபடுவான்? வாய்ப்பு கிடைத்தால் அப்படியே பேராசிரியரை நொறுக்கி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவிற்கு அவர்கள் "போராட்ட" குணம் உண்டு.


ஜல்லிகட்டுக்கென்ன ஒருவேளை தவறான சிகிச்சையால் நயந்தாராவின் தலைமுடி ஒன்று உதிர்ந்தால் கூட அதனை கண்டித்து பெரும் போராட்டம் நடத்த அவர்கள் தயார்


ஒரு வாய்ப்புவேண்டும் அவ்வளவுதான்


சரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சென்ற பெரும்பான்மையான‌ மாணவர்களும் எங்கிருப்பார்கள்?


பைரவா தியேட்டரிலும், கிரிக்கெட் மேட்ச் இருந்தால் டிவி முன்னாலும் இருந்து ஜல்லிகட்டுக்காக போராடிகொண்டிருப்பார்கள்






பள்ளி செல்லாதவனும், ஒரு கலையினையும் முழுதாக பயிலாதவனும், கூத்தாடும் கோமாளியும் "வாத்தியார்" என அழைக்கபடும் தமிழகம் இது.


புரட்சி என்றால் என்ன அர்த்தம் என தெரியாதவனும் "புரட்சிக்கே தலைவன்" என கொண்டாடபடுவதும் இங்குதான்


விசித்திரமான தமிழகம்


ஜல்லிகட்டினை முன்வைத்து பல விபரீத கோரிக்கைகள் பிண்ணணியில் எழுப்பபடுகின்றன‌


தனிநாடு, அது இது என இதுதான் சாக்கு என ஒரு கும்பல் கொந்தளித்துகொண்டிருக்கின்றது, அவர்கள் அப்படித்தான் பருவமழை பெய்யவில்லை தமிழகத்தை தனிநாடாக்கி இலங்கையோடு இணைத்துவிட்டால் மழை கொட்டும் எனும் அளவிற்கு கடும் அறிவார்த்த கோரிக்கை.


தனிநாடு ஆகி என்ன செய்வீர்கள்? அப்பக்கம் இந்தியா இப்பக்கம் இலங்கை என இரு எதிரிகளை சம்பாதிப்பீர்களா? பாக்குவெட்டியில் சிக்கிய மாதிரி ஆகிவிடாதா?


இதற்கெல்லாம் தனிநாடா? என்றால் பின் ஜல்லிகட்டு எப்படி ஆடுவது என்கின்றார்கள்.


ஆண்டுகொருமுறை ஜல்லிகட்டு ஆடுவதற்கு தனிநாடு வேண்டுமாம், விளையாட்டு பிள்ளைகள் போல..


இன்னொரு கும்பல் இன்னும் விபரீத கோரிக்கைகளை வைக்கின்றது


அதாவது மாணவர்கள் கல்விநிலையங்களுக்கு மட்டம் போட்டுவிட்டு தொடர்ந்து போராடவேண்டுமாம், எப்படி இருக்கின்றது?


Image may contain: one or more people and text


சொல்வது யாரென பார்ததால் சினிமாக்காரர்கள்


அட பதர்களா, இந்த ஜல்லிகட்டு தடை நீங்கும் வரை தியேட்டர்களை மூடினால் என்ன? படபிடிப்புகளை நிறுத்தினால் என்ன? செய்வீர்களா?


இன்னும் எத்தனை தொழில்கள் உண்டு, அதனை எல்லாம் நிறுத்த சொல்வீர்களா?


ஜல்லிகட்டினை தடை செய்திருப்பது நீதிமன்றம், அப்படியானால் தமிழகம் முழுக்க கோர்ட்டுகளை புறக்கணிக்கலாம், நீதிமன்ற செயல்பாடுகளை முடக்கலாம், அது போராட்டம். அதனை செய்ய சொல்வீர்களா?


தமிழக அணுவுலை கழிவுகலிலிருந்து பெறப்படும் அணுகுண்டு மூலபொருளோ, நெய்வேலி மின்சாரமோ , ராக்கெட் எரிபொருள் மையமோ செயலபடாதவாறு அந்த பணியாளர் எல்லாம் வேலை நிறுத்தம் செய்யவேண்டும் என சொல்வீர்களா?


அவ்வளவு ஏன்?


மக்கள் உரிமையினை காக்க வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் அடங்கிய மாநில அரசின் பொறுப்பு, அவர்களை எல்லாம் ராஜினாமா செய்ய சொல்வீர்களா?


செய்ய மாட்டீர்கள்


ஆனால் மாணவர்களை தூண்டிவிடுவீர்கள்


முன்பு இந்தி எதிர்ப்பில் இப்படி தூண்டிவிட்டு ஆட்சியினை பிடித்தார்கள், அதன் பின் என்ன நடந்தது? சம்பாதித்தார்கள்


தமிழகத்தில் எங்கெங்கு பிரச்சினை வருகின்றதோ, அங்கெல்லாம் மாணவர்களை தூண்டிவிட்டு அவர்கள் கல்வியினை பாழாக்கி அவர்களை போராட வைத்து அதில் சம்பாதிக்கும் கூட்டம் இருக்கின்றது


இந்த விபரீத பைத்தியங்களுக்கு மாணவர் கூட்டம் பலியாகிவிட கூடாது


அவர்கள் படிக்கட்டும், கல்வியினை முடிக்கட்டும் அவர்களில் ஒரு அம்பேத்கரோ அல்லது ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியோ நிச்சயம் ஒளிந்திருக்கலாம்


அவர்கள் பின்னாளில் இவற்றிற்கெல்லாம் முடிவு கட்டலாம், அந்த வருங்கால தலைவர்களை இப்படி உணர்ச்சியேற்றி பாழாக்க வேண்டாம்


சினிமாக்காரர்களே , நீங்கள் தமிழகத்திற்கு ஏதும் செய்யவேண்டுமென்றால் இப்படி உசுப்பேத்தாமலும், சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் தொடர்பில்லை என அறிவித்தாலே போதும்.


மாநிலம் சிறக்கும்


கலைஞர், எம்ஜிஆர், ஜெயாவிற்கு பின் எந்த சினிமாக்காரனும் அரசியல் பக்கம் வரமாட்டான் என அறிவியுங்கள். காரணம் அவர்கள் கெடுத்ததே அவ்வளவு இருக்கின்றது, இன்னும் ஒருவன் வந்து கெடுத்தால் மாநிலம் தாங்காது.


பெங்களூர் திரைகாட்சிகளுக்கு அஞ்சி காவேரி விவகாரத்தில் நீங்கள் காட்டிய அமைதியும், முன்பு ஜெயாவிற்கு அஞ்சி நவதுவாரத்தையும் நீங்கள் பொத்திகொண்டிருந்ததும் உலகறியும்


இப்பொழுது மாணவர்கள் வாழ்வினை பாழாக்க கிளம்பிவிட்டீர்களா? உங்கள் சூழ்ச்சிக்கு மாணவர் கூட்டம் பலியாகாது,


மாணவர்களே, கல்வி ஒன்றே மனிதனை சிந்திக்க செய்யும், அது ஒன்றே உரிமை மீட்கும், வெறும் உணர்ச்சிகள் மனிதனை முட்டாளகவே ஆக்கும்


ஈழபோராட்டம் கற்றறிந்த ஒருவன் தலமையில் நடந்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காது, நன்கு கற்ற ஒருவன் தமிழக முதல்வராக வந்திருந்தால் இவ்வளவு சீரழிவுகள் வந்திருக்காது


ராஜாஜிக்கு பின் தமிழகம் கண்ட முதல்வர்கள் எல்லாம் 10ம் வகுப்பு தாண்டாதவர்கள் அண்ணா தவிர , அவருக்கும் அல்ப ஆயுசு


கலைஞர், எம்ஜிஆர் எல்லாம் 6ம் வகுப்பு கூட வரவில்லை, ஜெயா 10ம் வகுப்பு , ஆங்கிலத்தில் படித்ததால் அறிவாளி என அக்கட்சியினரால் சொல்லபட்டார்


பன்னீர்செல்வம் என்ன படித்தார் என அவரே சொல்லவில்லை, சசிகலா படிப்பு அவர் பேச்சிலே தெரியும்


ஆக நீங்களாவது படித்து நாளை வந்து தமிழகத்தை வாழ வையுங்கள், இந்த கூத்தாடிகள் பின் சென்று நீங்களும் வீழ்ந்து தமிழகத்தை நாசமாக்கிவிடாதீர்கள்


ஏம்பா கூத்தாடிகளா?


கல்வி நிலையங்களை மூடி போராட்டம் நடத்தினால் தடை நீங்குமா? எவன் சொன்னான்?


ஜல்லிகட்டு தடை நீங்கும்வரை டாஸ்மாக் அடைப்பு என அறிவிக்க சொல்லுங்கள், குடிமக்கள் பெரும் போராட்டம் நடத்துவார்கள்


டாஸ்மாக் இல்லாமல் அரசே தள்ளாடும், அலறி அடிக்கும் மாநில அரசு ஜல்லிகட்டிற்கு முடிவு சொல்லும்


அதனை விட்டுவிட்டு மாணவர்கள் படிக்காமல் போரடவேண்டுமாம்.


தமிழகத்தில் முதலில் தடை செய்யவேண்டியது இந்த சினிமாவினையும் அதன் அழிச்சாட்டியங்களையும்


என்ன துணிச்சல் இருந்தால் மாணவர்கள் படிப்பில் கை வைக்கபார்ப்பார்கள்?


இந்த கோரிக்கையினை கொடுத்தவன் எவன் என தெரியவில்லை, கண்டுபிடித்தால் அவனுக்கு "மாணவ துரோகி" "கல்வி தடைக்கல்" என பட்டம் கொடுத்து வங்க கடலிலே வீசலாம்...










விளையாட்டில் தன்னை அடக்க முற்பட்ட பெண்ணை வீழ்த்தி பலாத்காரம் செய்ய முற்பட்ட ஸ்பெயின் காளை: செய்தி


தமிழக காளைகள் தமிழர்களை போல கண்ணியமானவை.


இப்படி ஒழுங்கம் கெட்ட ஸ்பெயின் காளைகளை தடுக்காத பீட்டாதான் தமிழக காளைகளை தடுக்க வந்திருக்கின்றது


ஏய் பீட்டாவே ஒழுக்கம் கெட்ட காளை விளையாடும் ஸ்பெயின் ஜல்லிகட்டினை முதலில் நிறுத்து..






ஜல்லிகட்டு போராட்டம் மாணவர்கள் போராட்டம் மட்டும் கிடையாது. எங்களுடைய போராட்டமும் கூட : அமைச்சர் ஜெயகுமார்


பின் என்ன மண்ணாங்கட்டிக்கு அமைச்சர் பொறுப்பு? தூக்கி எறிந்துவிட்டு போராட வந்தால் என்ன?


மக்களுடையது எல்லாம் தங்களுடையது என பொதுவாக‌ எண்ணுவதை போல ஏதோ சொல்லிவிட்டார் அவ்வளவுதான்






ஜல்லிகட்டுக்கு புதிய‌ சட்டம் கொண்டுவந்தாலும் உச்சநீதிமன்றத்தால் தடை செய்ய முடியும் : பொன் ராதாகிருஷ்ணன்


அரசு ஒரு அறிவிப்பினை செய்து அது சரியா? தவறா? என உச்சநீதிமன்றம் விவாதித்து தீர்ப்பு வழங்கும் முன் முன் நாங்கள் 10 ரவுண்ட் விளையாட்டை நடத்திவிடமாட்டோமா?


எந்த நீதிமன்றம் ஒரே நாளில் தீர்ப்புவழங்கி இருக்கின்றது?





பாவம் பொன்னார் மகாபாரத கர்ணன் போல கலங்கி நிற்கின்றார்..








மக்கள் நினைப்பதை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும் : ராமதாசு


அதேதான், எப்படியாவது ஆட்சி கலைந்து தேர்தல் வரவேண்டும் அவ்வளவுதான் அய்யாவின் ஆசை.








No comments:

Post a Comment