Tuesday, January 10, 2017

உலகில் முன் தோன்றிய‌ மூத்த குடி அல்ல..

விவசாயி செத்துகொண்டிருக்கின்றான், விவசாயம் அழிந்துகொண்டிருக்கின்றது


விவசாயம் என்றால் என்ன என தெரியாதவனெல்லாம் விவசாயி பண்டிகையான‌ பொங்கலுக்கு போராட்ட பொங்கல் வைத்துகொண்டிருக்கின்றான்


மாநில அரசு தூங்கிகொண்டிருக்கின்றது




மணல் கொள்ளையே நிலத்தடி நீர்மட்டம் நாசமாகி விவசாயி தற்கொலைக்கு முதல் காரணம் என்கின்றது ஒரு செய்தி


மணல் கொள்ளையர்கள் யாரென்றால் இதே அரசியல்வாதிகள்..


ஆக விவசாயி செத்தாலும் கண்டுக்கொள்ளாதவர்கள் அவன் பண்டிகைக்கு மட்டும் கொடிபிடிப்பார்களாம்


எல்லாம் அரசியல், எவன் செத்தாலும் அதில் நடக்கும் அரசியல்,


ஈழ பிணங்களின் மீது கொஞ்சகாலம் நடந்த அரசியல் இன்று தமிழக விவசாயி பிணத்தின் மீதும் நடக்கின்றது.


ஏதோ எல்லோரும் உழுது விளைவித்து பொங்கல் கொண்டாட தயாரானது போல பொங்கி எழுந்துகொண்டிருக்கின்றார்கள்


தக்காளி கிலோ 50 பைசா கூடினாலும் வாங்காதவன், அது கிலோ 1 ரூபாய்க்கு வந்தபொழுதும் விவசாயினை ஆதரிக்காதவன் எல்லாம் பேசிகொண்டிருகின்றான்.


1 லிட்டர் தண்ணீர் 50 ரூபாய்க்கு விற்கும் மாநிலத்தில் எப்படி விவசாயிக்கு நீர் கிடைக்கும் என்று யோசிக்காதவன் எல்லாம் கத்திகொண்டிருக்கின்றான்


அவன் பண்டிகை மீதும் நடக்கின்றது


உணவுபொருள் எல்லாம் சல்லி விலையில் கிடைக்க வேண்டும், உழவனும் வாழவேண்டும் என்றால் எப்படி?


எந்த சக்தி உழவனை காக்கும்?


வியாபாரிகள் சுரண்டி கொழுப்பது உண்மை, சரி அந்த வரியிலாவது உழவனுக்கு ஒரு மானியம் கொடுத்தால் அவன் ஏன் சாவான்?


விளைபொருளுக்கு விலை இல்லை என உழவன் புலம்பினால், உன் பொருளை நீயே விற்றுக்கொள் என சொல்லி, அவனுக்கு சந்தை கொடுத்து காம்பவுண்ட் சுவற்றில் வசனமெல்லாம் எழுதினார்கள்


எப்படி அருமையான திட்டம்?


100 மூடை கத்தரிகாயினையோ, 300 வாழைகுலையினையோ அவன் அந்த சிறு சந்தையில் விற்க முடியுமா?


அட அவன் விவசாயம் பார்ப்பானா? அதிகாலை இங்கு வந்து வியாபாரம் பார்ப்பானா?


இப்படிபட்ட மகா அருமையான திட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் தீட்டபட்டன‌


குளங்கள் கட்டடம் ஆயின, வயல்கள் எல்லாம் கார் நிறுத்துமிடம் ஆயின‌


ஆனால் இவர்கள் வருடாவருடம் பொங்கல் கொண்டாடுவார்கள், தமிழர் பாரம்பரியம் அல்லவா?


விவசாயி பண்டிகையினை அவனை தவிர எல்லோரும் கொண்டாடுவார்கள் போல‌


அவன் கத்தி கத்தி பார்த்துவிட்டு கோவணமுமின்றி செத்துகொண்டிருக்கின்றான்


இவர்கள் அவனுக்கு பண்டிகையினை கொண்டாட போராடுகின்றார்களாம்..


விசித்திரமான தமிழினம் இது


இது உலகில் முன் தோன்றிய‌ மூத்த குடி அல்ல, உலகில் முதலில் கெட்டுகொண்டிருக்கும் குடி


இதனை விட கெட்டுபோன குடி உலகில் ஒன்றுமே இல்லை



No comments:

Post a Comment