Saturday, January 14, 2017

எம்ஜிஆர் பிறந்தநாள் தமிழகத்தில் அரசு விடுமுறை என அறிவிப்பாம்...

எம்ஜிஆர் பிறந்தநாள் தமிழகத்தில் அரசு விடுமுறை என அறிவிப்பாம்


அப்படி என்ன சாதனை செய்தார் அந்த பெருமகன்?


நடிகன் நாடாளவருமளவு இந்த சமூகம் முட்டாள்தனமானது என நிரூபித்தாரே அதற்கா? மூடவேண்டிய மதுகடைகளை திறந்து சாராய சேவை ஆற்றினாரே அதற்கா?


முல்லைபெரியாறு அணைநீர்மட்டத்தை குறைக்க சம்மதித்தாரே அதற்கா? இந்திய உளவுதுறைகளோடு சேர்ந்து தன் சொந்த ஆதாயத்திற்காக புலிகளை ஆதரித்து ஈழமக்களின் தீரா சோகத்திற்கு அஸ்திவாரம் வைத்தாரே அதற்கா?


ஜெயா, சசிகலா, பன்னீர் என தீராத தலைவலிகளை தமிழகத்திற்கு உருவாக்கிவிட்டு சென்றதற்கா?


தமிழகமெங்கும் சாராய ஆலைகளும், தனியார் கல்வி கொள்ளை நிலையங்களும், தனியார் மருத்துவ கொள்ளைகளும் ஆரம்பிக்க வழிவகுத்தாரே அதற்கா?


எத்தனை சாராய வியாபாரிகளை கல்வி தந்தை ஆக்கினார், அவர்கள் எல்லாம் எம்ஜிஆர் பிறந்தநாளைக்கு அரைநிமிடம் கூட விடுமுறை விட்டதில்லையே, நன்றிகெட்டவர்கள்


ஆனால் சசிகலாவும் பன்னீர்செல்வமும் நன்றி உள்ளவர்கள், தீர்க்கதரிசனமாக சிந்தித்து தங்களை அதிகார மையமாக்கிய அவர் பிறந்தநாளை பொதுவிடுமுறையாக்கி இருக்கின்றார்கள்


ஆச்சரியமாக அந்த ஜெயலலிதாவிற்கு அப்படிபட்ட நன்றி இல்லை, நன்றிகெட்டவராக இருந்திருக்கின்றார் அவர்.


இம்மாநிலத்தில் காமராஜர், ராஜாஜி,அண்ணா பிறந்த நாள் கூட அரசு விடுமுறை இல்லை, அவர்கள் செய்யாதைதா எம்ஜிஆர் செய்துவிட்டார்?


எம்ஜிஆருக்கு எல்லாம் விடுமுறை விட்டபின் காமராஜருக்கு எப்படி விட முடியும்? அவர் கனவுகண்டபடியே அக்குழந்தைகள் அவர் பிறந்தநாளிலும் படித்துகொண்டிருக்கின்றன‌


அப்படி திரையுலகமும் எம்ஜிஆர் பிறந்தநாளில் நடித்துகொண்டிருக்க வேண்டாமா?


என்ன கொடுமை எல்லாம் நடக்கின்றது?


6 வருடமாக தமிழகத்தை ஆளுகின்றார்கள், ஜல்லிகட்டு நடத்த துப்பில்லை. கேட்டால் திமுக காரணமாம். அண்ணா காரணம் என சொல்லுங்கள் பொருத்தமாக இருக்கும்


எப்படியும் போகட்டும்


இந்த எம்ஜிஆர் பிறந்தநாள் எல்லாம் அரசு விடுமுறை என்ற பின் இனி பல கோரிக்கைகள் வலுப்பெறும்


நாம் முந்திகொள்வோம்...


அப்படியே எங்கள் "பொன் அம்மா" குஷ்பூ அவதார நாளை பொதுவிடுமுறையாக அறிவிக்கும்படி கேட்டுகொள்கின்றோம்


வாழ்க குஷ்பூ...

No comments:

Post a Comment