Wednesday, January 18, 2017

பன்னீர்செல்வம் அரசு ஏன் அஞ்சுகின்றது...

இந்த பன்னீர்செல்வம் அரசு ஏன் அஞ்சுகின்றது, தடையினை மீறி ஜல்லிகட்டை நடத்தி ஆட்சி இழந்தால் என்ன?


அங்குதான் சிந்திக்கின்றார்கள், இனி தேர்தல் வைத்தால் தலைகீழாக நின்றாலும் ஜெயிக்க போவதில்லை என்பது புரிகின்றது


சரி நான்கு ஆண்டுகள் ஆண்டுக்குபின்னும் அதே நிலைதான்




எப்படியும் ஜெயிக்கவாய்ப்பே இல்லை. இந்த ஜல்லிகட்டிற்காக ஆட்சி இழந்தாலாவது மறுமுறை மக்கள் முன் நிற்க வாய்ப்பு கிடைக்கும்


திருந்திவிட்டோம் எப்படி உங்களுக்காக பதவியினை தூக்கி எறிந்தோம் பார்த்தீர்களா? வோட்டு போடுங்கள் என மக்கள்முன் செல்லலாம்


இப்படி சும்மாவே இருந்தால் ஊர்பக்கமே செல்லமுடியாது


நல்ல வாய்ப்பினை இழந்துகொண்டிருக்கின்றார்கள்,


சுத்தமாக அரசியல் செய்ய அக்கட்சியில் ஒருவருக்கும் தெரியவில்லை


இமேஜினை சர்ர்ரென்று உயர்த்தும் நேரத்தில் தடுமாறுகின்றார்கள்


ஆளும்கட்சி இப்படி என்றால் ஸ்டாலின் திமுக ஏதோ மகா ஜென்டில்மேன் கட்சி என்றே நினைத்துகொண்டிருக்கின்றார்


அக்கட்சியின் ஸ்பெஷாலிட்டியே போராட்டங்கள், அறிக்கைகள், நரம்பினை முறுக்கும் கேள்விகள் , குதர்க்கம்,நையாண்டி இன்ன பிற‌ போன்றவைதான்,
இன்று அதுவுமில்லை


ஆக முதல்வரும் பொம்மை, எதிர்கட்சியும் பொம்மை


களையிழந்தது தமிழக அரசியல் காட்சிகள்...


அம்மா சமாதியினை வணங்குதல், சசிகலா பாதுகாப்பு என்பதை விட இந்த அரசு என்ன செய்கின்றது? ஆட்சி போனால்தான் என்ன?






கலைஞர் சமாளிக்க முடியாத கட்டத்தில் அந்த வயதிலும் அரைமணி நேரமோ அரை நாளோ உண்ணாவிரதமாவது இருந்தார்


இந்த கட்சியும், அதன் முதல்வரும் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?


மவுன போராட்டமா?




அம்மா சமாதி முன் செய்தால் என்ன?









No comments:

Post a Comment