Sunday, January 15, 2017

எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா...

ku


குஷ்பு படங்களை ஒளிபரப்பாத டிவிக்களை வன்மையாக கண்டித்துவிட்டு,


அவர் நடித்த பாடலான "பூ பூக்கும் மாதம் தை மாதம்" எனும் பாடலை மட்டும் இரு நாட்கள் பார்ப்பதாக முடிவு


இதனை விட எப்படி பொங்கலை கொண்டாட முடியும்?






எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகின்றார்களாம், அதனால் சில டிவிக்களில் அவர் படமாக போட்டு தள்ளுகின்றார்கள்


அதுவும் ஜெயலலிதா நடித்த படமாகவே பொறுக்கி எடுத்து போடுகின்றார்கள், சில படங்களில் வி.என் ஜாணகியும் தலைகாட்டுகின்றார்


ஆக அக்கட்சியின 4 முதல்வர்களில் (நெடுஞ்செழியன் கணக்கில் வரமாட்டார்) மூன்றுபேர் நடிகர்கள், சுருக்கமாக சொன்னால் அதுதான் கட்சிபணி




அதாவது நடித்துவிட்டே முதல்வராகவேண்டும் என்பது அக்கட்சியின் மகா முக்கிய தகுதிகளில் ஒன்று.


இந்த பன்னீர்செல்வம் மட்டும் எப்படி கட்சிபணி ஆற்றாமல் முதல்வராக இருக்கலாம்?


ராஜ்கிரண் நடிக்கும் வேடங்களில் பொதுவாக பன்னீர்செல்வம் மிக அழகாக பொருந்துவார். கட்சிபணி செய்ய அவருக்கும் வாய்ப்பு இருக்கின்றது.


முதல்வர் கனவில் இருக்கும் சசிகலா என்ன வேடத்தில் நடிக்கலாம் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை






மாட்டுபொங்கல் அன்று ராமராஜனை மறந்துவிட்ட தமிழக டிவிக்கள் நன்றி கொன்ற பாவத்தை செய்துவிட்டன‌


மாட்டிற்காவே தன் சினிமா வாழ்வினை அர்பணித்த அவரை புறக்க்கணித்த தமிழகத்தில் எப்படி ஜல்லிகட்டு நடக்கும்?








No comments:

Post a Comment