Tuesday, January 10, 2017

லால்பகதூர் சாஸ்த்திரி





[caption id="" align="aligncenter" width="487"]Image may contain: 1 person, close-up தோற்றம் : 02-10-1904   :: மறைவு : 11-01-1966[/caption]

நேர்மை,வீரம், நாட்டுபற்று என சகலத்திற்கும் எடுத்துகாட்டாய் இருந்தவர் லால்பகதூர் சாஸ்த்திரி


இந்தியா சந்தித்த மிக தைரியமான பிரதமர்களில் அவரும் ஒருவர்.


சீனாவிடம் பின்வாங்கி, நேருவும் மறைந்த குழப்பான காலங்களில் இந்தியா சிக்கி இருந்தபொழுது பாகிஸ்தான் நரிதன திட்டமிட்டது,





அது எப்பொழுதும் அப்படித்தான், மிக நேர்த்தியாக திட்டமிடுவதாக செய்து வசமாக மாட்டிகொள்ளும்

அப்படி அந்த சிக்கலான காலங்களில் சாஸ்திரியினை மிக சாதரணமாக எண்ணி படையெடுத்தது.

அமைதியான சாஸ்திரி அன்று விஸ்வரூபம் காட்டினார், அவரிடம் அப்படி ஒரு துணிச்சலை உலகம் எதிர்பார்க்கவில்லை.

இந்தியாவின் பாதுகாப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தார், போரினை நிறுத்த அவர் சம்மதிக்கவில்லை. முழு காஷ்மீரையும் மீட்டெடுக்கும் திட்டம அவரிடம் இருந்தது

பாகிஸ்தான் தோல்விமுகத்தில் பதற, உலக நாடுகள் அழுத்தத்தில் சோவியத்தின் தாஷ்கண்ட் நகருக்கு பேசசென்ற சாஸ்திரி அங்கேயே உயிரிழந்தார்

இன்றுவரை அவரின் சாவும் மர்மமே

ஒரு ஒப்பந்தமுடிவுக்கு அவர் வந்திருந்தாலும், பாகிஸ்தானை விட்டு வைக்க கூடாது எனும் வேகம் அவருக்கு இருந்ததாகவும், இன்னும் அடித்து அந்நாட்டை துவம்சம் செய்யும் அவருக்கு இருந்ததாகவும் அதனைபற்றி பேசிய பின்புதான் அவரின் மர்ம மரணம் நிகழ்ந்ததாகவும் செய்திகள் உண்டு

சோவியத் ரஷ்யா மகா மர்மமான நாடு, நடக்கும் எதுவும் வெளியே தெரியவவே தெரியாது

சாஸ்திரி மாரடைப்பால் இறந்தார் என்றாலும், அவர் சாவில் சில சர்ச்சைகள் இருந்தது உண்மை

நிச்சயம் அவர் செத்தது இந்த நாட்டிற்காக‌

ஒரு வகையில் அவர்தான் இந்திராவிற்கு வழிகாட்டி

அதிகம் இந்தியாவில் பேசபடாத, ஆனால் மிக தைரியமான தலைவர் சாஸ்திரி, மிக குழப்பமான காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கு தண்ணி காட்டியவர்

மிக தூய்மையான அரசியல் வாழ்க்கை வாழ்ந்த தியாகிகளில் அவருக்கும் இடமுண்டு

மறக்கமுடியா அந்த தலைவனுக்கு இன்று நினைவுநாள்

காந்தி, இந்திரா, ராஜிவ் வரிசையில் நாட்டிற்காய் உயிர்நீத்தவர்களில் சாஸ்திரியும் ஒருவர்.

அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்

வந்தே மாதரம்..





























No comments:

Post a Comment