Tuesday, January 17, 2017

பீட்டாவிற்கு டாட்டா..

https://youtu.be/k7vLtuyLC_A

"விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனம் மீது குறி வைப்பது மலிவானது.விலங்குகள் மீது ஒவ்வொரு இந்திய குடிமகனும் கருணை காட்டுவது கட்டாயம் என்று அரசியல் சட்டம் கூறுகிறது.


எனவே, விலங்குகள் மீது கருணை காட்டுவதுதான் தேசபக்தி. அவற்றை துன்புறுத்துவது இந்தியத்தன்மை அல்ல. அந்த அரசியல் சட்டத்தையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மதித்துத்தான் விலங்குகளுக்கு சேவை புரிந்து வருகிறோம்"


இப்படி தடை கோரிக்கை வைத்த ஸ்டாலினுக்கு பீட்டா பதில் சொல்லியிருக்கின்றதாம்




தமிழர்களின் கலாச்சாரத்தை தடுக்கும் பீட்டாவினை தடை செய்ய வேண்டும் என்றார் ஸ்டாலின்


பைத்தியகாரதனமான பதிலை சொல்லியிருக்கின்றது பீட்டா


ரோட்டோரம் சுற்றும் நாய்களுக்கு பீட்டா செய்ததென்ன? சாலையோர மாடுகளுக்கும், சாக்கடை பன்றிகளுக்கும் பீட்டா செய்ததென்ன?


என்னது விலங்குகள் மேல் கருணையோடு இருக்க இந்திய சட்டம் சொல்கின்றதா?


யானைகள் வழியினை தடுத்து அவற்றை கொன்றுகொண்டிருக்கும் மலையடிவார ஆஸ்ரமங்களையும், கல்லூரிகளையும் சட்டம் என்ன செய்தது?


மான் சுட்ட சல்மான் கானினை சட்டம் என்ன செய்தது?


கேரளத்திலும், அசாமிலும் யானைகளை பயன்படுத்துவதை சட்டம் தடுத்ததா?


பாதுகாப்பு படையில் குதிரைகளும், ராஜஸ்தானில் ஒட்டகமும் பயன்படுத்தபடுவது என்ன வகை?


குதிரை ரேசில் என்ன குதிரையினை கொஞ்சி குலாவுகின்றார்களா?


இறைச்சிக்காக கொல்லபடும் மாடுகள் கணக்கு என்ன? இஸ்லாமிய பண்டிகை அன்று பீட்டா மாடுகளை வெட்டாதே என சொல்கின்றதா?


அவற்றை எல்லாம் தடுக்காத பீட்டா தமிழரின் ஜல்லிகட்டை மட்டும் தடுத்தால் அதனை தடை செய்யவேண்டும் என ஸ்டாலின் என்ன? குழந்தை கூட சொல்லும்


இந்திய தேசிய கீதம் கூட தெரியாத , பாலியல் நடிகை சன்னி லியோனை சிறந்த பெண் என பட்டம்கொடுத்து இந்திய கலாச்சாரத்தை கேவலபடுத்தும் பீட்டாவினை தடை செய்ய சொல்லும் உரிமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு


தமிழனுக்கும், இந்தியனுக்கும் உள்ள பூரண உரிமையில் ஸ்டாலின் சொல்வதை அழுத்தமாக சொல்கின்றோம்


பீட்டாவிற்கு வேண்டும் தடை
பீட்டாவிற்கு டாட்டா..


பாரத பெருமை காக்கவும், தமிழன் கலாச்சாரம் காக்கவும் பீட்டாவினை தடை செய்தே தீரவேண்டும்


இல்லாவிட்டால் திரிசாவிற்கு விருது கொடுக்க சன்னிலியோன் தமிழகம் வருவார்.


தமிழக அரசு செய்யவேண்டியது அலங்கநாலூரில் தடை உத்தரவு அல்ல‌


போட வேண்டியது பீட்டா மீது...


நாம் வளர்க்கும் விலங்குகள் மீது அவர்களுக்கு என்ன அக்கறை?


புல் வெட்டினாயா? தண்ணீர் காட்டினாயா? குளிப்பாடினாயா? காட்டில் மேய்த்தாயா?


குறைந்தபட்சம் சாணியாவது அள்ளினாயா?
என்ற வசனங்களை அந்த பீட்டாவின் பிடறியினை பிடித்து கேட்கின்றோம்..


உலகெல்லாம் உள்ள கோழிபண்ணை, இறைச்சி மாட்டு பண்ணை, இறால் பண்ணை, மீன்பிடிகப்பல், பன்றி பண்ணை , வாத்து பண்ணை எல்லாம் சுற்றிவிட்டு அதன் பின் பேசட்டும்


மாட்டோடு விளையாட கூடிய தமிழர்களை மாட்டோடு கேவலமாக அடித்து விரட்ட துணிந்த அரசினை முதலில் சொல்ல வேண்டும்


பீட்டாவும், அதனை தடை செய்ய துணியாத அரசும் ஒழியட்டும்








No comments:

Post a Comment