Wednesday, January 18, 2017

விடை பெற்றார் ஒபாமா..

 

https://youtu.be/j6gOKSVpqDQ

 





விடைபெற்றார் ஒபாமா

அந்த அமெரிக்காவில் கருப்பர்கள் மனிதர்கள் என்பதற்காக ஆபிரஹாம் லிங்கனையும், கருப்பர்களுக்கு உரிமை வேண்டும் என்பதற்காக மார்ட்டின் லூத்தர் கிங்கினையும் சுட்டு கொன்ற அமெரிக்காவின் முதன் கருப்பு அதிபர்


அந்த பெரும் பெருமையினை பெற்றவர் ஒபாமா




தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில் அவர் நன்றாகத்தான் ஆண்டார், அமெரிக்க மக்களுக்கு பெரும் குறையில்லை, ஒபாமா கேர் என இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டுவந்தார்


பொதுவாக அமெரிக்க அதிபர் பதவி என்பது உலக நாட்டாமை பதவி, அதில் என்ன செய்தார்?


ஒபாமா அமெர்க்காவிற்கு அச்சுறுத்தலான அல்கய்தாவினை பலம் குறைத்தார், பின்லேடனை போட்டு தள்ள அனுமதிகொடுத்தார், அதனை செய்தும் காட்டினார்


புஷ்ஷூம், கிளிண்டனும் செய்ய முடியாத விஷயத்தை ஒபாமா செய்தார்


இன்னும் இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரத்தில் நியாயமாக நடந்துகொண்ண்டார், இதனால் இஸ்ரேலின் எதிர்ப்பினை சம்பாதித்தாலும் ஓரளவு பாலஸ்தீன நியாயமான கோரிக்கைகளை ஏற்றார்


பெரும்பாலும் பெரும் போர்களை ஒபாமா தவிர்த்தார், அவர் நினைத்திருந்தால் இன்னும் பல போர்களை நடத்தியிருக்கலாம்


உக்ரைன், தைவான், சிரியா என பல இடங்களில் பெரும் போராக வெடித்திருக்கவேண்டிய விஷயங்களை அவர் அமைதியாக கையாண்டார், பாராட்டவேண்டிய விஷயம் அது


சீமானை கலைஞர் கண்டுகொள்ளாமல் வெறுப்பேற்றியது போலவே வடகொரிய அதிபரையும் வெறுப்பேற்றினார்


ஈரானை நொறுக்க எத்தனை வாய்ப்புகள் கிடைத்தும் அமைதிகாத்தார், சதாம் விஷயத்தில் அணு ஆயுதம் உண்டு என சொல்லிபடையெடுத்த் புஷ் எப்படி அவமானபட்டாரோ அப்படி அவமானபட ஒபாமா தயாராக இல்லை


மிகுந்த அடிபட்ட இனத்திலிருந்து உயர் பதவிக்கு வந்ததால் ஒரு நிதானமும், விட்டுகொடுக்கும் தன்மையும் அவரிடம் இருந்தது


பொதுவாக அமெரிக்க அதிபர்கள் செல்ல தயக்கம் காட்டும் மூன்றாம் உலக நாடுகளுக்கு சென்ற முதல் அதிபர் ஒபாமா, எல்லா நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் என்ற பந்தா இன்றி சென்றார்


சீனாவுடன் ஆரோக்கியமான போட்டி என பெரும் பதற்றத்தை தணித்த்தவர்


நோபல் பரிசுக்கு மிக தகுதியானவர் என்பதால் அவருக்கு அப்பரிசு கிடைத்ததிலும் ஆச்சரியமில்லை


அதிகாரம் இல்லா ஒருவன் அடங்கி இருப்பதில் என்ன இருக்கின்றது? வைகோவோ சீமானோ எவ்வளவும் மிரட்டலாம், குதிக்கலாம் என்ன நடந்துவிடும்?


ஆனால் வானாளாவிய அதிகாரம் இருந்தும், சொடுக்குபோட்டால் உலகினையே புரட்டிபோடும் வல்லமை இருந்தும் அமைதி காப்பனே உயர்ந்த மனிதன்


அவ்வகையில் ஒபாமாவிற்கு நோபல் பொருத்தமானது, அவர் தவிர்த்த யுத்தங்கள் அப்படி


50 வருடங்களுக்கு முன் ஒரு கருப்பு வம்சாவழி அமெரிக்க அதிபர் ஆவார் என்றால் வாய்விட்டு சிரித்திருபபார்கள்


ஆனால் ஒபாமா அந்த வரலாற்றினை மாற்றினார், முதல் கருப்பு அதிபர் என்ற முத்திரை பதித்தார்


நல்ல அதிபர் என்ற பெயரோடு விடைபெறுகின்றார்,


இன்று ஈழதமிழன் ஒருவன் இலங்கை அதிபர் ஆவார் என சொன்னால் எல்லோரும் சிரிக்கத்தான் செய்வார்கள், ஆனால் காலம் எல்லாவற்றையும் செய்யும், அப்படி அங்கு பிற்காலத்தில் தமிழன் அதிபராகலாம் அவர்கள் கண்ணீர் மாறலாம்


ஒபாமாவின் முத்திரை உலகின் எல்லா மூலையிலும் அடிபட்டு கொண்டிருக்கும் இனங்களுக்கான ஆறுதல் முத்திரை


பை பை ஓபாமா


நாளை அதிபராகிறார் டிரம்ப், அதாவது சர்வதேச வாடிவாசல் திறக்கபடுகின்றது. உலகம் பரபரப்பாய் எதிர்பார்க்கின்றது


ஆனால் புட்டீன் புன்னகைக்கின்றார், ஏதோ கண்ணுக்கு தெரியாத மூக்கணாங்கயிறு அவர் கையில் உள்ளது.


அதனால் ரஷ்யா தவிர அக்காளை எங்கு வேண்டுமானாலும் பாயலாம்.


 








Image may contain: 1 person, standing and suit






















No comments:

Post a Comment