Thursday, September 21, 2017

ரொகிங்கியா பிரச்சினைதான் என்ன?



No automatic alt text available.உலகம் முழுக்க ஏராளமான இனங்கள் உண்டு, அவைகள் எல்லாம் சில நேரம் இணைந்தோ, பல நேரம் தனியாகவோ வாழ்த்துகொண்டிருந்தன‌


அப்படி பர்மாவில் இருந்த இனம்தான் ரொகிங்யா, அது பர்மாவில் ஓர் இனம். தமிழக செட்டியார்கள் பர்மாவினை கட்டியாண்ட பொழுது, அவர்கள் ரொக்கைன் மாநிலத்தில் இருந்திருக்கின்றார்கள், அவர்களுக்கும் மொழி இன்னபிற விஷயங்கள் இருந்திருக்கின்றன‌


அதாவது சைமன் பாணியில் சொல்வதானால் அது ஒரு தேசிய இனம்.


அவர்களுக்கும் ஒரு காலத்தில் அரசன் எல்லாம் இருந்திருக்கின்றான், பர்மியர்களுக்கும் அவர்களுக்கும் அன்றே பொருந்தவில்லை, பர்மாவின் கடற்கரை பகுதி அது என்பதால் வங்கதேசத்துக்க்கும் அவர்களுக்கும் தொடர்பு அன்றே இருந்திருக்கின்றது.


பின்பு பிரிட்டன் வந்தபொழுதும் அவர்களை பர்மா குடிமக்களாக நடத்தியிருக்கின்றது. வங்கம், பர்மா, ரொகிங்யா எல்லாம் பிரிட்டனிடம் இருந்தவரை அவர்களுக்கு சிக்கல் இல்லை


Image may contain: 1 person, hatபின்பு சிக்கல் பர்மா சுதந்திரபோரில் தொடங்கியிருக்கின்றது, பர்மாவின் சுதந்திர தந்தை ஆங்சான். அவர் ஒரு கம்யூனிஸ்ட் போராளி.


பர்மா விடுதலையின் பொழுதே ரொகிங்கியா மக்கள் தனிநாடு கோரினர்.


பொதுவாக தான் ஆண்ட நாடுகளில் ஏதாவது கொளுத்திபோடுவது பிரிட்டன் ஸ்டைல். இந்தியா பாகிஸ்தான், ஈழம் சிங்களம் என பிரித்துபோட்டு ரசிப்பார்கள்


அப்படி ரொகிங்கியா சிக்கலை தூண்டிவிட்டார்கள், ஆனால் ஆங்சன் அதனை வேறுமாதிரி கையாண்டார்


நாமெல்லாம் பர்மியர்கள் , நீங்கள் இப்பொழுது தனிநாடு கேட்டால் பர்மா விடுதலை சிக்கலாகும் அதனால் முதலில் நாம் ஒற்றுமையாக விடுதலை கேட்கலாம், அதன் பின் உங்களை பர்மாவோடு இணைப்போம் என்று காய் நகர்த்தினார்


அப்படி மைனாரிட்டி ரொகிங்கியா அமைதியாக, பர்மா விடுதலையும் பெற்றது.


(இல்லாவிட்டால் கிழக்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ரொகிங்யா மாறியிருக்கும்.)


இனி ரொஹிங்யா பர்மாவின் ஒரு பகுதி என்றார் ஆங்சன், ஆனால் அம்மக்களை முறையாக இணைத்து குடியுரிமை கொடுக்கும் முன் கொல்லபட்டார்.


ஆங்சனின் மரணமே ரொகிங்யா மக்களின் கண்ணீருக்கு முதல்படி


Image may contain: 1 person, smiling, close-upஅதன் பின் ஏகபட்ட குழப்பம், தமிரர்களை விரட்டுதல், 
அண்டை நாட்டு அரசுகள் கண்ணசைவில் ராணுவ ஆட்சி என ஏக சிக்கலுக்குள் பர்மா சிக்க ரொஹிங்க்யா மக்களை பற்றி கவலைபட பர்மா அரசுக்கு தெரியவில்லை


குடியுரிமை இல்லை, நாட்டு மக்கள் என்ற அடையாளமில்லை, எப்படி ரொகிங்க்யா மக்கள் வாழமுடியும்? கேட்டால் பதிலே இல்லை


ஒரு கட்டத்தில் அவர்கள் வன்முறையில் இறங்க, இத்தரப்பில் புத்த குருக்கள் இறங்க, நீங்கள் வங்கத்தில் இருந்து வந்தவர்கள் அங்கே போங்கள் நிலம் எங்களுடையது என மிரட்ட சிக்கல் வெடித்தது.


அது இன்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்கின்றது, கிட்டதட்ட 12 லட்சம் ரொகிங்கியாவினர் இன்று இருக்கலாம்.


அவர்களுக்கு குடியுரிமை கொடுத்து பர்மியர்கள் ஆக்கிவிட்டால் சிக்கல் இல்லை, ஆங்க்சன் அதனைத்தான் செய்வதாக சொன்னார், ஆனால் கொல்லபட்டுவிட்டார்


இன்று பர்மாவின் பெரும் தலைவியான சூகி அவரின் மகள். அவரின் அரசியல் வாரிசு


தந்தையின் பணியினை தொடர்ந்து , தந்தை வாக்களித்தபடி அம்மக்களை அரவணைக்கவேண்டிய அவரோ மகா அமைதி


நேற்று பேசிய 30 நிமிட உரையிலும் அவர் ரொகிங்ய சிக்கல் பற்றி சொல்லவே இல்லை


அம்மக்கள் உலகெல்லாம் அகதிகளாக அலையும் வேளையிலும் அம்மணி கண்டுகொள்ள தயங்குகின்றார்


காரணம் அம்மக்களுக்காக இறங்கிவந்தால் உள்நாட்டு எதிர்ப்பினை சந்திக்கவேண்டும்


அதே நேரம் காலம் காலமாக வாழ்ந்துவந்த மக்களுக்கு குடியுரிமை கொடுக்கமாட்டோம் என்பதும், நிலம் எங்களுக்கு ஆனால் மக்கள் எம்மக்கள் அல்ல என்பதும் பெரும் அநியாயம், அதனை உலகநாடுகள் கண்டிக்க தொடங்கியாயிற்று


அவரோ அசைவதாக தெரியவில்லை, சிக்கல் நீடிக்கின்றது. அகதிகள் வெளிநாட்டில் குவிவதால் அக்கம் பக்கம் நாடுகள் கண்களை உருட்டுகின்றன‌


தந்தையின் வாக்குறுதியினை அவர் நிறைவேற்றுவாரா அல்லது தந்தையின் ஆன்மா மன்னிக்காதபடி பெரும் தவறு புரியபோகின்றாரா? என ஏகபட்ட கேள்விகள் அவரை சுற்றி நிற்கின்றன‌


வாக்கு அரசியல் எவ்வளவு பெரும் தலைவனையும் அவமானபட வைக்கும் என்பதற்கு இன்று ஆங்சன் சூகிதான் உதாரணம்.


நீங்கள் நாடில்லாதவர்கள் என பல லட்சம் மக்கள் விரட்டபடுவது ஒன்றும் புதிதல்ல, 1965ல் இலங்கை மலையக மக்கள் அப்படித்தான் இந்தியாவிற்கு விரட்டபட்டனர்Image may contain: 3 people, people sitting and night


அதனை எந்த தொப்புள்கொடி உறவும் யாழ்பாணத்தில் கண்டிக்கவில்லை, தீ குளிக்கவில்லை, கத்தவில்லை


மாறாக சிங்களனோடு அமர்ந்து டீ குடித்துகொண்டிருந்தனர்.


ஆயினும் 1980களில் ஈழ மக்கள் அகதிகளாக வந்தபொழுது அகில உலகிலே அதனை கண்டித்து தலையிட்டு அம்மக்களுக்கு உரிமை கொடு என சொல்லி, போராளிகளுக்கு உதவி , பல நெருக்கடிகளை கொடுத்து சிங்களனை இறங்கிவர செய்தது இந்தியா


ஆனால் புலிகளின் அடாவடியில் இன்று அவர்களுக்கு ஒன்றுமேயில்லை, இந்தியாவும் ராஜிவ் கொலைக்குபின் ஒதுங்கி கொண்டது


ரொஜிங்யா முஸ்லீம்களுக்கு உதவ யாருமில்லை , ஆனால் கிடைத்த உதவிகளை எல்லாம் நாசமாக்க்கி ஒன்றுமில்லாமல் போன ஒரே இனம் ஈழதமிழினம், அதற்கு காரணம் யார்? என சொல்லி தெரியவேண்டியதில்லை.


இதோ ஆங்சனுக்கு பின் சூகி வந்து தடுமாறுகின்றார், ரொஜிங்க்யாவில் தலையிட்டால் உயிர் முதல் பதவி வரை ஆபத்து என்பதால் அஞ்சுகின்றார்


ஆனால் இந்திராவினை தொடர்ந்து வந்த ராஜிவ் அஞ்சாமல் ஈழத்தில் தலையிட்டார். தாய் தலையிட்டு அமிர்தலிங்கத்திடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரும்பாடுபட்டார்


அதில் உயிரையும் விட்டான் அந்த உன்னத தலைவன், இம்மாதிரி குழப்பங்கள் உலகில் வரும்பொழுதுதான் அம்மனிதனின் தியாகம் உலகிற்கு தெரியும்


ரொகிங்யா மக்களின் நிலையில், ஆங்க்சனின் வாக்குறுதியினை நிறைவேற்ற மகள் தயங்கும் நிலையில், ஈழ தமிழருக்காக, தன் அன்னையின் வாக்குறுதிக்காக‌ உயிர்விட்ட ராஜிவ் மகா உயரமாக தெரிந்துகொண்டே இருக்கின்றார்
















 


No comments:

Post a Comment