Tuesday, September 12, 2017

அபத்தமான ஆய்வு ஒன்றில் இறங்கியிருக்கின்றது நக்கீரன்





மிக அபத்தமான ஆய்வு ஒன்றில் இறங்கியிருக்கின்றது நக்கீரன் பத்திரிகை


அதாவது தாதுமணல் என்பது அணுசக்தி பொருளாம், அதனால் அதனை ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்திவிட்டதாம், இல்லையென்றால் பாகிஸ்தானும் சீனாவும் இந்திய மணல் கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்குமாம்


இப்பொழுது இங்கு தாதுமணல் நின்றுவிட்டதால் இலங்கையில் இருந்து வாங்கி 
அணுகுண்டு செய்கின்றார்களாம்





இதனை விட பெரும் அபத்தமாக ஒரு பத்திரிகை உளற முடியாது.

தாது மணலில் தோரியம் எனும் அணுசக்தி ஒரு விஷயம் மிக குறைந்த அளவில் இருப்பது உண்மை, அது முழுக்க அணுசக்திக்கு வராது. அதோடு கூட ஏகபட்ட கனிமம் உண்டு. பல எந்திரங்கள் செய்ய அவை பயன்பட்டன‌

முன்பு பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் மட்டுமல்ல உலகெல்லாம் , இங்கிருந்து கனிம மண் விற்கபட்டுகொண்டுதான் இருந்ததது, விற்ற வைகுண்டராஜன் போன்றோர் டெல்லிக்கு சென்று சிறந்த ஏற்றுமதியாளர் விருதையும் வாங்கினார்கள்.

ஆக அந்நிய நாட்டுக்கு அணுகுண்டு மூலபொருள் விற்பவருக்கா சிறந்த ஏற்றுமதியாளர் விருது கொடுப்பார்கள்?

இப்பொழுது கனிம மணல் ஏற்றுமதி நிறுத்தபட்டிருபதற்கு அணுசக்தி காரணமே அல்ல. விஷயம் வேறு. அது வெளிவராது.

ஆனால் அணுசக்திக்காக நிறுத்தபட்டதாக நக்கீரன் திசை திருப்புகின்றது, இரு கேள்விகள் கேட்டால் நக்கீரன் முகத்தை எங்கு வைக்கும் என தெரியாது

உலக நாடுகள் எல்லாம் அணுகுண்டு செய்தது, வடகொரியா கூட செய்தது, எல்லாம் இந்திய தாதுமணலில் செய்ததா?

அப்படி இந்திய தாதுமணலில் அபார சக்தி இருந்தால் ஏன் அது அணுசக்தி ஒப்பந்தம் என சொல்லி ஆஸ்திரேலியாவிடமிருந்து இந்திய அணுவுலைக்கு எரிபொருள் கேட்கின்றது? ஏன் உலக நாடுகள் இந்திய கையினை கட்டுகின்றன?

அப்படி ஒரு வீரியமிக்க மண் இருந்தால், இந்நேரம் வெளிநாட்டு கம்பெனிகள் இறங்கியிருக்காதா? வெறும் பெப்சியே ஆறுகளை கபளீகரம் செய்யும் நிலையில் அவற்றை விரட்ட முடியாத அரசு கனிம மண் அள்ளும் வெளிநாட்டு சக்திகளை விரட்டவா முடியும்?

இதெல்லாம் பெரும் அபத்தமான உளறல்கள்

விஷயம் என்ன தெரியுமா?

நமது பகுதியில் தாதுமணலுக்கு தடை போட்டபின் இலங்கை தாதுமணலுக்கு கிராக்கி அதிகம், ஈழத்து வைகுண்டராஜன் "டக்ளஸ் தேவானந்தா" (பிரபாகரன் குண்டு அனுப்பும்போதெல்லாம் தப்பினாரே?) அந்த தேவானந்தா காட்டில் கடும் மழை

அது பொறுக்காத இங்குள்ள மணல் சாமிகள் ஆடுகின்றன, போனவாரம் கூட மணவாளகுறிச்சியில் மூடபட்ட அரசு மணல் குவாரி தொழிலாளர்கள் எல்லாம் திடீரென கோரிக்கையில் இறங்கினர்.

மணல் பிசினஸ் என்பது கோடிகளை நொடியில் கொட்டும் தொழில், மெஷின் மட்டும் முதலீடு மற்றபடி மணல் எல்லாம் சும்மா, அதனால் மணல் மாபியாக்கள் மறுபடி களமிறங்க துடிக்கின்றன, ருசி கண்ட புலிகள் சும்மா விடாது.

இதை குழப்பும் அம்புகள் அம்புகள் எங்கிருந்தோ ஏவபடுகின்றன‌

இதில் அணுசக்தி என திடீர் காமெடியுடன் நக்கீரன் விசாரணையில் இறங்குகின்றதாம்..

இறங்கட்டும், ஆளுநரை சந்திக்கும் பழனிச்சாமி போல அடிக்கடி முன்பு சந்தண வீரப்பனையே சந்தித்து பல கதைகளை எழுதியவர்கள்

இப்பொழுது எந்த கடற்கரை வீரப்பனை எங்கு சந்தித்து என்ன கதை எழுதுவார்களோ பார்க்கலாம்




 

 



 

No comments:

Post a Comment