Wednesday, September 13, 2017

இம்மானுவேல் சேகரன் என்பவர் யார்?



Image may contain: 1 person, close-upசில விஷயங்களை சொல்வதற்கு மனசாட்சியினை கழற்றி எறிந்துவிட்டிருக்க வேண்டும், அல்லது சொந்த மூளையினை அடகுவைத்துவிட்ட தற்குறியாக இருக்கவேண்டும்


அப்படிபட்டவர்கள்தான் இம்மானுவேல் சேகரன் நினைவுநாளில் காமராஜரை தூற்றிகொண்டிருக்கின்றனர்.


1957ல், அந்த‌ தேர்தலில் முத்துராமலிங்க தேவரின் ஆதரவு பெற்ற சசிவர்ணதேவர் வெற்றிபெற்றிருந்தார். இதனை தொடர்ந்து இராமநாதபுரம் பக்கம் கலவரம் பரவியது, ஏன் பரவியது என்பதுதான் மர்மம்.


அதற்கு முன்பாக இம்மானுவேல் சேகரன் என்பவர் யார்? என்றால், அவரும் அப்பகுதிக்காரர் அன்றே ராணுவத்தில் இருந்தவர், படித்தவர். 7 மொழிகள் அவருக்கு தெரிந்திருந்தன. அப்பக்கம் தாழ்த்தபட்ட மக்களின் குரலாக உருவானார், ஒரு கட்டத்தில் ராணுவ பணியினை விட்டுவிட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தார்.


அப்போது திமு கழகத்தால் பலமிழந்துகொண்டிருந்த காங்கிரசுக்கு இம்மானுவேல் போன்றோரை இணைக்க வேண்டிய அவசியம் இருந்தது.


என்னதான் சமதர்மம் பேசினாலும் இம்மானுவேல் சேகரனை சேர்த்துகொள்ள அண்ணாவுக்கும் தயக்கம் இருந்தது, அது பயமா அல்லது வேறுவிஷயமா என தெரியவில்லை.


சாதி ஒழிக்கவேண்டிய திமுக அன்று காங்கிரசை ஒழிப்பதிலே குறியாக இருந்தது.


இந்நிலையில்தான் தேர்தலும் நடந்து அதில் கலவரமும் வெடித்தது. ஏன் கலவரம் வெடித்தது என்பதற்கு இன்றுவரை பதில் இல்லை, பெரும் கலவரங்கள் எல்லாம் இந்தியாவில் அப்படித்தான். அழிவு தெரியுமேயன்றி வெடித்தபுள்ளி தெரியாது, ஆனால் நெடுநாள் வன்மம் மட்டும் காரணம் என்பது புரியும்.


அப்படி அந்த கலவரத்தை தடுக்க சில அமைதி முயற்சிகளும் எழுந்தன, அவற்றில் ஒன்றுதான் ஆட்சியர் தலமையிலான கூட்டம். அதில் தேவர், சரிவர்ணதேவர் போன்றோர் அப்பக்கமும், இம்மானுவேல் சேகரன் உட்பட 7 பேர் இப்பக்க சார்பாகவும் கலந்துகொண்டனர்.


அதில் உணர்ச்சிகரமாகவும், துணிவாகவும் பேசினார் இம்மானுவேல் சேகரன்.


அதன் பின்பு அவர் கொல்லபட்டார், விவகாரம் விஸ்வரூபமானது, கொலையாளிகளை பிடிக்க முயன்றபொழுதுதான் கீழ தூவல் துப்பாக்கி சூடு எல்லாம் நடந்து அப்பகுதி எரிந்தது.


பெரியார் மட்டும் துணிச்சலாக "அந்த முத்துராமலிங்கம்ன் (சாதிபெயரை பெரியார் சொல்லமாட்டார்) என்பவரை பிடித்து உள்ளே போட்டால் ஒழிய அங்கு கலவரம் நிற்காதுங்க" என தைரியமாக சொன்னார், வேறு ஒரு தலைவனுக்கும் அதை பற்றி கருத்து சொல்ல தைரியமில்லை அண்ணா, கலைஞர் உட்பட.


பின்பு பல சர்ச்சைகள் எழுந்தன, வழக்குகள் எல்லாம் நடந்தன. முத்துராமலிங்க தேவர் இம்மானுவேல் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கபட்டார்.


அதாவது தா.கிருட்டினன் வழக்கிற்கு இம்மானுவேல் சேகரன் வழக்குதான் முன்னோடி, கிட்டதட்ட மூடபட்ட வழக்கு


இதில்தான் இப்பொழுது காமராஜரை கோர்த்துவிடுகின்றார்கள், அவர்தான் தலித்துகளை தேவருக்கு எதிராக தூண்டிவிட்டார் என்றேல்லாம் மனசாட்சியின்றி எழுதுகின்றார்கள்


அந்த அரசியல் எல்லாம் அவருக்கு தெரியுமா? சூழ்ச்சி அரசியல் தெரிந்திருந்தால் திமுகவினை வளர விட்டிருப்பாரா?


அரசியல் ஆசை இருந்திருந்தால், திமுகவிலிருந்து நீக்கபட்டவுடன் தன் வீடு வந்த ராமசந்திரனை அமுக்கியிருக்கமாட்டாரா?


அம்மனிதனை புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் விட்டுவிடலாம், கொச்சைபடுத்தலாமா?


இன்னொருவன் சொல்கின்றான், விருதுநகர் நாடார்கள் கள்ளநோட்டு மாற்ற உதவினாராம், அட கொடுமையே


சிவகாசியில் ஒரு கொலைவழக்கில் ஒரு குற்றவாளி கைதுசெய்யபடவில்லை, அறிக்கையினை படித்த காமராஜர் அவனை ஏன் கைது செய்யவில்லை என சீறுகின்றார், அதிகாரிகள் தயங்கி சொல்கின்றார்கள், "அய்யா அவன் உங்கள் சகோதரி மகன்", கத்துகின்றார் காமராஜர்


அதனால்தான் கேட்கிறேண்ணேண், ஏன் அவனை விட்டீங்கண்ணேன், உடனே பிடிச்சி உள்ள போடுங்கண்ணேன்.."


அவரா கள்ளநோட்டுக்கு உதவினார், அப்படி உதவியிருந்தால் ஏன் விருதுநகர் வியாபாரிகள் அவரை தோற்கடிக்க போகின்றார்கள்?


தாழ்த்தபட்ட மக்களின் தலைவனான இம்மானுவேலை ஆதரிக்க எல்லோருக்கும் பயம், அம்மக்களை எட்டிபார்க்க எவனுக்கு அக்கறையில்லை. அன்று திருமா இல்லை, கி.சாமி இல்லை, பா.ரஞ்சித் இல்லை.


ஈழத்தில் சாதியினை டுமீல் டூமில் என சுட்டுவிட்டு இன்று தமிழகத்தில் சுட்டுகொண்டிருக்கும் சீமானும் அன்று இல்லை.


பெரியார் சாதி ஒழிப்பும் அப்பக்கம் செல்ல முடியவில்லை, அப்படி ஒரு காலம் அது.


அந்த அபலைகளுக்காக கரம் நீட்டிய தலைவர் காமராஜர், அது தவறா?


அந்த அபலைகளை பார்வட் பிளாக் கட்சியினர் அரவணைத்திருந்தால் ஏன் இந்த பிரச்சினை வரப்போகின்றது? ஏன் கலவரம் வெடிக்க போகின்றது?.


சாதியினை ஒழிக்க வந்த திராவிடர் கழகமோ, அதன் அரசியல் கட்சியான திமுகவோ இணைத்து அவர்கள் நலனை கேட்டிருந்தால் ஏன் காமராஜர் வரபோகின்றார்?


நிச்சயம் இம்மானுவேல் சேகரனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கவேண்டியது அந்நாளைய சாதி ஒழிப்பு போராளிகள் செய்தார்களா?


அவர்களுக்கு அடிக்க தெரியாத‌ பிராமணன் மட்டுமே கண்ணுக்கு தெரிவானன்றி, திருப்பி அடிக்கும் எந்த சாதியும் கண்ணுக்கு தெரியாது


இம்மானுவேல் செய்த தவறு என்னவென்று கொலை வழக்கில் விசாரிக்கும்பொழுது தெரிந்த உண்மை, ஒரு தாழ்த்தபட்ட்வன் தேவருக்கு எதிராக கலெக்டர் முன் நாற்காலியில் அமர்ந்துவிட்டான் என்பது


அந்த வெறிதான் கொலைக்கு காரணமேயன்றி, தேவரை கடவுளாக வழிபட்ட கூட்டத்தின் வெறியே காரணமன்றி காமராஜர் அல்ல.


தேவரும் கொலைக்கு காரணம் அல்ல என நீதிமன்றமும் சொல்லிற்று.


வடக்கே லால் பகதூர் சாஸ்திரியும், தெற்கே காமராஜரும் அப்பழுக்கற்ற தேசியவாதிகள். இத்தேசத்தின் வரங்கள். அவர்களை எல்லாம் பழிக்காதீர்கள்


அப்பாவம் எத்தனை தலைமுறையானாலும் விடாது.













 


No comments:

Post a Comment