Showing posts with label மறக்க முடியுமா. Show all posts
Showing posts with label மறக்க முடியுமா. Show all posts

Tuesday, September 19, 2017

கேபி சுந்தராம்பாளுக்கு இன்று நினைவுநாள்









Image may contain: 1 person, smiling, close-up

Image may contain: 1 person, close-up





 

கே.பி சுந்தராம்பாள் தமிழகம் மறக்க முடியாத பெயர்.


கொடுமுடி பாலம்மாள் சுந்தராம்பாள் என்பவர் அவர், மிக சிறிய வயதிலே நாடகதுறைக்கு வந்தவர். அந்த வயதிலே பெரும் பணமும், புகழும் குவித்தவர்


20 வயதிற்குள் ஏராளமான நாடுகளில் நாடகம் நடத்தி அவர் பெறாத புகழ் இல்லை, குவிக்காத செல்வமில்லை.


இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி, இலக்கணம் தெரியாதவர் களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர் முதலில் கே.பி.எஸ


எடுத்த எடுப்பிலே உச்சஸ்தானியில் 4 கட்டை தாண்டி பாடும் அபூர்வ திறமை அவரிடம் இயல்பாய் இருந்தது.


பின் கிட்டப்பாவுடன் திருமணம் என்றாலும் குழந்தையும் நிலைக்கவில்லை, கணவனும் நினைக்கவில்லை. 25 வயதில் விதவையானார் சுந்தராம்பாள்.


உண்மையில் அவர் அழகு, ஜொலிக்கும் அழகு. அந்த சுந்தராம்பாள் சாயல்தான் கிட்டதட்ட காவிய தலைவன் படத்தில் "வடிவு" பாத்திரத்தையொட்டி அமைக்கபட்டிருந்தது.


ஆனால் கணவனை இழந்தபின் தன்னை அவர் அலங்கரிக்கவில்லை, வெள்ளை உடையினை அணிந்தார் ஆன்மீகவாதியாக மாறினார். இனி எந்த ஆண்மகனுடனும் நடிக்கமாட்டேன், இப்படித்தான் நடிப்பேன் என சில கொள்கைகளையும் வகுத்தார்


இத்தனைக்கும் பல காரணத்தால் பிரிந்துவாழும் பொழுதுதான் கிட்டப்பா இறந்தார், ஆனால் கிட்டப்பா மீது சுந்தராம்பாள் கொண்ட பாசம் அப்படி உறுதியாயிருந்தது.


கடைசிவரை அதில் நின்றும் காட்டினார்.


கிட்டப்பாவின் திடீர் மரணமே நாம் கண்ட சன்னியாசி கோல சுந்தராம்பாளை நமக்கு நிறுத்திற்று, அந்த கொடும் மரணம் நடக்காமல் இருந்திருந்தால் முதல் அழகான கதாநாயகியாக வரலாறு சுந்தரம்பாளைத்தான் பதிவு செய்திருக்கும்.


25 வயதில் இனி சினிமாவேண்டாம் என உதறினாலும், சினிமாக்காரர்கள் விடுவதாக இல்லை. அக்கால கட்டம் பக்தி படங்களும், குரல்வளம் மிக்கவர்கள் தேவைபடும் காலமாயிருந்தது.


நந்தனார் நாடகத்தில் நடித்த சுந்தரம்பாளை, 1 லட்சம் சம்பளம் என தன் படத்தில் நடிக்க வைத்தார் வடநாட்டு அசன் தாஸ், அன்று படத்தின் மொத்த பட்ஜெட் 3 லட்சம்.


அன்று 1 சவரன் தங்கம் 13 ரூபாய்.


அப்படியானால் சுந்தரம்பாளின் மார்கெட்டை நீங்களே ஊகித்துகொள்ளுங்கள், இவ்வளவிற்கும் சாமியார் வேடம்.


பின் அவ்வையார் படத்தில் அவரை அப்படியே ஓளவையாராக நம் கண்முன் நிறுத்தினார் வாசன்.


பெரும் வரவேற்பு அவருக்கு இருந்தது, மக்களால் பெரும் உற்சாகத்தோடு கொண்டாடபட்டார், அவரின் கச்சேரிகள் 7 மணிநேரம் தொடர்ந்து நடந்தாலும் கூட்டம் அப்படியே அவரின் குரலால் கட்டபட்டு இருந்தது.


அவருக்கு நாட்டுபற்றும் இருந்தது, பல காரியங்களை செய்தார். இதனால் மகாத்மா காந்தியே நேரில் வந்து வாழ்த்தி அவர் சேவை தொடரவேண்டும் என்று கேட்டுகொண்டார்


தமிழகத்தில் மகாத்மா அப்படி கேட்டுகொண்ட ஒரே கலையுலக நபர் சுந்தரம்பாளே.


தன் கொள்கைக்கு பிணக்கு வராதபடி, அவ்வை காவுந்தியடிகள், மணிமேகலை, காரைக்காலமையார் என பல காவியங்களை நம் கண்முன்னால் நின்ற அந்த சுந்தராம்பாளை மறக்க முடியாது.


"பழம் நீயப்பா" போன்ற முருகன் பாடல்களாகட்டும், "விநாயகனே வினை தீர்ப்பவனே" போன்ற விநாயகர் பாடல்களாகட்டும், "மகாகவி காளிதாஸ்" படத்து காளி தேவியின் பாடலாகட்டும், ஏன் கலைஞரின் பூம்புகாரில் "வாழ்க்கை எனும் ஓடம்." பாடலாகட்டும்


அந்த கணீர் குரல் சுந்தாராம்பாளை மறக்க முடியாது.


அவ்வையார் இப்படித்தான் இருந்திருப்பார் என நம் கண்முன்னே தத்ரூபமாக நிறுத்தியவர் அவர். அவரின் சேவைக்காக தமிழக அரசின் மேலவையிலும் கவுரவிக்கபட்டார்.


அந்த சுந்தராம்பாளுக்கு இன்று நினைவுநாள்


தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் என எல்லா பக்கமும் ஜொலித்த கலைத்தாயின் மூத்த மகளுக்கு ஆழந்த அஞ்சலிகள்.














 







Monday, September 18, 2017

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று

https://youtu.be/sMdjTc6uwJA 

அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று, அவன் போராட கிளம்பி கிட்டதட்ட 90 வருடமாயிற்று.


போராட்டத்தை முடித்தும் கிட்டதட்ட 45 வருடமாயிற்று.


ஆனாலும் அந்த கிழவன் பெயரை கேட்டவுடனே பலருக்கு எவ்வளவு வயிற்றேரிச்சல் வருகின்றது, எவ்வளவு அலறல் வருகின்றது?




கிழவன் அப்படி அடித்திருக்கின்றான் .


ஒரு பெரு மரம் இருந்திருக்கின்றது, அதில் மந்தி கூட்டம், கோட்டான் கூட்டமும் கொடுநாகமும் குழுமியிருந்திருக்கின்றன, தாங்கொணா துயரை எல்லாம் அவை கொடுத்திருக்கின்றன.


ஆத்திரமடைந்த கிழவன் கோபத்தில் தைரியமாக பொங்கிவிட்டான், அது பாம்பு அது புற்றில் இருந்தால் என்ன? பரமசிவன் கழுத்தில் இருந்தால் எனக்கென்ன? பாம்புக்கு அடி விழும்பொழுது அந்த பரமசிவனுக்கே அடிவிழுந்தால்தான் என்ன என எழும்பிவிட்டான்.


அந்த மரத்திலிருந்து அட்டகாசம் செய்த மந்திகளையும், நாகங்களையும் அடக்க அவன் அந்த மரத்தையே புடுங்கி எறிந்திருக்கின்றான் என்பது நன்றாகவே தெரிகின்றது


மறுபடியும் அந்த அட்டகாசத்தை தொடரவும், ஆட்டம் போடவும் அந்த மந்திகளும், நாகங்களும் புலம்பியபடியே மரத்தை நிமிர்க்க படாத பாடு படுகின்றன‌


நடக்குமா? அதன் ஆண்வேரையே கிழவன் தோண்டி எறிந்துவிட்டு போய்விட்டானே?


அந்த வயிற்றெரிச்சலில் அந்த மந்திகள், கோட்டான்களின் அலறல் அதிகமாகவே இருக்கின்றது.



கரியப்பா , மானெக்‌ஷா வரிசையில் மறக்க முடியாதவர் அர்ஜன் சிங்




Image may contain: 2 people, people smiling, people standingமார்ஷ்ல் அர்ஜன் சிங், இந்த தேசத்திற்கு ஆற்றிய சேவை மகத்தானது.


1962ல் சீனாவிடம் இருந்து பின்வாங்கிய நிலையில், இந்தியா பலவீனபட்டுவிட்டதாக கருதிய பாகிஸ்தான் அமெரிக்க கருவிகள் துணையோடு 1965ல் நம்மீது படையெடுத்தது.


ஆனால் அமெரிக்காவே அலறும் வண்ணம் பாகிஸ்தானை பின்னி எடுத்து விரட்டியது இந்தியா, அந்தபோர் தொடர்ந்திருக்குமானால் முழு காஷ்மீரை அன்றே மீட்டிருப்போம். லால்பகதூர் சாஸ்திரியும் அத்திட்டத்தில்தான் இருந்தார்





ஆனால் தாஷ்கண்ட் அமைதிபேச்சில் அவர் முழு காஷ்மீரையும் கைபற்றும்வரை யுத்தம் நிற்காது என சொல்லிவிட்டு வெளியேறிய பின்புதான் இறந்தார், நிச்சயம் அவர் சாவு மர்மமானது.

அந்த 1965 போரில் இந்தியா வெற்றிமுகத்தில் நிற்க இந்திய விமானபடையும் அதன் தளபதியாக இருந்த அர்ஜன் சிங்கும் மகா முக்கிய காரணம்

உலகம் முழுக்க அவருக்கு ஒரு பிரம்மிப்பு இருந்தது, பாகிஸ்தானுக்கு அவர் என்றுமே வேப்பங்காயாக கசந்துகொண்டே இருந்தார்.

மிக் வகை விமானம் முதல் சுகோய் வரை கொண்டுவந்து இந்திய விமானபடையினை வலுவானதாக்கியதில் அர்ஜன் சிங்கிற்கு மகத்தான பங்கு உண்டு.

கரியப்பா , மானெக்ஷா வரிசையில் மறக்க முடியாதவர் அர்ஜன் சிங்.

அந்த தேசபக்தி மிக்க‌ சிங்கத்திற்கு வீர வணக்கம்

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.













 

Friday, September 15, 2017

இன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள்



Image may contain: 1 person, textஇன்று புகழ்பெற்ற பொறியாளர் சர்.விஸ்வேசரய்யாவின் பிறந்தநாள்.


இவரின் பிறந்த நாள்தான் இன்றுவரை இந்தியாவின் "இன்சினியர் தினம்", வருங்காலத்தில் ராமேஸ்வரத்தில் ராமர்பாலம் கட்ட தொடங்கிய நாள் தெரிந்தால் இந்த நாள் மாற்றபடலாம்.


நல்லவேளையாக வால்மீகி அந்த நாள்,நட்சத்திரத்தினை குறித்துவைக்காமல் விட்டதால், இனி விஸ்வேசரயாவின் பிறந்தநாளுக்கு ஆபத்து இல்லை. ஆனால் இந்தியாவின் புகழ்மிக்க அணைகள்,தொழிற்சாலைகள் என சகலமும் கட்டியவர்.


காவேரி பிரச்சினைக்கு மிக அபாயகரமான திருப்பம் இவர் கொடுத்தது, அதாவது அது அருமையான திட்டம்தான், ஆனால் தமிழக போலி அரசியல்வாதிகளால் அது இன்று குப்புறகிடப்பது வேறுவிஷயம்.


பெரும் சிக்கல்கள் போராட்டம் என்றாலும் இன்னும் காவேரி சிக்கல் தீர்ந்தபாடில்லை , தமிழகத்திற்கு இது 
மாபெரும் அநீதி, பெரும் அக்கிரமம். ஆனால் இது ஒரு நாளில் தொடங்கிய பிரச்சினை அல்ல, வரலாறு பெரிது.


அகத்தியர் முனிவர் காலத்திலிருந்தே தமிழ்நாட்டை வளப்படுத்தியது காவேரி, சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான நதி, அதுவும் தமிழகத்திற்கு 4000 ஆண்டுகளாக தாங்கி நிற்கும் ஆணிவேர்.


தமிழரும் கல்லணை என மிக அற்புதமான அமைப்பினை அமைத்து டெல்டா பகுதிகளை உருவாக்கினர், கல்லணை அமையாவிட்டால் தஞ்சாவூரும் இல்லை (மீத்தேனுக்கு பிரச்சினையே இல்லை), அது ராமநாதபுரத்தின் தொடர்ச்சியாக வறண்ட பகுதியாய் அமைந்திருக்கும், அப்பக்கம் வீராணம் ஏரியுமில்லை (ஊழலுமில்லை),


மொத்ததில் கல்லணை அமையாவிட்டால் டெல்டா ஒரு நேர்கோடு இருந்திருக்கும்.


இவ்வாறாக தமிழகத்தை செழிக்க செய்த காவேரியில் முதல் பிரச்சினை சாளுக்கிய மன்னர்கள் வடிவில் வந்தது, அதுவும் சோழர்களுக்கும் அவர்களுக்கும் வந்த தகறாறு, ஆனாலும் சோழர்கள் உச்சத்தில் இருந்த நேரம், சாளுக்கியரை அடக்கி காவேரியை மீட்டார்கள்.


அதன்பின் 700 வருடங்களுக்கு பிரச்சினை இல்லை, அங்கு விஜயநகரபேரரசு உதயமாகி, மொகலாயரையே விரட்டும் அளவிற்கு வலுவானபோதும் காவேரியில் கைவைக்கவில்லை, காரணம் எந்த அவசியமும் இல்லை.


பின்னாளில் நாயக்கர் தமிழகம் வர அதில் பிரச்சினை வர வாய்ப்பே இல்லாமல் ஆயிற்று. வைகை கரை,காவேரிகரை எல்லாமே நாயகர்கள்.மைசூரிலும் நாயக்கர்கள் ஒரு பிரச்சினையும் இல்லை.


கவனியுங்கள், மைசூரிலிருந்து வந்து மதுரையிலும், தஞ்சாவூரிலும் சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டார்கள் என்றால், நாம் இங்கு உருவாக்கி வைத்திருந்த நன்செய் நிலங்கள் அப்படி, மைசூர் பக்கம் அன்றெல்லாம் ஒன்றுமில்லை.


மதுரை நாயக்கருக்கும், தஞ்சாவூர் நாயக்கருக்கும் வாரிசுசண்டை ஆரம்பித்தபொழுது, தஞ்சாவூர் நாயக்கர்களுக்கு ஆதரவாய் சிவசேனை வந்தது, சிவசேனா என்பது பால்தாக்கரே அல்ல, மாமன்னன் சிவாஜியின் உறவினர் படை. காரணம் அவர்கள் வராவிட்டால் பிஜப்பூர் சுல்தான் தஞ்சாவூரில் அமர்ந்திருப்பார்.


இப்படியாக மராட்டியர் தஞ்சையை பிடித்ததும் , கொஞ்சம் உரசல் உருவாயிற்று. அது பின்னாளில் மைசூர் சமஸ்தானம் (அது திண்டுக்கல் வரை இருந்தது) சோழமண்டல மராட்டியர் பிரச்சினை என உருவாயிற்று.


விளைந்தால் பிரச்சினை இல்லை, ஆனால் வெள்ளத்தால் அழிந்தால் அதற்கு மைசூர் அரசு தண்ணீரை அழிப்பதற்காகவே அனுப்புகின்றது என சில சர்ச்சைகள் எழுந்தன, ஆடிமழையில் அந்த தண்ணீரை எங்கு வைப்பது என அவர்களுக்கும் தெரியவில்லை, இவ்வளவிற்கும் கொஞ்சம் விவசாயம் தொடங்கி மைசூர் சமஸ்தானம் பொருளாதாரம் உயர்ந்த நேரம்.


எப்படியோ இனி தஞ்சையில் வெள்ளத்தில் பயிர்கள் அழிந்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் பொறுப்பு என ஒரு கருத்து உருவானது, மைசூர் மன்னர் நஷ்டஈடு தரவேண்டும் என்றெல்லாம் குரல்கள் வந்தன, அக்கால மைசூர் உடையார்களும் சில நேரங்களில் நெல்லாகவோ, விதை நெல்லாகவோ,பணமாகவோ கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இந்நிலையில் ஆங்கிலேயர் தஞ்சையை ஆளுகைக்குள் கொண்டுவந்தனர், மைசூர் சமஸ்தானம் அடங்க மறுத்தது, பழைய பிரச்சினையை பெரும் பிரச்சினையாக உருவாக்கினர் ஆங்கிலேயர்.


தஞ்சாவூரில் வெள்ளத்திற்கு மைசூர் அரசு நஷ்ட ஈடுகொடுக்கவேண்டும் என வாங்கியே கொடுத்தனர், தஞ்சை மக்களுக்கும் பொம்மை சாம்போஜிக்கும் ஏக மகிழ்ச்சி, விட்டால் பிரகதீஸ்வரர் ஆலயம் பக்கம் வெள்ளையருக்க்கு ஆலயமே எழுப்பியிருப்பர், ஏனோ செய்யவில்லை.


ஹைதர் அலி இதனை கண்டித்தார், திப்பு சுல்தான் இந்த இழப்பீட்டை கொடுக்க மறுத்தார். காவேரி பொதுவான நதி, வெள்ளம் என்பதை நாங்கள் என்ன செய்யமுடியும்? என மறுத்தார். ஆனாலும் திப்பு நஷட ஈடு கொடுத்தே ஆகவேண்டும் என பொங்கியபொழுது ஆத்திரபட்ட திப்பு படையினர் சில இடங்களில் தமிழக மதகுகளை சேதபடுத்தினர்.


அது இந்துகிராமங்களை திப்பு தாக்குகின்றார் என வெள்ளையரால் விபரீதமாக பரப்பபட்டன, திப்பு சுல்தான் ஒரு பெருந்தன்மையான மாவீரன், மைசூரின் ஒப்பற்ற புலி. வரலாற்று பெருந்தகையாளன்.


இப்படி இல்லாத பொய் எல்லாம் கூறி திப்புவை இந்து எதிரியாக்கி தனிமையாக்கி அழித்தனர் பிரிட்டிசார், பின் மைசூருக்கு உடையார் அரசன் ஆனார். யார் ஆண்டால் என்ன?, பின்புலம் பிரிட்டிசார்.


அப்பொழுதும் தஞ்சையில் வெள்ளமென்றால் மைசூர் பணம் கொடுக்கவேண்டும், இது மைசூர் மன்னருக்கு பெரும் தலைவலியாயிற்று.


"இது காவேரி ஆறு, அதுவும் 4 ஆறுகள் கூட சேர்ந்து தமிழ்கம் செல்கிறது, அங்கும் பவானி,அமராவதி,நொய்யல் என எல்லாம் கலந்துதான் திருச்சி வருகின்றது, அங்கு அழிவென்றால் நான் பணம் கொடுக்கவேண்டுமாம்?


முப்போகம் விளைந்தால் நமக்கா தருகின்றார்கள்?"
செயலற்ற நிலையில் கேட்டதை கொடுத்துவிட்டு அந்தபுரத்தில் அழுதுகொண்டிருந்த மன்னருக்கு, 1895ல் ஒரு இளைஞன் வேலைக்கு வந்தான்.


அப்பொழுதே சிவில் இன்சினியரிங் முடித்திருந்த பிராமண இளைஞன், பெரும் அறிவாளி, கட்டடகலை நிபுணர், எல்லாவற்றிற்கும் மேல் பெரும் நிர்வாகி.


"தனது வேலையில் கருத்தாக இருப்பவன், அரசனோடு பந்திக்கு அமர்வான்" என்பது யூதமொழி, அவனும் அப்படித்தான் விரைவில் திவான் ஆனார்.


மைசூர் சமஸ்தானம் தஞ்சாவூருக்கு வெள்ளநிவாரண நிதிகொடுத்து அழுதுகொண்டிருக்கும் பொழுது அவன் நிதானமாக திட்டமிட்டான்.


வீணாக செல்லும் நீருக்கு தஞ்சை மக்களுக்கு கப்பம் கட்டுவதை விட, நாமே அணைகட்டி விவசாயத்தை பெருக்கினால் என்ன?, அதுவரை அப்படி ஒரு திட்டம் மைசூருக்கு இல்லை, அவரை வினோதமான பார்த்தமன்னன் கேட்டார்? அது சாத்தியமா?


எனக்கு சாத்தியம் இல்லை என்றால் எவனுக்கும் சாத்தியமில்லை என்றான் அந்த இளைஞன்.


காவேரி பெரும் ஆறு ஆனால் அதோடு ஹேமாவதி,சிம்சா,அக்ராவதி,கபினி என பல சிற்றாறுகள் (நம்பியாறு போல) கலந்துதான் வெள்ளம் தமிழகம் செல்லும், முதலில் நாம் காவேரி குறுக்கே அணைகட்டினால் பாதிவெள்ளம் குறையும், அதாவது நஷ்டஈடு குறையும்.


அற்புதமான யோசனை சொன்ன இளைஞனை நம்பிக்கையாய் பார்த்தது மைசூர், அந்த இளைஞர் விஸ்வேசுவர அய்யர்.


கன்னடத்தின் அப்துல்கலாம் அல்லது லி குவான் யூ அவரின் அறிவுகூர்மையும், செயல்திறனும் அப்படி.


அற்புதமாக கட்டிகொடுத்த அணை கிருஷ்ணராஜ சாகர், மீதி நீர் தஞ்சை மக்களை அழிக்காமல் இருக்க வெள்ளையர் கட்டியது மேட்டூர் அணை.


அணைகட்டிவிட்டால் போதுமா? அந்த நீரை எப்படி விவசாயமாக்குவது, எப்படி தடுப்பணை கட்டுவது, உற்பத்தியை பெருக்குவது எப்படி என பெரும் அகராதி வகுத்தார் விஸ்வேசரையர்.


அவர் கொடுத்த அடித்தளத்தில்தான் மைசூர் விவசாயத்தில் செழித்தது, கர்நாடக பொன்னி, மைசூர் பருப்பு , இன்று தமிழகத்தை தாங்கும் காய்கறிகள் என கன்னடம் கொட்டி முழக்குகின்றது என்றால் அதற்கு காரணம் அவர்தான்.
முத்துபடத்தில் ரஜினி குதிரைவண்டியோடு பசுமைவயல்கள் வழியே மணிக்கணக்கில் செல்வாரல்லவா? அந்த பசும் வயல்கள் அவரின் உருவாக்கம்.


இன்று கன்னடத்தில் சிறிதும் பெரிதுமாக காணப்படும் 28 அணைகளுக்கும் அவரே முன்னோடி. கட்டடகலை அவருக்கு கைவந்தது,


கன்னட அடையாளமான விதான சவுதா, இன்னும் பல ஆலைகள் எல்லாம அவரின் டிசைன்.


அன்று மிகசிறிய ஊரான பெங்களூர் இன்று உலகின் முன்னனி நகரம் என்றால் அதற்கு அய்யரும் ஒரு காரணம். இந்தியாவின் ஒப்பற்ற இன்சினியரான அவரின் பிறந்தநாள்தான் இந்தியாவில் "இஞ்சினியர் தினம்"


இந்தியாவின் மிக சிறந்த கட்டட பொறியாளரில் அவரும் ஒருவர், ஐதரபாத் வெள்ளதடுப்பிற்கு அவர் போட்டு கொடுத்த திட்டம் இன்றும் பயன்படுகின்றது


பெரும் தொழிற்சாலைகளுக்கான நிர்மாணத்தை எல்லாம் அவர்தான் இந்தியாவில் செய்தார். மறக்க முடியா மாமனிதர் அந்த விஸ்வேசரய்யர்.


கிருஷ்ணராஜ சாகருக்கு முன்பே பிரிட்டிசாரோடு சேர்ந்து நிறைய அணைகட்டிய சாதனைகளை அவர் செய்திருக்கின்றார். நவீன‌ இந்திய அணைகட்டுகளின் பிதா மகன் அவர்.


அந்த அறிவாளியினை மிக சரியாக பயன்படுத்திகொண்டது கர்நாடகம், பின்னாளைய கன்னட எழுச்சிக்கு அவர் மிக பெரும் அடித்தளம் அமைத்தும் கொடுத்தார்.


தமிழகத்திற்கு அப்படி யாரும் கிடைக்காமலே போனதுதான் பெரும் சோகம், அதுவும் பின்னாளில் அய்யர்களுக்கு ஆகாத மாநிலமாகவே அறியபட்டது தமிழகம், பின் எங்கிருந்து வருவார்கள்?


ஆனால் அப்படி ஒரு அறிவாளி வராமல் இனி உருப்படாது தமிழகம்.


பொறியியல் கல்லூரி நிறைந்திருக்கும் தமிழகத்தில் இப்படி ஒரு தினம் இருப்பது தெரியுமா? கொண்டாடுவார்களா என்றால் கொண்டாட மாட்டார்கள்.


அதற்கு ஆயிரம் காரணங்கள். எப்படியாயினும் விஸ்வேஸரய்யர் இந்திய வரலாற்றில் முக்கியமான ஒருவர் என்பதில் சந்தேகமேயில்லை.













 


இன்று அண்ணாவின் பிறந்த நாள்



Image may contain: 1 person, smiling, close-upச‌ரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை கரை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது


அவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது,


டெல்லி என்ன டெல்லி?, உலக நாடுகளின் பெரும் பல்கலைகழகங்கள் எல்லாம், நகைகடையை சுற்றும் பெண்களை போல அவரை பேசவைத்து சுற்றி இருந்து கேட்டன, உரை முடிந்ததும் முனைவர் அல்லது அறிஞர் என கொண்டாடி மகிழ்ந்தன.


தமிழ்நாட்டில் தமிழ்தெரியாதவர்கள் கூட இருக்கலாம், ஆனால் அண்ணா பெயரை உச்சரிக்காதவர்கள் இருக்கமுடியாது, அண்ணா பல்கலை கழகம், அண்ணா சாலை,அண்ணா பஸ்நிலையம், அண்ணா தொழில்சங்கம், அண்ணா நூலகம், இன்னும் ஏகபட்ட அண்ணா அடையாளங்கள் உண்டு, கடலுக்கும், விண்மீனுக்கும் மட்டும்தான் தமிழகத்தில் இன்னும் அண்ணா அடையாளமில்லை,


அவரால் மட்டுமே வாழ்வு பெற்றவர்கள், அரசு சொத்துகளுக்கு எல்லாம் அவரின் பெயரை தாராளமாக குவித்தார்கள்.


அந்த தலைவர் ஏற்படுத்திய தாக்கம் அப்படி,சாதனை அப்படி, கரகரத்த குரலிலே சாதித்தவர், "தம்பி" என எழுதியே தமிழகத்தை புரட்டியவர், காலம் கொடுத்த வாய்ப்புக்களை மிக சரியாக பயன்படுத்தி மிக பெரும் உயரங்களை தொட்டவர்.


ஆத்திக குடும்பத்தில் பிறந்தவர்தான், கல்லூரி படித்து பள்ளி ஆசிரியராய் பணிஏற்கும் வரை ஆத்திகர்தான், நீதிகட்சியில் சேர்ந்து பின்னர் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் என பெரியாரின் பாதையின் "தளபதி" (நாளைய தளபதி, இன்றைய தளபதி, புதிய தளபதி எல்லாம் நினைவுக்கு வரகூடாது) பெரியாரின் கருத்துக்களை தேன் தமிழில் குடிஅரசு,விடுதலை போன்ற பத்திரிகைகளில் எழுதுவார், பெரியாரின் மேடைகளில் பேசுவார் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானார்.


பெரியார் வித்தியாசமான தலைவர், கொள்கைகளில் கொஞ்சமும் சமரசம் செய்துகொள்ளாத முரட்டு பிடிவாதக்காரர் ஆனால் பெரும் செல்வந்தர். இந்தியாவின் சுதந்திரம் நெருங்க நெருங்க பெரியாருக்கும் அண்ணாவிற்கும், கருத்துவேறுபாடுகள் பெருகின, அரசியல் வேண்டாம் என்பவர் பெரியார், அரசியல் கட்சி ஆகாமல் சாதிக்க முடியாது என்பவர் அண்ணா, முடிவு பெரியாரின் திருமணத்தை காரணம் காட்டி கிளம்பியது தனியாக மேடை போட்டது அண்ணாவின் குழு.


உண்மையில் அண்ணா பெரியார் என்ற கட்டுக்குள் இருந்து விடுதலை பெற்றார், விஸ்வரூபமெடுத்தார். பெரியாரின் இயக்கத்தில் சமூகபோராளியான அண்ணா, திராவிட நாடு வாங்கி தரும் விடுதலை வீரர் ஆனார்.


சுதந்திரம் வாங்கிய புதிது, அசைக்க முடியாத செல்வாக்கில் காங்கிரஸ் கட்சி, இந்த பக்கம் ஒரு பெரும் சமூகபுரட்சியே நடத்திகொண்டிருக்கும் பெரும் தனவான் பெரியார், இவர்களுக்கிடையில் தான் ஒரு ஏழை இயக்கமாக (அன்றுமட்டும், சத்தியமாக இன்றல்ல), சம்பத தவிர பணக்காரர் என யாருமில்லாத ஒரு சாமான்ய இயக்கமாகத்தான் தி.மு.க வினை தொடங்கினார்.


பணமோ, பெரும் பின்புலமோ இல்லையே தவிர கட்சி அனுபவமிருந்தது, தமிழ் இருந்தது, பெரும் எழுத்தாற்றலோடு பன்மொழி புலமை இருந்தது, அண்ணா மிகவேகமாக வளர்ந்தார், கொஞ்சம் கொஞ்சமாக கட்சியும் வளர்ந்தது.


தாவி வரும் நீரோடை போல அழகான தமிழோட்டம், வரிக்கு வரி பொருத்தமான உவமைகள், பதமான வார்த்தை பிரயோகம் எதிராளியையும் கட்டிபோடும் சொல்வித்தைகள் எல்லாம் மிக அழகாக வாய்த்த அவர் எஸ்கலேட்டர் வேகத்தில் வெற்றிபடிகளில் ஏறினார், யாரையும் காயபடுத்தாத ஆனால் ஏற்றுகொள்ளகூடிய சொற்களில் வார்த்தைகளை அடுக்கும் அந்த கலை அவரை தவிர யாருக்கும் வராது,


அவர் ஆரம்பித்த இயக்கத்தின் தொடக்க கால பேச்சுக்கலை அப்படி, பின்னாளில் ஹிஹிஹிஹிஹி அதுவும் வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் எல்லாம் உவ்வே


இன்று நாஞ்சில் சம்பத் வரை வந்து நிற்கின்றது.


அதுவரை சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு, அதனையும் கட்சி சார்பாக மாற்றிய சாதுர்யம் அண்ணாவினையே சேரும், இன்றளவும் தமிழ்சினிமா அரசியலை மிரட்டிகொண்டிருக்கின்றது என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டது அண்ணவே. அவர்தான் அவர் ஒருவர்தான்


இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாது, மம்முட்டியோ அல்லது அமிதாப்பச்சனோ சாதிக்கமுடியும் என கருதுகின்றீர்கள்?,ஆனானபட்ட ஜாக்கிசானால் கூட சைனாவில் முடியாது.


தமிழகத்தை தவிர உலகில் வேறு எங்கும் முடியாது


சில பெரிய தலைவர்களும் மனிதர்களே அவர்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்கள் பெரும் இன்னல்களை கொடுக்கும், இன்று நமது பகுதியை கெடுக்கும் சீமை முள்மரங்கள் இவ்வளவு பெரிய இடைஞ்சலை கொடுக்கும் என காமராஜர் எண்ணியிருப்பாரா? அதே தான் சினிமா பெரும் பாதிப்பை தமிழகத்தில் கொடுக்கும் என அண்ணாவும் எண்ணியதில்லை.


எப்படியும் திராவிட நாட்டை அடைந்தே தீருவோம் (கேரளா, ஆந்திரா,கன்னடம், தமிழகம் என நான்கு மாநிலங்களையும் அடக்கியது) என புறப்பட்ட அண்ணாவினை தமிழகம் நம்பியது, கவனியுங்கள் தமிழகம் மட்டும் நம்பியது மற்ற மாநிலங்கள் மொழிவாரியாக பிரிந்து திராவிட சித்தாந்தைதேயே மறந்தன,


ஐதராபாத் சமஸ்தானமும், காஷ்மீரும் இந்தியாவுடன் இணைக்கபடும் பொழுதே அண்ணாவுக்கு உண்மை விளங்கிற்று வாய்புக்காக காத்திருந்தார்,அவரது பேச்சின் உவமை தானாக அமைவது போலவே, பொதுவாழ்வில் வாய்பும் அமையும்.


சீனப்போர் பெரும் வாய்ப்பாயிற்று.


தனிநாடு முடிவினை கைவிடுகின்றோம் என்று அறிவித்து தமிழக அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார், திரை கலைஞர்கள், பத்திரிகை, கல்லூரி மாணவர்கள் என எல்லோருடைய இதயங்களிலும் இடம்பிடித்தார்.


சில குறைகளும் உண்டு, கடவுள் நம்பிக்கையை சாடுகின்றோம் என்று கம்பனை அவர் பழித்தது கொஞ்சமல்ல, பெரும் கவிஞனான அவனது படைப்பும் பழிக்கபட்டது, பிராமணர் என்ற காரணத்திற்காய் பாரதியாரும் கவனம் பெறவில்லை.குறளின் சில பக்கங்கள் தவறான அர்த்தமிடபட்டது,


இன்னும் சில குறைகள் இருந்தாலும் உண்மையில் ஒரு பெரும் புரட்சிக்கு அடிகோலினார்.


கட்சி நடத்துவது எவ்வளவு கடினம் என கண்டுகொண்டவர், ஏதோ சமீபத்தில் தி.மு.கவில் உட்கட்சி குழப்பம் தாண்டவமாடுவதாக பத்திரிகைகள் எழுதி தள்ளும், உண்மையில் அந்த கட்சி தொடங்கியதில் இருந்தே குழப்பம்தான், முடிந்த வரைக்கும் முயற்சித்தார் அண்ணா,


திரைகலைஞர்களை கட்சியில் வளரவிடுவது நல்லதல்ல என சொன்ன சம்பத்தும் அவரது ஆதரவாளர்களும் தனிகட்சி கண்டனர், ஆனாலும் சமாளித்து வெற்றி பெற்றவர் அண்ணா.


இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக அரசியலில் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது, 100க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து பெரும் ரத்தகளரியான அந்த போராட்டம் அண்ணாவின் மேல் ஒரு பரிதாபத்தினை ஏற்படுத்தியது.


மக்கள் அவரை அப்படி நம்பினர், துருக்கியின் கமால் பாட்சா, ரஷ்யாவின் லெனின், மாமேதை இங்கர்சால், கிரேக்கத்தின் சாக்ரடீஸ் எல்லோரும் மொத்தமாய் உருவான மனிதர் அண்ணா என கொண்டாடினார், சில இடங்களில் அண்ணாவும் மெய்பித்தார்.


அன்றைய காமராஜரை வீழ்த்தியது பெரும் ஆச்சரியமே, ஒரு குறை சொல்லமுடியாத தலைவர், டெல்லி தாண்டியும் செல்வாக்குள்ளவர், அவரையே வீழ்த்தும் ஒரு புரட்சியினை அண்ணா நடத்தினார்.


ஒரு வழியாக அவரே எதிர்பாராத வகையில் முதல்வரானார், காமராஜரிடம் ஆசியும், பக்தவத்சலத்திடம் வாழ்த்தும் வாங்கிய பெரும் பண்பாளர்.


2 எம்.ஏ பட்டம் பெற்றவரல்லவா? அவரது பொறுப்பு அவருக்கு புரிந்தது, காமராஜரையே புறக்கணித்து மக்கள் தன்னை தேர்ந்தெடுத்திக்கிறார் என்றால், தான் எவ்வளவு சிறந்த ஆட்சியை கொடுக்கவேண்டும் என்ற கவலை உண்டாயிற்று,


கட்சிகாரர்களுக்கு அந்த கவலையே இல்லை, அண்ணா கடுமையாக உழைத்தார், மக்கள் நம்பிக்கையை காப்பாற்ற முடிந்த மட்டும் போராடினார், ஆனால் உடல்நலம் குன்றிற்று.


சொன்னபடி ரூபாய்க்கு மூன்றுபடி அரிசியை வழங்க முடியவில்லை (காமராஜரும் வழங்க முடியாது என்றுதான் சொன்னார்), சாராய கடைகளை திறந்தால் வழங்கமுடியும் என்று அவருக்கு கலைஞரால் சொல்லபட்ட ஆலோசனையை சினந்து புறக்கணித்தார்.


"ஒருவர் வாழ ஓராயிரம் குடும்பத்தை அழிக்கும் அந்த பாவச்செயலை நான் செய்யவே மாட்டேன், கழகமும் செய்யாது" என்றார்.


தான் காலம்காலமாக சொன்ன சில தீர்மானங்களை செயல்படுத்தினார், அதில் சீர்திருத்த திருமணத்தினை சட்டமாக்கியதும் ஒன்று, திராவிட நாட்டு கோரிக்கையை கைவிட்டதை மறைக்க சென்னை மாகாணத்தை "தமிழ்நாடு" என அறிவித்து வித்தை செய்தார்.


இந்தியாவின் மாநில கட்சிகள் தேசிய கட்சியை தூக்கி எறியமுடியும் என செய்துகாட்டியவர் அவர்தான்.


1960களில் இந்தியாவில் மூன்றாவது அணி முப்பதாவது அணி, இல்லை தேர்தலில் மட்டும் கூட்டணி போன்ற குழப்பங்கள் இருந்திருந்தால் நிச்சயமாக சொல்லலாம் ஒரே தமிழ் பிரதமர் என்ற வாய்ப்பு அண்ணாவிற்கு கிடைத்திருக்கும், ஆனால் காலம் அப்படியல்ல, நேரு கிட்டதட்ட அரசர்.


முதலில் திராவிடத்தையே காப்பவராகவும், பின்னர் தமிழனத்தை காக்கும் போராட்ட தளபதியாக அறியபட்ட அண்ணாவிற்கு காலம் பல உண்மைகளை உணர்த்தியது, டெல்லியினை எதிர்த்து அரசியல் செய்வதிலும் அதில் உள்ள சிக்கல்களையும் உணர்ந்தார், கன்ன்டன் கன்னடனாக, 
தெலுங்கன் தெலுங்கனான, மலையாளி மலையாளியாக ஆனால் இந்தியனாக இருக்கும் பொழ்து நாம் மட்டும் திராவிடனாக டெல்லியை பகைத்துகொண்டோம் என்று சில சிக்கல்களுக்கும் ஆளானார்.


ஆட்சியிருந்தது வெறும் 20 மாதங்கள் தான், அதுவும் ஆட்சிக்கு வரும்பொழுதே நோயுடன் தான் வந்தார், ஒரு பக்கம் நோயோடு போராடினார், ஒரு பக்கம் கட்சியோடு போராடினார், மறுபக்கம் ஆட்சிநடத்த நிதிவேண்டி டெல்லியோடு போராடினார், ஆனால் அந்த நிலையிலும் உண்ர்ச்சிவசபடவில்லை நிதானமாக நடந்தார்,


அந்த நிதானமே அவரின் சிறப்பு.


அவரது மறைவுக்கு பின்னரே தமிழகம் பல இன்னல்களை சந்திக்க தொடங்கியது, மதுக்கடைகள் திறக்கபட்டன, சினிமா தமிழக அரசியலை ஆட்டுவிக்கும் சக்தியானது, கல்வி கொள்ளைகள், இன்னும் பலவகையான முறைகேடுகளும் தலைதூக்கின.


அண்ணாவோடு அவரின் கொள்கைகளும் மறைந்தன,


எந்த டெல்லி காங்கிரசை எதிர்த்தாரோ, அதே காங்கிரசுக்கு தமிழகத்தில் கூட்டணி கொடுமைகள் அரங்கேறின, தமிழக தலமைகளை கட்டுக்குள் கொண்டுவரும் வித்தைகளை டெல்லி அழக்காக கற்றது, தமிழ கட்சிகளை கவனித்த டெல்லி, தமிழக மக்களை பற்றி அதிகம் கண்டுகொள்ளவில்லை.


இன்னொன்று அமெரிக்காவுடனான அண்ணாவின் நெருக்கம் சந்தேகத்திற்குரியதாயிற்று, இந்திய பிரிவினையினை ஊக்குவித்த அந்த நாட்டுடன் அதுவும் பனிப்போர் பாலத்தில் அண்ணா காட்டிய நெருக்கமும் சில சந்தேகங்களை வளர்த்தன‌


(பின்னாளைய திமுக, திக எல்லாம் புலிகளை விழுந்து விழுந்து ஆதரித்ததும், 2005 க்கு முன்பு வரை புலிகளுடன் அமெரிக்காவிற்கு இருந்த நெருக்கமும் கொஞ்சமல்ல‌


அந்த ஒருங்கிணைப்புதான், இந்த வலைப்பின்னல்தான் ராஜிவினை தமிழக மண்ணில் கொல்லுமளவிற்கு புலிகளுக்கு தைரியம் கொடுத்தது எனும் தியரியும் உண்டு


இவை ஒரு வகையான இந்திய, ஆசிய மற்றும் உலக அரசியல்)


ஆனால் தமிழகமோ அண்ணா பின்னாலே நின்றது.


பின் டெல்லி வாக்களிக்கும் கன்னட,கேரள மக்கள் பக்கம் சாய ஆரம்பித்தது, காவேரி, பெரியாறு என சகல பிரச்சினைகளிலும் தமிழகம் ஓரம்கட்டபட்டது, ஏற்கனவே திராவிட நாடு கேட்டவர்கள், பின்னாளில் தமிழ்நாடு என மாநிலத்திலே "நாடு" கொண்டிருப்பவர்கள், என தமிழகத்தினை வேறுமாதிரி குறித்தது டெல்லி,


அது காங்கிரசோ,ஜனதாவோ அல்லது பாரதீய ஜனதாவோ ஆட்சி மாறுமே தவிர டெல்லியின் கொள்கை மாறாது, குறித்துவைத்தது மாறாது.


அந்த குறிப்புதான் தமிழகத்தை கெடுத்ததோ இல்லையோ, ஈழம் என்றொரு நாடு அமைவதை கெடுத்தது, சகல வாய்ப்புகளும் அமைந்தபொழுதும் இந்தியா அந்த "திராவிட நாடு" கோரிக்கை இருந்ததை கொண்டே ஈழத்தினை விரும்பவில்லை,


ஆனால் தமிழகம் போல ஒரு ஈழ மாநிலத்தை இந்தியா விரும்பிற்று, இறுதியில் யார் விரும்பியதும் நடக்கவில்லை, ஜெயவர்த்தனே விரும்பியது மட்டும் நடந்தது.


மிகசிறந்த அறிவாளி, எழுத்துலகில் புது புரட்சியும், பேச்சுலகில் புது எழுச்சியும் கொண்டுவந்தவர், பெரும் பண்பாளர், காலத்திற்கும் நிலைக்கும் புகழ்மிக்க வாக்கியங்களுக்கு சொந்தக்காரர், பெரியார் போல ஒரு சமூக போராளியாக நின்றிருந்தால் இன்னமும் வெற்றி பெற்றிருப்பார், மக்கள் அவரை அரசியல்வாதியாய் ஏற்றுகொண்டதும் சரி,


ஆனால் மிக விரைவில் இறந்ததுதான் மாபெரும் தமிழக சோகம், ஆயுள் மட்டும் கூடுதலாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் சில விபத்துக்கள் நடந்திருக்காது.


பொதுவாக இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் நல்லவர்கள் விரும்புவது மட்டும் நடக்கவே நடக்காது, அண்ணா கண்ட தமிழகம் இது அல்ல, மதுவிற்கும் ஊழலுக்கும் அவர் எதிரி, அரசு வேறு, கட்சி வேறு,குடும்பம் வேறு என்பதில் உறுதியாய் இருந்தார்,


எதிர்கட்சிதான் நமது ஆட்சியின் அளவுகோல் என்பதில் மிக உறுதியாய் இருந்தார், யாரையும் காயபடுத்தாத ஒரு உயர்ந்த குணம் அவரிடம் இருந்தது.


ஒரு அழகான அறிவு பேழை அது, காலம் பார்த்து இறைவன் தமிழகத்திற்கு வழங்கிய கொடை அது, மகாபாரத கர்ணன் போல அது இருந்த இடம் வேறு, ஒரு சரியான இடத்திற்கு வரும்பொழுது அது உடைந்துவிட்டது.


அதோடு ஒரு நாகரீகமான சமுதாயத்தின் வீழ்ச்சியும் ஆரம்பமாயிற்று.


காமராஜர் வீழ்ந்ததும், அவரை வீழ்த்திய அண்ணா இறந்ததும் இரு பெரும் குண்டுகளாய் தமிழகத்தை தாக்கின, விளைவு நீங்களும் நானும் காணும் தமிழகம், அண்ணா பாணியில் சொல்வதென்றால்


"ஏ தாழ்ந்துகொண்டிருக்கும் தமிழகமே".


தமிழனினத்தினை தாங்கி நிற்கு இயக்கத்தை உருவாக்க எண்ணி, நவீன தமிழுக்கும் தொண்டாற்றி, தமிழுக்கே புதுவடிவம் கொடுத்து, அரசியலுக்கும் வந்து காலத்திற்கும் தமிழினம் நிமிர்ந்து நிற்கும் சாதனைகளை செய்ய வேண்டியவர், காலத்தால் வங்க கடலோரம் தூங்க சென்றுவிட்டார்.


அவரது கொள்கைகள் அண்ணா சாலை வழியாக எல்லா பஸ் நிலையங்களுக்கும் ஏற்றுமதியாயிற்று, அவரது வழியாய் திராவிட பெருமையை மீட்க வந்தவர்கள் எல்லாம், திராவிடத்தை மீட்கபோன வழியில் கிடைத்த தங்கத்திலே தங்கிவிட்டார்கள், கல்வி முதல் மருத்துவம் வரை தங்கம் கொட்டும் தமிழகம் இது, டாஸ்மாக் வேறு வைரமழை பொழிகிறது.


சென்னை விமான நிலையத்தில் பெரிதாக வீற்றிருக்கும் பிரமாண்ட அண்ணாவின் படம் கூட‌, திடீர் திடீரென் இடிந்து விழும் விமான நிலையத்தை கண்டபடியே கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கின்றது.


"விதியே, விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?"
இது அண்ணாவினை நினைக்கும் பொழுது ஒவ்வொரு தமிழனனின் காதிலும் வந்து ஒலிக்கும் வாக்கியம்.


இன்று அண்ணாவின் பிறந்த நாள்,


அண்ணாவிற்கு பின் கலைஞர் அண்ணா காட்டிய வழி என ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார், அது என்ன வழி என இதுவரை யாருக்கும் தெரிவதில்லை,ஒரு வேளை கோட்டைக்கு செல்லும் வழியாக இருக்கலாம்


ராமச்சந்திரனோ அண்ணாயிசம் என ஒரு கொள்கை வைத்திருந்தார், அது கேப்பிடலிசம், கம்யூனிசம், சோஷலிசம் மாதிரி பெரிய கொள்கையா? அதன் கோட்பாடு என்ன என்று இறுதிவரை அவர் சொல்லவே இல்லை


ஆனால் நான் பின்பற்றுவது அண்ணாயிசம் என அடிக்கடி சொல்லிகொள்வார், என்ன இசமோ? எல்லாம் இம்சை.


ஒருவேளை அவர் படங்களில் வரும் "அண்ணா.............." அல்லது "அண்ணா நாமம் வாழ்க" என்பதாக இருக்கலாம் என்ன நாமமோ ஆனால் அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது பட்டை நாமம்.


இன்று அவர்பெயரில் இருப்பதுதான் தமிழக ஆளும் கட்சி, அசைக்க முடியா கட்சி, கடந்த 50 வருடங்களாக அவர் பெயரினை சொல்லித்தான் தமிழக ஆட்சி அமைந்துகொண்டிருக்கின்றது


ஆனால் அவர் கொள்கைகளுக்கும் ஆட்சிக்கும் வெகுதூரம், டாஸ்மாக் ஒன்றே உதாரணம்


அவர் நாத்திகர்தான் ஆனால் "பிள்ளையாரை பிடிக்கபோய் குரங்காய் முடிந்தது" எனும் பழமொழி அவரின் அரசியல் முயற்சிக்கே பொருந்தும்


எதனையோ அவர் செய்யபோக, எல்லாம் நாசமாகி தமிழ்நாடு சினிமா மயமாகி இன்னும் மகா மோசமாகி மீளா துயிலில் கிடக்கின்றது.


லெனினுக்கு பின் ஸ்டாலின் வந்தார் சோவியத் எழுச்சி கண்டது, மாவோ பின் டெங் ஜியோ பிங் சீனாவினை தாங்கினார். கென்னடிக்கு பின் ரீகன் உலகினை கலக்கினார் இப்படி ஒவ்வொரு தலைவனுக்கு பின்னும் சுயநலமற்ற தலமைகள் வந்து தம் இனத்தை காத்தன‌


ஆனால் அண்ணாவிற்கு பின் அப்படியான சிந்தனையாளர்களும், செயல்வீரர்களும் வரவில்லை. வந்ததெல்லாம் கலைஞர், புர்ச்சி தலைவன் , புர்ச்சி தலைவி, வைகோ. கருப்பு எம்ஜிஆர், சின்ன எம்ஜிஆர் என அழிச்சாட்டியங்கள்


உலக விதி அப்படி, நமது தமிழக தலைவிதி இப்படி


ஆனால் அண்ணா என்பவர் தமிழகத்தின் பெரும் புரட்சியின் அடையாளம் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை, அவர் திரட்டிய மக்கள் சக்தி அப்படி, அவர் அமைத்து காட்டிய இந்தியாவின் முதல் மாநில கட்சி ஆட்சி அப்படி.


வங்க கடலோரம் அதனை கண்டு கண்ணீர் விட்டு கொண்டிருக்கின்றது அண்ணா சமாதி


அணுகுண்டு தத்துவத்தை சொல்லிவிட்டு அணுகொடுமையை காண சகிக்காமல் அழுத ஐன்ஸ்டீனுக்கும், திராவிட அரசியல் தீயை பற்றவைத்த விட்டு காமராஜர் சரியும் பொழுது கண்ணீர் விட்டழுத அண்ணாவின் நிலைக்கும் , அழுதுகொண்டிருக்கும் அந்த சமாதிக்கும் எந்த வித்தியாசமுமில்லை.


வடகொரியா சமத்துவம் பூத்துகுலுங்கி உலகிற்கே முன்மாதிரியாக இருக்கவேண்டும் என கனவு கண்டவர் அதன் முதல் தலைவர் கிம் சுங், அப்படித்தான் அவர் ஆட்சியினை பிடித்து நாட்டை நடத்தினார்


ஆனால் அவரின் வாரிசான இன்றைய கிம் அந்நாட்டை கெடுத்து வைத்திருப்பது கொஞ்சமல்ல, விரைவில் பெரும் அழிவினை சந்திக்கபோகும் நாடு, மக்கள் எல்லாம் இன்று அடிமை கூட்டம்


அதே தான் தமிழக நிலையும்


அந்த கிம் சுங் இடத்தில் அண்ணாவினை வைக்கலாம், அந்நாளைய வடகொரியாவினை வைக்கலாம்,இன்றைய அண்ணா அரசியல் வாரிசுகளை அதே இன்றைய வடகொரிய அழிச்சாட்டிய அதிபரின் இடத்தில் வைக்கலாம், பின் தமிழகம் தமிழக மக்கள் என்ன இடம்?


அதே தான் இரண்டும் பரிதாபத்திற்குரியன, இரு தேச மக்களும் பரிதாபத்திற்குரியவர்கள்


வடகொரியர்களுக்காவது தேர்தல் இல்லை, உரிமை இல்லை பரிதாபம். ஆனால் எல்லாம் இருந்தும் இப்படியே இருக்கும் தமிழனின் நிலை


அவர்களை விட பெரும் பரிதாபமில்லையா?


அப்படியானால் இவர்களை வாழவைக்க முடியும் என கனவு கண்ட அண்ணா எவ்வளவு பரிதாபத்திற்குரியவர்?.


கட்சி என்பது எவ்வளவு தொலைநோக்குடன் நடத்தபடவேண்டியது, மக்கள் நலன் எவ்வளவு முக்கியமானது, ஆட்சி எவ்வளவு முக்கியமானது,


திரட்டபட்ட மக்கள் சக்தியினை தவறான கரங்களில் ஒப்படைத்தால் என்ன ஆகும் என்பதனையே அண்ணாவின் வாழ்வு குறிப்பிடுவதாக அமைந்துவிட்டதுதான் தமிழக சோகம்.


வடகொரிய சோகம் போல‌...













 










மீள்பதிவு..








Monday, September 11, 2017

நலம்கெட புழுதியில் எறியபட்டவர்



Image may contain: 1 person, beard, hat and textநலம்கெட புழுதியில் எறியபட்டவர்


செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள்.


நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே 
பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம்,
நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன்.


ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த பின்னால் சிலைவைத்து வணங்கும் உயர்ந்த அறிவுகொண்ட தமிழ்சமூகத்தில் பிறந்ததுதான் அவன் தவறு, அதில் அவன் தவறு என்ன இருக்கிறது? விதி.


6 வயதில் கவிதை எழுதினார், நெல்லையில்தான் தமிழை கற்றார், பின்னர் காசியில் கல்வியோடு மொத்த உலகத்தையும் படித்தார், ஆங்கிலம், பிரென்ஞ்,சமஸ்கிருதம்,வங்கம் என பலமொழிகளை படித்ததனால் தான் திமிராக சொன்னார்


"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிமையானதை காணோம்", உண்மைதான்
பல ஊர்களில் தண்ணீர் குடித்தால்தான் சுவையான நீர் எது என்று தெரியும், அவருக்கு தெரிந்தது.


தமிழை கற்றார் தமிழ்கவிதைக்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தார், அருட்சகோதரி நிவேதிதாவை கல்கத்தாவில் கண்டார் உண்மை உணர்ந்து பெண்விடுதலைக்கு தமிழகத்தில் முதல் குரல் கொடுத்தார், சமூக அவலங்களை கண்டார் சமூகவாதியானார், பிரிட்டிசாரின் கொடுமையை கண்டார் போராளியானார்.


எந்த வம்புதும்புக்கும் போகாமல் எழுதிமட்டும் கொண்டிருந்தால் தாகூரை விட பெரும் கவிஞனாக கொண்டாடபட்ருப்பர்,


ஆங்கிலேயனை ஆதரித்திருந்தால் இன்று பெரும் பணக்கார கவிஞனாக வரலாற்றில் இருந்திருப்பான் இங்கல்ல லண்டனில், அவரது ஆங்கிலபுலமை அப்படி.
ஏன் எட்டயபுர மன்னரை புகழ்ந்து ஒரு நாளைக்கு 2 பாடல் எழுதியிருந்தால் இன்று பாரதியின் வம்சம்


4 மில்களோடு நெல்லையை அல்லது தூத்துகுடியினை ஆண்டுகொண்டிருக்கும்,
அவ்வளவு ஏன் ஆசிரியபணியினை ஒழுங்காக செய்தால் கூட ராதாகிருஷ்ணன் அளவிற்கு உயர்ந்திருப்பான்,


அந்த பத்திரிகையாவது ஒழுங்காக நடத்தினால் இன்று அது தொலைகாட்சி நடத்தும் அளவிற்கு பெரும் ஊடகமாக வளர்ந்திருக்கும்.


அப்பாவி சுப்பிரமணிய பாரதி இவற்றை எல்லாம் எப்படி தவறவிட்டார் என்றால் இரண்டே காரணம்தான் ஒன்று இந்த நாட்டை தீவிரமாக நேசித்தது, இன்னொன்று சமூக கொடுமைகளை கண்டித்து உண்மையை உரக்க சொன்னது,
முதலாவது ஆட்சியாளர்களின் கோபத்தை கிளறியது, இன்னொன்று சொந்த மக்கள் பாரதியை விரட்ட வைத்தது.


வளைந்தும், நெளிந்தும், கெஞ்சியும், கொஞ்சியும்,மிரட்டியும், விரட்டியும் வாழவேண்டிய சமூகத்தில் அவர் மட்டும் மனிதனாக வாழ்ந்தார், மனித நேயத்தோடு வாழ்ந்தார்.


உண்மையில் பராசக்தி வசனம் அவருக்குதான் பொருந்தும்,
பிரிட்டிசார் விரட்டினர் ஓடினார், வறுமை விரட்டியது ஓடினார், சமூக கொடுமைகள் விரட்டியது ஓடினார்,ஓடினார் முடிந்தவரை ஓடினார், முடியவில்லை இறந்தார்.
ஒரு மனிதனுக்கு தாங்கமுடியாத அவமானம் என்பது அவனது திறமையை பரிகாசிப்பது, அதற்கு அங்கீகாரம் தர மறுப்பது, ஒரு வகையில் அது ஒரு உளவியல் கொலை, அதைத்தான் அந்த சமூகம் பாரதிக்கு செயதது, பாவம் அவன் "நல்லதோர் வீணை செய்தே" என அவனால் தெய்வத்திடம் புலம்பத்தான் முடிந்தது, "சக்திகொடு" என கெஞ்சத்தான் முடிந்தது,


அவனுக்கிருந்த அறிவிற்கு அவனோடு சமமாக பேசகூட யாருமில்லை, ஒதுக்கினார்கள்,விரட்டினார்கள் அவன் கவிதையோடும், கடவுளோடும், பறவையோடும், கழுதையோடும் பேசிக்கொண்டிருந்தான் அந்தோ பரிதாபம்.
அங்குமிங்கும் ஓடினான், இந்த சமூகத்தில் தனக்கான இடத்தை பிடிக்கலாம் என நம்பினான், முடியவில்லை.
உலகிலே மிக கொடுமையான ஒரு விஷயம் உண்டென்றால் ஒரு அறிவாளியினை 10 முட்டாள்களோடு வாழவிடுவது அதுதான் பாரதிக்கும் நடந்தது.


குடும்பமும் வறுமையும் அவனை பணம் சம்பாதிக்க கட்டாயபடுத்தின, கண்ணனை நினைத்து பாடி மகிழ்ந்து கொண்டிருந்த காலமது, அப்பொழுதும் பாரதபோரையும் இந்திய சுதந்திரத்தினையும் தொடர்புபடுத்தி பாஞ்சாலி சபதம்தான் எழுத துணிந்தான். கொடும் துன்பங்கள் அவருக்கு உண்மையை உணர்த்திற்று,


கனவு வேறு,கடமை வேறு, வாழ்க்கைவேறு, இதனை உணர்த்தியது அவரது தோழரான‌வ.உ.சியின் சிறைகொடுமையும், சுப்பிரமணிய சிவாவின் கொடுமையான இறுதிகாலமும்
விளைவு ஒரு பெரும் கவிஞன், பன்மொழி ஆசிரியன், பெரும் காவியங்களை படைக்கும் ஆற்றல் உள்ளவன் ஒரு சாதாரண பத்திரிகையாளன் ஆனார்,


விறகு பொறுக்க யானை, எலி வேட்டைக்கு சிங்கம், புல் புடுங்க புல்டோசர் போல ஆனது நிலை.


இறுதிகாலத்தில் பித்துபிடித்தவர் என்றும், வாழதெரியாதவர் என்றும் புறக்கணிக்கபட்டவர், அப்போதும் ஏதோ எழுதிகொண்டிருந்தார், அப்பொழுது எழுதியவைதான் சாகாவரம் பெற்ற தேசபக்தி பாடல்களும், இன்னும் பல அழியா பாடல்களும்.


ஒன்று நிச்சயமாக சொல்லலாம், இந்தியாவின் தேசியகீதமாக்குவதற்கு அவரது பாடல்களை தவிர நிச்சயமாக எக்காலத்திலும் வேறுபாடல்களில்லை,
ஆனால் இந்திய இலக்கிய உலகம் வங்காளிகள் கையில் இருந்தது, எளிதாக தாகூரின் பாடலை தேசிய கீதம் ஆக்கினார்கள், எந்த பாடல் 1911ல் ஜார்ஜ் மன்னருக்காக‌ தாகூர் எழுதியதாக சர்சையில் சிக்கிய‌ அதே பாடல், "ஜண கண மன" எனும் அந்த பெரிய பாடல்


அன்று தாகூர் எழுதியது மிக பெரும் பாடல், அதை பாடி அரைமணி நேரம் கச்சேரி செய்யலாம், அதனை 5 நிமிடமாக சுருக்கி "இந்திய தேசிய கீதம்" என அறிவித்துவிட்டார்கள், என்ன செய்வது, பாடித்தான் ஆகவேண்டும். பாடுகின்றோம்


இந்தியாவில் இல்லாத சிந்து, (பிரிந்த) பஞ்சாபையும்,
வங்கதேசம் ஆகிவிட்ட வங்கத்தையும் சேர்த்து. சிந்துவை இன்னமும் வாழ்த்திகொண்டிருக்கின்றோம், ஆனால் அதன் கரையிலேதான் இந்தியாவினை அழித்தொழிக்க திட்டம் தீட்டபட்டுகொண்டிருக்கின்றது என்ன கொடுமை இது.
ஆனால் "தாயின் மணிக்கொடிபாரீர்" அல்லது "வந்தே மாதரம் என்போம்" போன்ற பாடல்களில் சிறிது மாற்றம் செய்துபாருங்கள், அற்புதமான தேசிய பாடல்கள் கிடைக்கும்.


ஒன்றும் சொல்வதற்கில்லை ,"ஏழை சொல் அம்பலம் ஏறாது, தமிழன் சொல் டெல்லிக்கு கேளாது".


தாகூருக்கு வெள்ளையர் கொடுத்த பெரும் வெகுமதி பின்னாளைய "நோபல் பரிசு", பாரதியோ வெள்ளையர் விரோதியாய் பாண்டிச்சேரியில் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே" என பாடிகொண்டிருந்தார், அவருக்கு வெள்ளையன் கொடுத்தது "தேச துரோகி" பட்டமும் சிறைதண்டனையும்.


பாரதி இந்தியாவினை எவ்வளவு நேசித்தார் அல்லது இந்தியா பற்றி அவரின் கனவு என்ன? என்பதற்கு அவரின் பாடல்களே சாட்சி, தாகூர் சிறந்த கவிஞர்தான் ஆனால் பாரதியின் "கணல்" அல்லது "உணர்ச்சி" அவர் பாடலில் இல்லை.


இந்தியா தேசிய கீதமாக நிச்சயம் பாரதியின் பாடலே இடம் பெற்றிருக்கவேண்டும், இந்தியாவில் எதுதான் ஒழுங்காக நடந்தது? ஆனால் பாரதியின் ஒரே ஒரு வரியினை மட்டும் டெல்லி மிக ஒழுங்காக பின்பற்றி அவரது கனவினை நிச்சயம் நனவாக்கும் என தோன்றுகிறது அது


"சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்",
இதில் மட்டும் டெல்லி பின்வாங்காது.


அவரது கனவுபடியே இந்தியா சுதந்திரம் பெற்றது, ஆனால் அவர் மிகவும் நேசித்த சிந்து நதி கூட இன்று இந்தியாவிற்கு இல்லை, பாரதி முன்னமே இறந்தார் இல்லை 1947ல் இறந்திருப்பார். எப்படியோ பெண்விடுதலைக்கும், தீண்டாமை கொடுமைக்கும், சாதி கொடுமைக்கும் எதிராக தீ வைக்க துணிந்தவர் பாரதி.


அவர் பாஷையில் சொல்வதென்றால் "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு".
அவர் வைத்த அந்த‌ தீ தான், பின்னாளில் எழுந்து பல தமிழக சமூக மாற்றங்களுக்கு வழிவிட்டது.


பாரதியின் வாழ்க்கையே கொடுமையானது, அவராவ‌து அறிவாளி இந்த சமூகத்தோடு ஒட்டமுடியாமல் அவதிபட்டார் விதி, ஆனால் அவரை நம்பி வந்த மனைவியின் வாழ்வே மகா கொடுமை, வறுமையும் புலமையும் அந்நாளைய தமிழக அறிஞர்களின் சாபம்தான், ஆனால் பாரதியாரின் சில செயல்கள் எந்த மனைவியையும் அம்மிகுளவி தூக்கவைக்கும்.


வருமானம் இல்லை, கடன் வாங்கி அரிசி வாங்க பணம் கொடுத்தால் புத்தகம் வாங்குவது, பக்கத்து வீட்டில் கடனுக்கு அரிசியாக‌ வாங்கி வைத்தால் காக்கா குருவிக்கு வீசி கவிதைபாடுவது, உச்சகட்டமாக குடும்பமே பசியில் வாடினால் அவர் விழித்திருந்து அழுது கவிதை எழுதுவார், பிள்ளைகளுக்காய் அல்ல பிஜி தீவில் கரும்புகாட்டில் அவதிபடும் இந்தியருக்காக‌


உலகின் கஷ்டத்த்தினை எல்லாம் உணர்ந்த பாரதிக்கு மனைவியின் கஷ்டம் புரியவில்லை,புரியவும் புரியாது காரணம் அவர் மனநிலை அப்படி. இறுதியாக சென்னை திருவல்லிகேணியில் ஒரு வாடகை வீட்டில் ஒண்டுகுடித்தனம் நடத்தும்பொழுதும் பாரதி அப்படியே இருந்தார், சொந்த பந்தம் யாருமில்லாத அபலையாக செல்லம்மாள் அந்த கோயிலிலே அழுவார்.


கோயிலின் தெய்வம் கோபபடவில்லை, ஆனால் கோயில் யானை கோபபட்டது, வழக்கம்போல பழம்கொடுக்க "அப்பனே கணேசா.." என அருகில் சென்ற பாரதியை தூக்கிவீசிற்று. அன்று நோயில் விழுந்தவர் விரைவாக உடல்நலம் கெட்டு செப்டம்பர் 11ல் காலமானார்.


இன்று அவர் பெரும் கவிஞர், இனி எந்த கவிஞனும் பிடிக்க முடியாத இடத்திற்கு சொந்தகாரர், கம்பனுக்கு பின் தமிழகம் கண்ட பெரும் கவிஞன், எந்த உண்ர்ச்சியில் பாட்டெழுதுகின்றானோ அதே உணர்ச்சியை அந்த‌ பாடலை கேட்பவருக்குள்ளும் கொண்டுவரும் அனாசய வித்தைக்கு சொந்தகாரன். 60 வருடம் 100 வருடம் கழித்து போடபடும் இசைக்கும் கட்டுபடும் வரிகளை மிக அழகாக எழுதியிருப்பது தான் பாரதியின் பெரும் சிறப்பு.


ஆனால் வாழும் பொழுது அவருக்கு ஒரு செம்பு தண்ணீர் கொடுக்கவும் ஆளில்லை, பேச கூட விரும்பவில்லை, ஒரு அகதியாய், ஒரு அனாதயாய் விரட்டி விரட்டி கொத்தபட்ட ஒரு பரிதாபத்திற்குரிய அறிஞன்.


ஆனால் 38 ஆண்டுகள் வாழ்வதற்குள்ளாகவே வரலாற்றில் இடம்பெற்ற அறிஞன் அவர், தமிழ் இலக்கியம் உள்ள காலமட்டும் பாரதியார் வாழ்வார், அப்படி ஒரு சூரியனை கொடுத்தது என்பதற்காக நெல்லையின் மக்களான நாமும் பெருமை அடையலாம்.


தனது ஏதாவது ஒரு வரியில் பாரதி நிச்சயம் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் தொட்டிருப்பார், அந்த மகா கவிஞனுக்கு ஒரு தமிழனாய்,நெல்லையனாய் அஞ்சலி செலுத்துவோம்.


வாழும்பொழுது வெள்ளையனை எதிர்த்தவன் என்பதற்காக விரட்டபட்டான், சுதந்திர இந்தியாவின் தமிழகத்தில் பிராமணன் என்பதர்க்காக அவன் புகழ் திட்டமிட்டு மறைக்கபட்டது.


பாரதியினை கொண்டாடினால் அவனின் தேசபக்தியும், ஒருங்கிணைந்த இந்தியாவினையும் கொண்டாடவேண்டும் என்ற நோக்கில் அவன் திட்டமிட்டு மறைக்கபட்டான், மொழிவெறியனான பாரதிதாசன் கொண்டாடபட்டான்


பாரதி இருந்திருந்தால் பாரதிதாசனை தூக்கிபோட்டு மிதித்திருப்பார் என்பது வேறுவிஷயம். எப்படியோ பாரதி இங்கு மறைக்கபட்டான் என்பது உண்மை


இப்பொழுது தமிழகத்தில் பாஜக குரல் எழும்புகின்றது, அந்த பாஜகவினராவது அவனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையினை கொடுக்கட்டும்


தமிழக பாஜகவினர் அவனுக்கு செய்வதாக இருந்தால் அவன் பாடல்களை இந்தியா முழுக்க கொண்டு செல்லலாம், வந்தே மாதரம் பாடலுக்கும், ஜனகணமன விற்கும் சற்றும் குறையாத பாடல் அவனுடையது.


தேசபக்தி என்றால் என்னவென்று வாழ்விலும் , பாடலிலும் சொல்லி சென்றவன் அவன். உண்மையான தேசபக்தி என்பது பாரதியிக்கு அஞ்சலி செலுத்துவதிலும் அவன் பாடாலை நாடெல்லாம் கொண்டு செல்வதிலும் இருக்கின்றது.


தாயின் மணிக்கொடி பாரீர் என்பதை விட மிக உருக்கமான தேசிய‌கொடி வாழ்த்து பாடலை எங்கு காணமுடியும்? வந்தே மாதரம் என்போம் என்பதை விட உணர்ச்சிமிக்க தேசிய பாடல் எங்கு இருக்கின்றது?


அவன் பாடல்களையும் தேசியமயமாக்க சொல்லலாம், எல்லா இந்தியனும் அதனை படிக்கலாம்


அதனை காங்கிரஸ் செய்யவில்லை, பாஜகவும் செய்யாவிட்டால் செய்வதற்கு யாருமில்லை













 


Tuesday, September 5, 2017

கப்பல் வாங்கவைத்த தமிழன் வ.வு.சி பிறந்த நாள்




[caption id="" align="aligncenter" width="848"]Image may contain: 1 person, close-up கப்பல் வாங்கவைத்த தமிழன்.[/caption]

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பல சிதம்பரங்கள் உண்டு, தில்லை சிதம்பரம், விஞ்ஞானி சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் என வரிசை பெரிது,


அவற்றில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம்.
அந்த காலத்திலே படித்தவர், அதுவும் வழக்கறிஞருக்கு படித்தவர். தொழிலை சுத்தமாக செய்தவர், வசதி குறைந்தவருக்கு இலவசமாக வாதாடினார் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுதே பெருமை உண்டு.


ஆனாலும் சுதந்திர தாகமெடுத்தது, அது அவருக்கு மட்டுமல்ல, அந்நாளைய பொதுநலவிரும்பிகள் மற்றும் பலருக்கும் எடுத்தது, நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பது அவர்கள் ஆசை, அவர்கள் நாசமாய் போகவேண்டும் என்பது வெள்ளையன் ஆசை.
பாரதியாரின் நட்பு இவரின் பாதையை மாற்றின,


பாரதியாரின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க நினைத்தார். அதாவது மேலைகடல் முழுதும் கப்பல் விடுவோம் எனும் பாரதியின் கனவை கீழ் கடலில் இருந்து ஆரம்பித்தார்,


சுதேசி கப்பல் போக்குவரத்து கழகம் தொடங்கினார், வெள்ளையனின் தொழில் எல்லாம் நாம் ஏற்று நடத்தினால் அவர்கள் தானாக அடங்குவார்கள் என்பது சிதம்பரனாரின் கொள்கை, அதில் சில உண்மையும் இருந்தது.


கொழும்பிற்கு கப்பல் விட்டார், காகித கப்பலே ஒரு காகிதத்தை கிழித்தால் தான் உருவாகும். நிஜ கப்பலுக்கு அப்படி பெரும் கரன்சி நோட்டுகள் தேவை அல்லவா?, சம்பாதித்ததும் மேலும் பரம்பரை சொத்துக்களும் கப்பலாய் மாறின, ஒரு கட்டத்தில் வெள்ளையன் கப்பலை விட சுதேசி கப்பல் பெரும் லாபம் ஈட்டியது.


தென் தமிழகமெங்கும் அவரின் புகழ் பரவியது, பல சங்கங்கள் , தொழிற்சாலை என அவரின் செல்வாக்கும் பரவியது. சொல்லப்போனால் தென்மாவட்டங்களை கையில் வைத்திருந்தவர். அவர் சொல்லுக்கு தீராத பிரச்சினைகள் இல்லை, மக்கள் செல்வாக்கு அப்படி.


வெள்ளை அரசாங்கம் அவரை குறிவைத்தது, சுப்பிரமணிய சிவா எனும் அறிஞனுக்கு அடைக்கலம் கொடுத்தார் என பல குற்றச்சாட்டுக்களில் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, மறைமுக தொந்தரவில் கப்பல் கம்பெனியை முடக்கியது.


சிறையில் செக் இழுக்க வைத்து அவரை பழிதீர்த்தனர் ஆங்கிலேயர், பல வகையான கொடுமைகள், அதில் தனி சிறையும் உண்டு. உடல்நலம் குன்றி அவர் வெளியே வந்த பொழுது, கப்பல் கம்பெனி பெரும் நஷ்டம், விளைவு கப்பல் கம்பெனி ஆங்கிலேயர் வசம் சென்றது.
மார்கெட் இழந்த நட்சத்திரம் சினிமாவில் தூக்கி வீசபடுவதை போல, சிறை மீண்ட சிதம்பரனார் கிட்டதட்ட கைவிடபட்டார்,


காங்கிரஸ் காந்தி வசம் சென்றது, இவரோ திலகர் வழி, சில காந்திய கொள்கைகள் அவருக்கு விருப்பமானது அல்ல, சுருக்கமாக சொன்னால் அவர் சிறைவாசத்தின் பொழுது என்னவெல்லாமோ நடந்து, போராட்ட முறை மாறியது, தானாக ஒதுங்கிகொண்டார் வ.உ.சி


தமிழுக்கு வ.உ.சி செய்த தொண்டு கொஞ்சமல்ல, ஏராளமான புத்தகங்களும் எழுதியிருக்கின்றார்.


வறுமை அவரை விரட்டியது, வெள்ளையரிலும் சில ஈரமுள்ளோர் இருந்தனர், வாலேஸ் எனும் அதிகாரி அவர் மீண்டும் வழக்கறிஞராக உதவினார், நன்றிகடனாக தனது கடைசிமகனுக்கு "வாலேஸ்வரன்" என பெயரிட்டார் வ.உ.சி.


ஒரு வெள்ளையனுக்கு இருந்த மனப்பான்மை பல இந்தியருக்கு அன்று இல்லவே இல்லை.
பின்னர் பத்திரிகை,வழக்கறிஞர் என பாதையை மாற்றினார், காரணம் கப்பல் கம்பெனி அவரின் வாழ்க்கையை புரட்டி போட்டது, கடமைக்கு வாழ்ந்து இந்தியா சுதந்திரம் வாங்கும் முன்பாக இறந்தார்.


இது கிட்டதட்ட 100 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சுதந்திர போராட்ட போராளியின் வரலாறு.


சமீபத்தில் ஒரு மனு கொடுப்பதற்காக ஒரு பாமர தொழிலாளி, சுவருக்கு வண்ணம் பூசும் சாதாரண தினக்கூலி ஒரு மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வருகின்றார்,
அந்த கலெக்டர் ஒரு வரம், பழைய நியாய தர்மங்களின் ஒரே நம்பிக்கை. அவர் இவரை பற்றி விசாரிக்கும் பொழுதே கண்கலங்குகின்றார்.


அந்த சாமான்ய தொழிலாளி வ.உ.சி பேரன், சொத்துக்களை எல்லாம் நாட்டிற்காக கொடுத்து தன் சந்ததியை மிகசரியாக நடுத்தெருவில் விட்டுவிட்ட அதே வ.உ.சியின் பேரன்.
இன்று சொந்த கப்பல்கள் இல்லாத அரசியல்வாதிகள் குறைவு,


தொழிற்சாலைகள் இல்லாத அரசியல்வாதிகள் இல்லை. இவர்களில் பெரும்பாலானோர் எல்லாம் கைவீசி கொண்டுதான் அரசியல் சந்தைக்கு வந்தவர்கள் என்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல.


இவர்கள் கப்பல் வாங்குவதற்குதான், தன் சொந்த சொத்துக்களை இழந்து வ.உ.சி போன்றவர்கள் கப்பல் விட்டு போராடி, செக் இழுத்திருக்கின்றனர்.


இன்று வ.உ.சி பிறந்தநாள் நாள் , கப்பல் விட்டு அவர் போராடிய அதே கடல்வழியில் தான், இன்று பல வளங்கள் கப்பல் கப்பலாக அனுப்பபட்டு கொண்டிருக்கின்றது.


அதில் பரிதாபத்துகுரிய வ.உ.சியின் கொள்கையும், போராட்டமும் அடக்கம்.













 




 


குருவே நமஹ...குருவே துணை



Image may contain: 1 person, hat, glasses and text


குருவே நமஹ...குருவே துணை


ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள்,


அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம்.


குருவில்லாத வித்தை பாழ், குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு ஏன் எல்லா அரசுகளிலும் ராஜகுரு என்று ஒருவர் இருப்பார், அரசனே அவரிடம்தான் ஆலோசனை கேட்பார், அரசனுக்கு ஏதும் ஆனதென்றால் அடுத்த மன்னனை தயார் செய்வதும் ராஜ்குருவே.


ராமனுக்கு விசுவாமித்திரரே குருநாதர்.


துரோணரிடமும் பீஷ்மரிடமும் வித்தைகளை கற்ற அர்ச்சுணனுக்கு இறுதியில் தெளிவினை கொடுத்தது அவனது குரு கண்ணணே. இன்று உலகெல்லாம் ஆலயம் அமைத்து கொண்டாடபடும் யேசு கிறிஸ்துவின் சீடர்கள் வாழ்ந்த காலத்தில் இயேசுவினை ஒரு ஞான ஆசிரியனாக போற்றினார்கள், மூல பிரதியின் மொழிபெயர்ப்பு சொல்வது அப்படித்தான்


கிட்டதட்ட கடவுளின் அவதாரம் என்றே குருக்களை முன்னோர்கள் வணங்கினர். ஒவ்வையார் சொல்வார் அல்லவா "எழுத்தறிவித்வன் இறைவன் ஆவான்", பிற்கால பாரதி சொன்னதும் அதுவே எல்லா சேவைகளுக்கும் மேலானது "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
அக்காலத்தில் குருக்கள் எல்லாம் ஆசிரியர்கள், நேரு தலைமையில் நவீன காலத்திற்கு நுழைந்த இந்தியாவும் ஆசிரியர்கள், கல்விக்கு அவர்களே அச்சாணி, சக்கரம் , ஆதாரம் எல்லாம்.


அவர்களை உற்சாக படுத்த ஒரு நாள் வேண்டும் அல்லவா?, கல்விபுரட்சிவேண்டுமென்றால் ஆசிரியர்கள் மனகுறைவு இல்லாமல் வாழவேண்டும் ஆனால் அவர்களின் நிலை அன்று அவ்வளவு நன்றாக இல்லை.


அக்காலத்தில் பள்ளிகள் குறைவு,படிக்க வருபவரும் குறைவு,படிப்பும் குறைவு, ஆசிரியர்களுக்கு சம்பளமும் குறைவு, பெரும் விவசாய நாடான இந்தியா அன்று விவசாயிகளை கொண்டாடிகொண்டிருந்தது (நம்புங்கள், அப்படியும் காலம் இருந்திருக்கின்றது).


நேரு போன்றவர்கள் மாணவனாக இருந்தபொழுது ஆசிரியர்கள் வீடு சென்று கற்றுகொடுத்திருக்கின்றார்கள், எழுத படிக்க தெரிந்தால் போதும், தேர்வு, சான்றிதழ் இன்னபிற கொடுமைகள் எல்லாம் இல்லை.(நாமெல்லாம் அக்காலத்தில் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் :) )


அந்த பரிதாபகரமான ஆசிரியர் பணியிலிருந்து உயர்ந்தவர் ஒருவர் பெயரில் கொண்டாடினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணினார்கள், பொதுவாக ஆசிரியர்கள் ஏணிகள் அல்லது தோணிகள் மாணவர்களை கடக்க உதவுவார்களே தவிர அவர்கள் அப்படியே இருப்பார்கள்,


மாணவன் படித்து அமெரிக்கா சென்று பில்கேட்ஸிடம் வேலை பார்த்து நொடிக்கு டாலர்கள் என சம்பாதித்தாலோ அல்லது பெரும் உத்தியோகஸ்தரகா மாறினாலோ அவனுக்கு கற்றுகொடுத்த ஆசிரியர் அங்கு இன்னொரு மாணவனுக்கு அ.ஆஆ அல்லது 1,2 என போதித்து கொண்டிருப்பார், அல்லது தோப்புகரணம் போட வைத்து கொண்டிருப்பார், அதுதான் ஆசிரியர் சிறப்பு.


ஆனால் 1950களில் ஒரு ஆசிரியர் உலகபுகழ்பெற்றிருந்தார், 18 புத்தகம் எழுதியிருந்தார், தத்துவ உலகில் முடிசூட்டிய மன்னராக இருந்தார், உலகம் அவரை அறிவாளி எனகொண்டாடியது, இன்றும் கூட‌ எதையும் கொஞ்சம் தாமதாக உணர்வதுதானே நேரு குடும்பத்தின் சிறப்பு, நேருவும் அப்படித்தான் இருந்தார், 1962ல் அவரின் சிறப்பினை உணர்ந்து, அந்நாளைய ஜனாதிபதியாக இருந்த அவரின் பிறந்தநாளே இந்தியாவுக்கு ஆசிரியர் தினம் என அறிவித்தார்.


அவர் சாதாரண ஆசிரியராக ஆரம்பித்து, உலக புகழ்பெற்று இந்திய ஜனாதிபதி ஆன, 133 கௌரவ டாக்டர் பட்டம்பெற்ற "சர்வபள்ளி" ராதாகிருஷ்ணன், சர்வபள்ளி என்றால் எல்லா பள்ளிகளிலும் பெயிலாகி படித்தவர் என்றோ அல்லது எல்லா பள்ளிகளிலும் பாடம் நடத்தியவர் என்றோ பொருள் அல்ல, அது அவர் ஊரின் பெயர், திருத்தணிக்கு அடுத்த ஊர், மனிதர் கொஞ்சமல்ல கடுமையான ஊர் பற்று உள்ளவர் போலும். ஊரை பெருமை படுத்தியிருக்கிறார்.


பழங்காலத்திலிருந்து ஆசிரியர்கள் உண்டு, ஆனால் ஆயிரகணக்கில் மாணவர்களை அவர்கள் பட்டைதீட்டுகின்றார்கள், ஆனால் ஒன்றோ இரண்டோ ஜொலிக்கும், அந்த ஜொலிப்பில் இந்த ஆசிரியர்கள் பிரகாசமாய் தெரிவார்கள்.


உதாரணம் வேண்டுமென்றால் அலெக்ஸ்சாண்டரை உருவாக்கிய அரிஸ்டாட்டில், சந்திரகுப்தனை உருவாக்கிய சாணக்கியன், அவ்வளவு ஏன் இன்று அப்துல்கலாமும் தனக்குள் விமான கனவினை விதைத்தது தனது ஆசிரியர்தான் என்பார். அதனால்தான் ஐன்ஸ்டீனை போல அப்துல்கலாமும் சிறந்த ஆசிரியராகவும் ஜொலிக்கமுடிந்தது.


ஒருகாலத்தில் வருமானம் குறைந்த பணி என ஒதுக்கபட்ட தமிழக‌ ஆசிரியர்களுக்கு 1980களில் வசந்தம் பிறந்தது, அதுவும் கல்லூரி ஆசிரியர்களுக்கு குபேரனே தலைக்குமேல் வந்தான். ஒப்பீட்டு அளவில் குழந்தைகள் கல்வியே சிரமம் மிக்கது உதாரணம் வேண்டுமென்றால் வெயிலில் ஒதுங்க கூட இடமில்லாமல் கத்தரிக்காய் நாற்று வைத்து கண்ணும் கருத்துமாக பார்க்கும் விவசாயத்திற்கும், உயர வளர்ந்துவிட்ட ஆற்றங்கரை தென்னந்தோப்பினை பராமரிப்பதற்கும் வித்தியாசமுண்டு,


ஒருகாலத்தில் ஆசிரியர் இருக்குமிடத்திற்கு மாணவர்கள் சென்றார்கள், நாளந்தா பல்கலைகழகத்தினை காண யுவான் சு வாங் கடந்தது 4000 மைல்கள். இப்பொழுது மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரே இடத்தில் சந்திக்கின்றனர், நாளை ஆசிரியர் இல்லாமல் கணிப்பொறி அல்லது இணையம் மூலமாகவே படிக்கலாம் என்கின்றார்கள், நமது கண்முன்னால் நடக்காது ஆனால் கண்டிப்பாக நடக்கும், அன்று ஆசிரியர் தினம் இருக்காது, ஆசிரிய எந்திரம் தினம் இருக்கும்.


பள்ளி கல்லூரிகளை விடுங்கள், அங்கே பாடம் மட்டும் நடத்துவார்கள், தாங்கள் படித்ததை வைத்து , மாணவன் இதை எல்லாம் படித்தால்தான் வகுப்பு தாண்டமுடியும் அல்லது பட்டம் பெற முடியும் என்ற எல்லைக்குள் சொல்லிதருவார்கள், விருப்பம் இருக்கின்றதோ இல்லையோ மாணவன் படித்தே தீரவேண்டும்.


இங்கே நல்ல குரு கிடைக்கபெற்றவர்கள் படிப்பில் ஜொலித்து, அறிவுசார்ந்த துறைகளில் ஜொலிப்பார்கள் அது அப்துல்கலாமோ, சுஜாதாவோ. ஆனால் இவற்றில் சரியான குரு கிடைக்காதவர்கள், தாங்களுக்கு பிடித்தமான துறையிலோ அல்லது தொழிலிலோ இறங்கும்பொழுது நிச்சயமாக ஒரு குருவினை கண்டு மிக உச்சத்திற்கு சென்று பிரகாசிப்பார்கள, அல்லது பிரகாசிக்க தயாரவார்கள்.


விவேகானந்தருக்கு பரமஹம்சர் போல‌ இன்று வியாபாரம், தொழில்துறை,பத்திரிகை, அரசியல் என சகலத்திலும் முத்திரை பதித்தவர்களை பார்த்தீர்கள் என்றால், தங்கள் குரு யார் என்பதை மிக சரியாக கண்டுகொண்டிருப்பார்கள், நல்ல குருவினை பெற்றவர்கள்தான் அழியாத சரித்திரத்திற்கு சொந்தகாரர்கள்.


சாதனையாளர்கள் அல்லது முத்திரை பதித்தவர்கள் என கொண்டாடபடும் அனைவருக்கும் ஆசிரியர்கள் உண்டு, அது கல்வி போதித்த ஆசிரியர்களாக இருக்கலாம், அல்லது தொழில்போதித்த ஆசிரியர்களாக இருக்கலாம், அல்லது வழிகாட்டிய நல்லவர்களாக கூட இருக்கலாம்,


எல்லோருக்கும் ஆசிரியர் உண்டு, குரு உண்டு, கல்விகூடங்களையும் தாண்டி ஆசிரியர்கள் உண்டு.


இவர்தான் தனது குரு என கைகாட்டுபவர்கள் எல்லோருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.













 




 


Monday, August 28, 2017

தமிழுக்கு தொண்டு செய்த கால்டுவெல்



Image may contain: 1 person, beard and close-upதமிழுக்கு தொண்டு செய்த வரிசையில் தமிழர்கள் மட்டும் அல்ல, பலநாட்டு அறிஞர்களும் பேருதவி புரிந்துள்ளனர், மறக்க முடியாதவர்கள் அவர்கள்.


அலெக்ஸாண்டர் காலத்திலே அவர்கள் அடைய துடித்த இந்தியா பின்னாளில் பிரிட்டிசார் காலத்திலே முழுக்க சாத்தியமாயிற்று, ஏராளமான ஐரோப்பியர் குவிந்து அவர்களுக்கு தேவையானதை தேடினர்


வியாபாரிகள், பேராசைக்காரர் ஒருபுறம், ஆன்மீகத்தை தேடியோர் இன்னொரு புறம், இங்கு தாழகிடந்தவர்களை உயர்த்த வந்தோர் ஒருபுறம் ஏராளமானோர் வந்தனர்.


இங்கிருக்கும் மொழிகளை கற்று அவற்றில் ஏதும் அறிவுசெல்வம் இருக்குமா என தேடி வந்தோரும் உண்டு, அவர்களில் ஒருவர்தான் கால்டுவெல்.


அவருக்கு அப்பொழுது இருபது வயது, அயர்லாந்துக்காரர் நிச்சயம் சமயபணிக்காகத்தான் வந்தார், கப்பலில் வரும்பொழுதே தெலுங்கு தெரிந்த ஒருவருடன் பழகினார். அப்பொழுதே தென்னக மொழிகளின் மீது அவருக்கு ஈர்ப்பு வந்தது


சென்னைக்கு வர 4 மாதம் ஆகும் நிலையில் கப்பலிலே தெலுங்கும், சமஸ்கிருதமும் ஓரளவு கற்றுகொண்டார், சென்னையில் இறங்கும்பொழுதே அவர் தெலுங்கு பேச படித்திருந்தார்.


சென்னையில் இறங்கிய பின்பு தமிழ் மொழி


சென்னையில் இறங்கினார், அங்கே துருவர் என்ப அறிஞரிடம் தமிழ்கற்றார், தமிழை அவர் கசடற கற்றது அங்குதான்


ஓருவருடம் மொழி படித்துவிட்டு, தமிழகத்தை படிக்க கிளம்பினார். தமிழகத்தை நடந்தே சுற்றினார் கால்டுவெல் சென்னையிலிருந்து திருச்சி , தஞ்சை என நடந்தார். சிதம்பரம் தஞ்சை கோயில்களை தரிசித்தார், பின் கோவைக்கு நடந்தார். அதன் பின்பே பாளையங்கோட்டை வந்தார்


தமிழகத்தை நடந்தே சுற்றியதால் அவருக்கு தமிழ்நாடும் புரிந்தது, தமிழும் புரிந்தது.


அக்கால போதகர்கள் எல்லாம் பால் தினகரன் போல கோட் சூட் போட்டு ஏசி அறையில் போதிப்பவர்கள் அல்ல, வேகாத வெயிலில் அலைந்து வறிய கிராமங்களில் குடிசையில் வாழ்ந்தவர்கள்


அப்படி கால்டுவெல்லும் இடையன்குடி எனும் தேரிகாட்டு கிராமத்தில் பனைமரங்கள் புடைசூழ்ந்த பகுதியில் குடியேறினார், அங்கிருந்தே கல்விபணி, சமயபணி எல்லாம் செய்தார். ஒரு ஆலயம் அமைத்தார் மிக அழகான ஆலயம் அது, அதனைவிட மகா முக்கியமானது அவர் ஆரம்பித்தபள்ளி.


அங்கிருந்துதான் தமிழின் அனைத்து பண்டைய நூல்களையும் கற்றார், அன்று அவை அச்சுக்கு கூட வரவில்லை சகலமும் ஓலை சுவடியே


அதனிலிருந்து கவனம் கவனமாக படித்து தன் முடிவுகளை அவர் ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார், அது பின் நூலாகவும் வந்தது


அவர் சொன்னது இதுதான் , தமிழ் உலகின் ஆதிமொழி தனித்துவமான மொழி. முதல் 6 பண்டைய மொழிகளில் ஒன்று


தெலுங்கு, கன்னடம், மலையாளம் , துளு எல்லாம் இந்த தமிழினின்றும் பிற மொழிகளின் கலவையிலும் உருவானவையே


இப்படி அவர் தன் ஆய்வு முடிவுகளை எழுதிய நூல்தான் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணக்கணம்" தமிழின் சிறப்பினை கூறும் மிக சிறந்த புத்தகம் அது, பின்னாளைய தேவநேயபாவணார் அதனைத்தான் தன் மேற்கோளாக கொண்டார்.


கடற்கரையெங்கும் சுற்றியிருக்கின்றார், இடையன்குடியின் அருகிலிருக்கும் உவரியின் பழமையினை பற்றி ஆய்வு செய்திருக்கின்றார், ஈழ தமிழருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்புகளை பதிவு செய்திருக்கின்றார்


ஈழதமிழர்கள் தமிழகத்தின் நெல்லைபகுதியில் இருந்து சென்றவர்கள் என்பது அவரின் முடிவு. பல விஷயங்களில் நெல்லையருக்கும் யாழ்பாணத்தாருக்கும் ஒற்றுமை அதிகம்


அங்கு காணபடும் திருநெல்வேலி, தாமிரபரணி போன்ற பெயர்களாகட்டும், சனிகிழமை பழக்கமாகட்டும், சொதி போன்ற உணவுகளாகட்டும் நெல்லைக்கும், யாழ்பாணத்திற்கும் தொடர்புகள் மிக அதிகம்


அதனை முதன் முதலில் ஆய்வில் சொன்னவர் கால்டுவெல்தான்


தமிழ் ஆராய்ச்சிகள் ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அன்றைய நெல்லை மாவட்டத்து அரசியலை அப்படியே டைரி போல எழுதி வைத்திருந்தார் அந்நூல்தான் "திருநெல்வேலியின் அரசியல் பொது வரலாறு"


தமிழுக்காக வாழ்ந்த கால்டுவெல் நாகர்கோவிலை சேர்ந்த தமிழ்பெண்ணைத்தான் திருமணம் செய்தார், அவர் பெயர் எலிசா. இத்தம்பதிகள் இடையன்குடியில் சுமார் 50 ஆண்டுகாலம் சேவையாற்றி இருக்கின்றன.


அந்த பள்ளி மகா முக்கியமானது, இன்று இடையன் குடி மட்டுமல்ல அப்பகுதி மக்களே ஓரளவு நல்ல கல்வி பெற்றிருப்பதற்கு அப்பள்ளியே அடிப்படை. ஏவிடி நிறுவணர் ஏவி தாம்சன் போன்றோர் உருவாக அப்பள்ளிகொடுத்த கல்வி மகா அடிப்படை.


கால்டுவெல் தமிழுக்கும், தென் பகுதி மக்களுக்கும் செய்திருக்கும் உதவி கொஞ்சமல்ல.


கொஞ்சநாளைக்கு முன்பு நாடார்களை அவர் ஏதோ எழுதிவிட்டார், அதனை பாடமாக்கிவிட்டார்கள் என சசிகலா புஷ்பா வரை குதித்தது நினைவிருக்கலாம்


அக்காலத்தில் புறக்கணிக்கபட்ட தேரிகாட்டிற்கு நாடார்கள் விரட்டபட்டிருந்தனர். நாயக்கர்கள் வளமான பகுதிகளில் ஆட்சி செலுத்த நாடார்கள் ஒதுக்கபட்டிருந்தனர். அவர்கள் விவசாயத்தை விட்டு பனைஏறுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்ட காலம் அது.


அப்பொழுது கண்ட நாடார்களை பற்றி சில குறிப்புகளை எழுதியிருந்தார், அது சிலரால் கொடூரமாக திரிக்கபட்டு பின் விவகாரமாயிற்று.


நாடார் மக்களோடு வாழ்ந்துகொண்டு அப்படி ஒரு வரியினை அவர் எழுதியிருக்க முடியாது, எழுதியிருந்தால் 50 ஆண்டுகாலம் அவரால் அக்கிராமத்தில் வசித்திருக்க முடியாது.


தமிழின் பெருமையினை ஆங்கிலத்தில் நூலாக எழுதி ஐரோப்பாவிற்கு அனுப்பினார், கிளாஸ்கோ பல்கலை கழகம் அவரை கொண்டாடியது, அந்நாளைய சென்னை கவர்னர் நேப்பியர் நேரில் இடையன் குடி சென்று அவரை வாழ்த்தினார்


கிறிஸ்தவம் சம்பந்தமாக பல நூல்களை எழுதினார், அது அவரின் தொழில்முறை எனினும், தமிழுக்காக அவர் தனித்து எழுதிய புத்தகங்களில் அவரின் தமிழ்பற்று தெரிகின்றது


மாந்தரின் தோற்றம் குமரிகண்டத்தில் தொடங்கி வடக்கு நோக்கி சென்றது, சிந்துவெளி மெசபடோமியா என அது வரவிற்று, தமிழர் என்பதே திராவிடர் என திரிந்தது என்றேல்லாம் முதன் முதலில் பதிந்தது கால்டுவெல்தான்


அந்த பாதையில்தான் தமிழரின் தொன்மை பற்றி புதுவேகம் தமிழகத்தில் பிறந்தது, பல தமிழறிஞர்கள் அவர் கருத்தை ஆதரித்தார்கள், "கல்தோன்றி மண்தோன்றா.." போன்ற வசனங்கள் அதன் பின்புதான் தொடங்கின.


அதாவது நாயக்கர் காலத்தில் தமிழ் தன் அடையாளங்களை இழக்க தொடங்கியிருந்தது, கல்வெட்டு தமிழை படிப்பவர் மிக குறைவு, பேச்சு தமிழ் மட்டும் வழக்கில் இருந்தது. பிராமணார் ஆதிக்கத்தில் அவர்கள் சொற்களும் கலந்திருந்தன.


தமிழகம் தன் அடையாளத்தை அறியாமல் தடுமாறியது, நாயக்கர்களும் நல்லாட்சிதான் நடத்தினர், குறை சொல்லமுடியாது, அவர்களின் சமயபணிகளும் நன்றிகுறியது


ஆனால் தமிழின் தொன்மை, அதன் அடையாளங்கள் எல்லாம் மறைந்துகொண்டிருந்தன, அதனை காக்கத்தான் யாருமில்லை


உதாரணம் சொல்லவேண்டுமென்றால் தஞ்சை கோவிலை கட்டியதுயார் என்றே தெரியாது, பின்னாளில் ஒரு ஜெர்மானியன் தான் கல்வெட்டு படித்து அதனை கட்டியது ராஜராஜ சோழன் என சொன்னான்


Image may contain: sky and outdoorஅப்படி கால்டுவெல்லும் பின்னால் வந்து உலகிற்கே மூத்தமொழி தமிழ் என சொல்லி அதற்கு புத்தகமும் எழுதினான்


மார்க்ஸின் புத்தகம் ஐரோப்பாவினை புரட்டியது போல, ஹிட்லரின் மெயின் கேம்ப் ஜெர்மனியினை அதிர செய்தது போல கால்டுவெல்லின் புத்தகமும் ஐரோப்பாவினை அதிர செய்தது


குறிப்பாக அந்த ஒரு வரி, எந்த வரி?


பைபிளை கசடற கற்றவன் கால்டுவெல், அதில் ஆதியாகம் அழகாக சொல்கின்றது, கடவுள் மண்ணில் மனிதனை படைத்து "நீ மண்ணில் இருந்து வந்ததால் மனிதன் எனப்படுவாய்" என்கின்றார்


இன்றும் ஆங்கிலத்தின் மனிதனின் பெயர் மண் என்பதுதான், மன் (men) அல்லது மேன் (Man) என சொல்லிகொள்வார்கள், உச்சரிப்புதான் வேறே தவிர. மணிதன் என்றால் அவர்கள் மொழியில் மண் தான்.


இதனை அழுத்தி சொன்னான் கால்டுவெல், ஆங்கிலத்தில் சாண்ட் என்றால் தமிழில் மண். கடவுள் மனிதனுக்கு மண் என பெயரிட்டார் என்றால் ஆதிகால மொழி தமிழாகவே இருந்திருக்க வேண்டும், அதுவேதான்


சமஸ்கிருதத்தில் அது மனு என்றாகின்றது, மண்ணு என்பதன் திரிபு அது.


ஆக கடவுள் ஆதியாகமத்தில் சொன்னது உண்மையென்றால், ஆதிமனிதனின் மொழி தமிழே, கடவுளே மனிதனை மண் என் அழைத்ததைத்தான், ஆங்கிலத்தில் மன் என அழைக்கின்றோம் என குறிப்பிட்டிருந்தான்


ஆடிபோனது ஐரோப்பா, அதனை அங்கீகரிக்க படித்த அறிஞர்களுக்கு வியர்த்து கொட்டிற்று, இந்த வரிகள் உலகில் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை வெட்டிவிட்டார்கள்


இது கால்டுவெல் சம்பதத்தோடு நடந்ததா, இல்லையா என்பது தெரியவில்லை, இதுவும் பெரும் மூடி மறைக்கபட்ட வரலாற்று மோசடி. வெள்ளையர்கள் அங்கீகரித்த வரலாறு அப்படித்தான்


எப்படி இருந்தாலும் கால்டுவெல் என்பவர் மறக்க கூடியவர் அல்ல, தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு பல தமிழர்கள் ஆற்றிய தொண்டிற்கு சற்றும் குறைந்தது அல்ல.


உவரி கோவிலுக்கு செல்லும் பொழுது அந்த இடையன் குடி ஊரினை கடந்துதான் செல்லவேண்டும், அப்பொழுதெல்லாம் இறங்கி அந்த ஆலயத்தில் அவர் புதைக்கபட்ட அந்த இடத்தில் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு வருவது வழக்கம்


அது கிறிஸ்தவ ஆலயம் என ஒதுக்கிவிட முடியாது, ஒரு மாபெரும் தமிழ்காதலன் உலாவி திரிந்த இடம் அது, அந்த பீடத்தினை கைகளால் தொட்டாலே ஒரு சிலிர்ப்பு ஒட்டிகொள்ளும்


அங்கிருப்பது எல்லாம் 18ம் நூற்றாண்டு பொருட்கள், அழகும் உறுதியும் வாய்ந்த பொக்கிஷங்கள் அவை


அந்த ஆலயத்தை அடுத்துதான் அவன் வாழ்ந்த வீடும் உண்டு, முன்பு குடிசையில்தான் இருந்தாராம் பின் வோட்டு வீடாக மாறிற்றாம்.


அயர்லாந்தின் குளுகுளுவான பகுதியில் வாழ்ந்தவன், இங்கு வந்து இந்த வேகாத வெயிலில் என்னபாடு பட்டிருப்பான்? எப்படி அவனால் முடிந்தது?


அவனின் மனம் அவ்வளவு விசாலமாக இருந்திருக்கின்றது, எந்த சூழலையும் தாங்கும் பக்குவத்தை அது கொடுத்திருக்கின்றது, வெயிலையும் குளிரையும் ஒன்றாகவே கருதியிருக்கின்றான் அந்த உயர்ந்தவன்.


அந்த வீட்டினை அவரின் நினைவு இல்லமாக மாற்றியிருக்கின்றார்கள், அங்கிருந்துதான் அவன் தமிழை ஆராய்ந்திருக்கின்றான், அந்த ஒப்பற்ற நூலை எழுதியிருக்கின்றான் எனும்பொழுது தமிழனாக நன்றி கண்ணீர் கொட்டியது.


இன்று அவருக்கு நினைவு நாள்


கிறிஸ்தவம் என்பது மைக் கட்டிகொண்டு இந்து தெய்வங்களை பழிப்பதோ இல்லை காளகேயர் போல தஸ்தா புஸ்தா என பரலோக பாஷை பேசுவதோ அல்லது டிவியில் கோட் சூட் போட்டு பாட்டுபடிப்பது அல்ல‌


எங்கோ பிறந்து இன்னொரு நாட்டுக்கு வந்து அம்மக்களில் ஒருவனாகமாறி, அம்மக்களின் கலாச்சரத்தில் கலந்து அவர்களோடு வாழ்ந்து மரிப்பது


நல்ல கிறிஸ்தவனான கால்டுவெல் அதனை செய்தார்.


இங்கு அல்லேலூயா என கத்தும் ஒரு கிறிஸ்தவனை ஆப்ரிக்க பின் தங்கிய கிராமத்தில் சென்று, அவர்கள் மொழியினை கற்று, அவர்களுக்கு பள்ளி நடத்தி, அவர்கள் பெண்களில் ஒருவரை மணந்து அவர்களில் ஒருவராக வாழ்கின்றாயா? என கேளுங்கள்


"அப்பாலே போ சாத்தானே, என்னை சோதிக்காதே .." என்பார்கள்.


இவர்களுக்கு தெரிந்த கிறிஸ்துவம் என்ன? யாரையாவது சதா திட்டவேண்டும், யாருக்காவது சாபம் கொடுத்து கொண்டே இருக்கவேண்டும், அதன் பெயர் ஜெபம்


இப்பொழுது வசமாக சிக்கியிருப்பவர் மோடி.


ஏதோ மோடி அவர்கள் ஆலயத்தில் புகுந்து அவர்களி பைபிளை கிழித்து போட்டு, இவர்களை இழுத்து போட்டு சிலுவையால் அடிப்பது போல பலர் பேசிகொண்டிருக்கின்றான்


அவன் மோடியினை பார்க்கவேண்டாம், இந்த கால்டுவெல்லை பார்த்தால் போதும்


தமிழ் , தமிழ் என கத்தி அரசியல் செய்பவர்களும் கால்டுவெல்லை பார்த்தால் பல விஷயங்கள் தோன்றும்


எங்கிருந்தோ வந்து தமிழுக்கு எவ்வளவு காரியங்களை சத்தமின்றி செய்திருக்கின்றான் அவன், இதில் 10ல் ஒரு பங்கேனும் இங்கு இருக்கும் தமிழுணர்வாளர்கள் செய்திருப்பார்களா என்றால் இல்லை.


அந்த மாமனிதனுக்கு இடையன்குடியின் வசித்த தமிழ் இடையனுக்கு ஆழ்ந்த தமிழ் அஞ்சலி.














 




 



Friday, July 21, 2017

உன்னத நடிகனின் நினைவு நாள்...



 Image may contain: 3 people, people smiling, close-up


முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகனின் நினைவு நாள்.


நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார்.


அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு நம் கண்முன் காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது.


எந்த மன்னனும் கொடுக்காத கம்பீரத்தையும் அவன் கொடுத்தான், எந்த மத துறவியும் கொடுக்காத சாந்தமான பாத்திரத்திலும் அவன் ஜொலித்தான், எல்லா மத துறவியாக அப்படியே பொருந்தினான்


கொடும் தீவிரவாதி முதல் கடமை தவறா காவல்துறை அதிகாரி வேடம் என அசத்தினான். வழக்கறிஞர் பாத்திரத்திற்கு இன்றுவரை பாரிஸ்டர் ரஜினிகாந்த் ஒரு கனவு


அந்த குட்டியானை நடையழகும், சிங்கத்தின் கர்ஜனையுமாய், புலியின் கம்பீரமுமாய் அவர் வலம் வந்த காலங்கள் தமிழ்சினிமாவின் பொற்காலங்கள்


அவராலே தான் சிவபெருமான், கர்ணன்,கட்டபொம்மன் முதல் , முதல் மரியாதை கிராமத்து வெகுளி மனிதர் வரை கண்முன் நிறுத்தபட்டது.


அரசனாக அவர் காட்டிய கம்பீரத்தை அலெக்ஸாண்டராலும் காட்ட முடியாது, மகாகவி காளிதாஸில் அவன் ஆடுமேய்த்த அழகு, ஒரு கோனார் செய்யமுடியாதது, மக்களை பெற்ற மகராசியில் செய்யும் உழவு விவசாயி செய்யமுடியாதது, பிராமண வேடத்தில் அவர் சந்தியா வந்தனம் செய்யும் அழகில் அந்தணர்கள் அவுட்.


இவை எல்லாம் சிறுதுளிதான்.


பாகபிரிவினை படம் வந்தபின் ஒருவிழாவில் பார்த்துவிட்டு வெள்ளையன் சொன்னான், கதைக்கேற்ப ஒரு மாற்றுதிறணாளியினை டைரக்டர் நடிக்க வைத்திருக்கின்றார், அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது.


இந்திய விடுதலை போராட்ட தலைவர்களாக வஉசி பாத்திரத்தினை காணும்பொழுது நாட்டுபற்று மேலோங்கும், அந்த வரலாறு கண்முன் வரும்.


சிந்துநதியின் மிசை நிலவினிலே என அந்த பாரதிபாடலில் வரும் சிவாஜிகணேசனில் மொத்த இந்தியாவையும் காணலாம், இன்றும் பாகிஸ்தானின் சிந்துநதியினை காணும்பொழுதெல்லாம் பாரதியும் கூடவே சிவாஜியும் நினைவுக்கு வராதவன் இந்திய தமிழனாக இருக்க முடியாது.


கொஞ்சம் தன் இமேஜினை காப்பாற்றிகொள்ளும் நடிகனாக, தந்திர நடிகனாக இருந்திருந்தால் இன்று ஆட்சிகட்டில் அவனுக்கு கீழேதான் இருந்திருக்கும்.


ஆனால் நடிப்பிற்கு துரோகம் செய்ய அவன் விரும்பவில்லை, குடிகாரன் முதல் சிகரெட் வரை கையிலேந்தி நடித்தான், பெண் பித்தனாக , கோமாளியாக , இரக்கமில்லாதவானக நடிக்க அவனுக்கு தயக்கமே இல்லை.


காரணம் அது அவன் வணங்கிய தொழில். 


அதுதான் அவனின் திரை பலம் மற்றும் ஒரே அரசியல் பலவீனம்.


திரையினை நிஜமென நம்பிய தமிழகத்தின் சாபக்கேடுதான் அந்த வளர்ப்புமகன் திருமணத்தில் ஓரமாக அவர் நின்றதும் அப்படியே இறந்தும் போனதும், இது தமிழக சிக்கல் விடுங்கள்.


ஆசிய ஆப்ரிக்க படவிழாவில் அவன் கொண்டாடபட்டான், அமெரிக்காவில் ஒருநாள் மேயராக அமரவைக்கபட்டான், சோவியத் யூனியன் அவனை உலகின் மிகசிறந்த கலைஞரில் ஒருவன் என்று கைதட்டி சொன்னது.


அன்றைய உலகின் நடிப்பு சக்கரவர்த்தி மார்லன் பிராண்டோ வாய்விட்டு சொன்னான் "என்னை போல அவன் எளிதாக நடித்துவிடுவானே அன்றி, அவனை போல நடிக்க என்னால் ஒருபோதும் நடிகக்க முடியாது"


அப்படிபட்ட கலைஞனுக்கு மத்திய அரசு பெரும் விருதுகள் ஒன்றையும் அளிக்கவில்லை, ரிக்ஷாகாரன் படத்தில் எம்ஜிஆரின் சிறப்புமிக்க நடிப்பிற்காக ஒரு விருது வழங்கியது, அந்த படத்தினை எத்தனை முறை பார்த்தாலும் ஏன் கொடுத்தார்கள் என இன்றுவரை விளங்காது


உதட்டை சரித்து கொண்டு ஆஆஆ.. என இறுதிவரை முகத்தை மட்டும் காட்டினார் எம்ஜிஆர், மஞ்சுளா வரும் காட்சியில் மட்டும் முகம் மாறிற்று, மற்றபடி அதே ஆஆஆ.. அந்த விருது வழங்கிய அதிகாரிகள் ரசனை அப்படி இருந்திருக்கின்றது


சிவாஜிகணேசனுக்கு அப்படியான விருதுகள் எல்லாம் இல்லை, பின்னாளில் பால்கே விருது வழங்கினார்கள், அது எப்பொழுது பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கிய பின் பிரான்ஸ் தூதரகம் சிரிக்கும் முன் வழங்கினார்கள்,


இது அரசியல், விட்டுவிடுங்கள்


பராசக்தி முதல் முதல்மரியாதை வரை அவர் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. எத்தனை எத்தனை வேடங்கள் எத்தனை அற்புதமான நடிப்பு


ஸ்டைல் எனப்பதும் ஒருவித தனித்துவத்திலும் அவர்தான் முன்னோடி, கவனித்துபார்த்தால் ரஜினி எல்லாம் பிச்சை எடுக்கவேண்டும். ஆலயமணி, திருவிளையாடல், மகாகவி காளிதாஸ் போன்ற படங்களில் நடையிலே பல நடை காட்டியவன்


அட நடை என்ன நடை சிகரெட் குடிப்பதிலே பல ஸ்டைல் காட்டினான், அதுதான் கிளாசிக். அந்த பலவகை வசன உச்சரிப்பிற்கும் அவர்தான் இலக்கணம்.


மிகசிறந்த வில்லன் நடிகரும் கூட, அந்நநாள் எனும் படத்தினை விடுங்கள், பாசமலரிலும், ஆலயமணியிலும் வந்துபோகும் சிலநொடி வில்லத்தனமான முகம் நம்பியார் அப்பட்டமாக தோற்குமிடம்.


இன்று என்னமோ நடிகர் நடிகைகளுக்குள் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜி என என்னவெல்லாமோ சொல்கின்றார்கள், ஆனால் மிக்சிறந்த கெமிஸ்ட்ரி இருந்தது என்றால் அது சிவாஜிக்கும் பத்மினிக்குமான கெமிஸ்ட்ரி. ஹிஸ்டாரிக்கல் கெமிஸ்ட்ரி


இந்த இருவருமே இன்று இல்லை.


மகா திறமையான நடிகன். ஆனால் ஒரு வட்டத்திற்குள் அடைத்துகொண்டது தமிழ் திரையுலகம். அதுதான் இங்குள்ள பெரும் சிக்கல். ரஜினி தவிப்பதும், கமல் கை பிசைவதும் அப்படித்தான். அதாவது உனக்கு இதுதான் பாதை, இப்படித்தான் நீ நடிக்கவேண்டும் இல்லாவிட்டால் அவ்வளவுதான் எனும் மாதிரியான நிலை


அப்படித்தான் உருக்கமான பாத்திரங்களில் நடித்த சிவாஜி பின்னாளில் சிக்கிகொண்டார். இதனை கேரள இயக்குநர் ஒருவன் சொன்னான்


"சிவாஜி எனும் யானையினை பட்டினி போட்டு கொன்ற பாவம் ஒருநாளும் தமிழக திரையுலகினை சும்மா விடாது"


இதனைத்தான் அவன் இறந்த அன்று உலகமே சொல்லிற்று


ஆயிரம் கவிஞர்கள் தமிழில் இருந்தாலும் கம்பனின் இடம் என்றுமே நம்பர் 1. அவனின் வர்ணனைகள் அப்படியானவை, தமிழுக்கோர் அடையாளம் அது, அழகு அது.


அதனால்தான் இன்றுள்ள மூளை கிறுக்குள்ள முன்,பின்,இடை,கடை நவீனத்துவ‌ கவிஞர்களை எல்லாம் நம்மால் கவிஞர்கள் என சொல்லவே முடிவதில்லை, மார்டர் ஆர்ட் எனப்படும் பயித்தியகார ஓவியங்களுக்கும் ரவிவர்மனின், மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியங்களுக்கும் வித்தியாசமில்லையா?


கம்பனின் இடம் அப்படியானது


அப்படி தமிழ்கலைத்தாயின் ஒரே மகன் சிவாஜி கணேசன். அவரின் நினைவுநாளில் அவருக்கு நினைவாஞ்சலி செலுத்தலாம்


அவர் இறந்த அன்று , இறுதி ஊர்வலத்தில் மரத்தில் இருந்து ஒருவன் கத்தினான், "ஒரே ஒரு நடிகன் இருந்தான் அவனும் செத்துவிட்டானே..." என ஒரு திசைபார்க்க கத்திகொண்டிருந்தான்


அவன் கத்திய திசையில் இன்றைய இம்சைகள் எல்லாம் நடந்துகொண்டிருந்தன.


தமிழ் உள்ள காலம் வரை கம்பன் நிற்பது போல, தமிழ்திரை உள்ள காலம் வரை சிவாஜி கணேசன் நிலைத்து நிற்பார் தலைமுறைகளை தாண்டி.


அவரின் கடைசி முத்திரையான தேவர் மகனில் கமலஹாசனின் சட்டையினை இழுத்து கேட்பார் "போறியளா...என் மகன என்கூடவே வச்சிபாக்கணும்கிற ஆச எனக்கு மட்டும் இருக்காதா??..."


அந்த உருக்கத்தில் தந்தை பாசம் அப்படி வழியும்.


அக்காட்சியினை காணும் வெளிநாட்டு வாசி எவனும் தந்தையினை நினைத்து அழாமல் இருக்கமுடியாது,


அதுதான் சிவாஜி நடிப்பின் வெற்றி.


அந்த மாபெரும் கலைஞனுக்கு அவன் நினைவுநாளில் அவனுக்கு கலை அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி.





 


 குறிப்பு :  இது மீள்பதிவுதான் ஆனாலும் நம் பதிவே .