Friday, July 29, 2016

மகிந்த ராசபக்சே

FB_IMG_1469772240484

பொதுவாக யுத்ததில் பெரும் வெற்றி ஒரு ஆட்சியாளரின் மமதையினை அதிகரிக்கும் என்பார்கள், வங்கப்போரின் வெற்றிக்கு பின் இந்திராவின் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன‌

இலங்கையில் ராஜபக்சேவும் அப்படித்தான் இருந்திருக்கின்றார், யாரும் பெறமுடியாதவெற்றி பெற்றாகிவிட்டது, இனி அசைக்க யாருமில்லை என்றளவில் அவரது குடும்பத்தாரின் மோசடிகள் எல்லை மீறி இருக்கின்றன, ஆடிமாத காற்றாக ஆர்பரித்திருக்கின்றார்கள்

ஆனால் அடுத்து வந்த அரசு போட்டு தாக்குகின்றது, குடும்பத்தார் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதியபடுகின்றன, உச்சமாக அவரின் மகன் கைதுசெய்யபடும் சூழல் உருவாகியுள்ள்ளது.

நமக்கு தெரியும், ராஜபக்சேவினை தமிழக மூலை முடுக்களில் எல்லாம் தெரியசெய்தவர்கள் வைகோசீமானியர், ம்ம்மேஏஏ என கத்தும் ஆட்டு மந்தை என பலர். அவர்கள்தான் தமிழகத்தில் ராஜபக்சேவினை பிரபலபடுத்தியவர்கள்

அடிக்கடி ராஜபக்சே தண்டிக்கபடவேண்டும் என சீறுவார்கள், இப்பொழுது சத்தம் குறைவு

சரி ராஜபக்சே என்ன செய்கிறார், அவருக்கு இன்னமும் வலுவான மக்கள் பலம் உள்ளது, தமிழர் மத்தியிலும் அவருக்கு பெரும் ஆதரவு உண்டு, அவரோ தண்டி யாத்திரை செல்கிறார், கண்டி முதல் கொழும்பு வரை வைகோ ஸ்டைலில் நடைபயணம்

அது இலங்கை ஸ்டைல், சிங்கள பாணி. ஏதும் சிங்கள மக்களை திரட்டவேண்டுமென்றால் அங்கே இப்படித்தான் கிளம்புவார்கள், முன்பு ஜெயவர்த்தனே கடைபிடித்தார்.

ஆக அவர் ஒருசிக்கலும் இன்றி அட்டகாசமாக அரசியல் செய்கிறார், வைகோவின் ராஜ தந்திரம் வென்று அவரும் செட்டிலாகிவிட்டது, சீமானும் இயற்கை விவசாயம் செய்ய கலப்பை பிடித்தாகிவிட்டது

நமது சந்தேகம் எல்லாம் ராஜபக்சே தண்டிக்கபடவேண்டும் என சீறியவர்கள், ராஜபக்சே குடும்பத்தார் போல தமிழக ஊழல் வாதிகளும் தண்டிக்கபடவேண்டும் என என்றாவது கேட்டதுண்டா? நிச்சயம் மாட்டார்கள்

லைக்கா எனும் நிறுவணத்திற்காக விஜயின் கத்தி படத்தினை கத்தி கத்தி தடுத்த தமிழர் அமைப்புகளையும் காணவில்லை, இனி அந்த லைக்கா அதிபர் சுபாஷ்கரன் சென்னை வந்து ரஜினியோடு அடிக்கடி போஸ் கொடுப்பார், எந்திரன் 2.0 எனும் அடுத்த நாடக தயாரிப்பாளர் அவரே.

ஒரு சத்தம் வந்தது அல்லது வரும், வராது. அதே சுபாஸ்கரன் தான் ராஜபக்சேயோடு கைகுலுக்கிய அவரே தான். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ரஜினியினை சீண்டும் நாம் தமிழர் மந்தை கூட இதனை சொல்லாது, காரணம் தலைவர் அங்கிள் சைமன் லைக்கா என்றால் மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கின்றார்.

காரணம் ராஜபக்சே சுபாஷ்கர வியாபார உறவு அப்படி, அதனால் வியாபாரியான அங்கிளும் கப்சிப்

சொல்லமுடியாது இனி லைக்கா வெற்றிவிழாவிற்கு ராஜபக்சே சிறப்பு விருந்தினராக வந்தாலும் சத்தமிருக்காது

No comments:

Post a Comment