Thursday, July 28, 2016

ரஜினி : அவர் அவராகவே இருப்பார்

ரஜினியின் சில தந்திரங்கள் மகத்தானவை, எந்த முத்திரையும் தன் மீது படியாமல் பார்த்துகொள்வதில் அவருக்கு அவ்வளவு அக்கறை. அப்படித்தான் கலைஞரை வாழ்த்துவார், கலைஞரை பாராட்டுவார், இளங்கோவனுடன் டீ குடிப்பார், மோடிபுடன் யோகா செய்வார்

இப்படி எல்லாவற்றிலும் மகா கவனமாக இருக்கும் ரஜினி, தனக்கு தலித் அனுதாபி எனும் ஒரு முத்திரை கபாலியோடு கபாலத்தில் குத்தபடுமோ என உணர்ந்து அவசரமாக சோ ராமசாமியினை கபாலி பார்க்க அழைத்திருக்கின்றார்

இதுவரை எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்த ரஜினி என்றாவது இப்படி பெரும்பிரமுகர்களை ஸ்பெஷல் ஷோவிற்கு அழைத்திருக்கின்றாரா என்றால் அழைத்திருக்கின்றார், அப்பொழுதெல்லாம் டைரக்டரும் அருகில் இருப்பார்.


ஆனால் சோவினை அழைத்தது இதுதான் முதல் முறை, இன்னொரு முக்கிய‌ விஷயம் இயக்குநர் ரஞ்சித் அழைக்கபடவில்லை, ஒருவேளை அழைக்கபட்டிருந்தால் சோ அருகே ரஞ்சித் அமர்ந்து படம் வெளிவந்திருந்தால்? நிச்சயம் அழிச்சாட்டியம் தாங்காது

இன்னொன்று சோ ரஜினி படங்களும் காட்சிகளும் இணையமெங்கும் வலம் வருகின்றன அல்லது வர வைக்கபடுகின்றன‌

சோ வினை பற்றி தெரியுமல்லவா? அவரை அழைத்தால் மொத்த பிராமண சமூகத்தையும் அழைத்ததற்கு சமம். ஆக ரஜினி எதனையோ சொல்ல வருகின்றார், கலைஞரை அடிக்கடி சீண்டும் சோ வும் கலைஞர் போலவே வீல் சேரில் வந்திருக்கின்றார் என்பது ஒரு வகை மேட்சிங், இருவருமே வில்லாதி வில்லன்கள்

பொதுவாக சோ வின் பார்வை வித்தியாசனாமது, அவரது ஈழக்கோணம் சரி, புலிகளை குறித்து முதன் முதலில் 1986களில் தமிழகத்தில் எச்சரித்த ஒரே நபர் அவர்தான், பின்னாளில் அது மிக சரி என புலிகளே காட்டினர்.

இனி கபாலி பற்றி என்ன எழுதி மலேசிய தமிழர்கள் நிலை பற்றி சொல்லபோகின்றாரோ தெரியவில்லை பார்க்கலாம்.

மொத்தத்தில் ரஜினி யார் மூலமாக தன் தலித் அரசியல் முத்திரையினை நீக்க முயல்கின்றார் என உலகம் கண்டுகொண்டிருக்கின்றது, இதுதான் ரஜினி, மனிதர் மிக சிறந்த நடிகர் மட்டுமல்ல, சில விஷயங்களில் இப்படியான ரசிக்கதக்க வில்லனும் கூட‌

ரஜினிக்கென்ன, நாளையே அறிவிப்பு கொடுத்தால் போயஸ் கார்டன் முழுக்க இயக்குநராக குவிவார்கள், ஒரு படத்தில் ஜமீந்தாராக வந்து ஏழைகளுக்கு சொத்து எழுதி வைத்தால் முடிந்தது பிரச்சினை, டக்கென்று எழும்பி விடுவார்

அந்த வேகம் தான் ரஜினி, அவர் அவராகவே இருப்பார்.

ஆனால் ரஞ்சித் அப்படி அல்ல, இன்னொரு நெருப்பாற்றினை நீந்தி கடக்கவேண்டும். அதில் அவரோ அல்லது அவரின் தனிதன்மையோ காணாமல் போகலாம்

No comments:

Post a Comment