Tuesday, July 5, 2016

மோடி அரசு: ஒரு அலசல்

வைகோவின் இமேஜ் போல கச்சா எண்ணெய் விலை சரிந்து கிடந்தாலும் மானியங்களை குறைப்பது, எரிபொருள் விலையினை குறைக்காதது என சர்ச்சைகள் ஒருபுறம்.

ரிசர்வ் வங்கி கவர்ணருடன் பனிப்போர் இன்னொருபுறம்.

உலகெல்லாம் சுற்றிவிட்டு, பாதுகாப்பு துறையிலும் அந்நிய முதலீடு என சொல்ல அவசியமே இல்லை. இருந்த இடத்தில் இருந்துகொண்டு சொன்னால் உலகமே ஓடிவந்திருக்கும் என தெரிந்தும் வெட்டியாக ஊர் சுற்றியது ஒருபுறம்.

பராகாசுர அணுவுலை நாடுகளை தேடிசென்று அழைக்க என்ன இருக்கின்றது, கதவை திறந்தால் வாசலில் நிற்கபோகின்றார்கள், இதற்கு ஏன் உலகம் சுற்றவேண்டும்.

வங்கி அலுவலர்களே வசதியானவன் வீட்டிற்கு வந்து தவம் கிடக்கும் காலமிது, அணுவுலை வியாபாரிகள் சும்மா இருப்பார்களா? அவர்கள் நாட்டிற்கு சென்றுதான் அழைக்கவேண்டுமா? எல்லாம் சுத்த ஹம்பக்.

பஞ்சாயத்து அமைப்புக்களை ஒழிக்கும் முயற்சியும், நாட்டின் அமைதிக்கு பெரும் ஆபத்தான பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி என பல செய்யகூடாத செயல்களில் இந்த அரசு இறங்குவது நல்லதல்ல‌

யோகா, சமஸ்கிருதம், ஆலயங்களில் ஆகம விதி , சபரிமலை பாரம்பரியம் தொடரும் என சொல்லிவிட்டு பொதுசிவில் சட்டம் என்றால் அது ஏற்றுகொள்ள கூடியதா? நகைப்புகுரியது இல்லையா?

உள்ளாட்சி மன்றங்களை முறிக்கும் அவசியம் என்ன? அப்படி என்ன நடந்துவிட்டது? சொல்ல தெரியாது.

மோடி திறமையானவரார் என நம்பவைக்கபடலாம், ஆனால் ஒரே ஒரு திறமையான மனிதன் மட்டும் இருந்தால் ஒன்றும் ஆகாது, சமீபத்திய மெஸ்ஸி பெரும் உதாரணம், நல்ல வீரர்தான் ஆனால் அவர் மட்டும் கோல் அடிக்க முடியாதல்லவா, உப வீரர்கள் மகா முக்கியம்.

அப்படி மோடி ஏதோ செய்தாலும், அவரை தவிர அவரின் அமைச்சரவையில் சொல்லிகொள்ளும் நபர்கள் அருண் ஜெட்லி தவிர சொல்லிக்கொள்ள யாருமில்லை, அவரும் பல நேரம் வருணன், லட்சுமி, குபேரன் என்றுதான் புலம்புகின்றார். கல்வி அமைச்சரின் சில ட்வீட்டர் ஸ்டேட்மென்டுகள் குபீர் ரகம்.

ஒரு அமைச்சர்களும் , கட்சி பிரமுகர்களும் சொல்லிகொள்ளும்படி இல்லாமல் மோடி எனும் பிம்பத்தை மட்டும் வைத்து செய்யபடும் அரசியல் இப்படித்தான் இருக்கும்.

பாதுகாப்பு துறையில் 100% அந்நிய முதலீடும், உள்ளாட்சி அமைப்புகள் கலைப்பும், பொது சிவில் சட்ட சர்ச்சையும் இப்போதைக்கு இந்த நாட்டிற்கு உகந்தவை அல்ல.

பெரும் குழப்பத்தினை நோக்கி இந்த நாட்டை நடத்துகின்றார்கள்.

No comments:

Post a Comment